அதிஷ்டம் தரும் பெருமாள் மந்திரம்

நாம் வாழ்வில் என்னதான் கடினமாக உழைத்தாலும், நற்பண்புகளோடு வாழ்ந்தாலும் சில சமயம் நமக்கு நியாமாக நமக்கு கிடைக்க வேண்டிய நற்பலன்கள் கிடைக்காமல் போய் விடுகிறது. ஆனால் தகுதியே இல்லாதவர்களுக்கு நன்மைகள் பல நடக்கிறது. இதற்கு நம்முடைய அதிர்ஷ்டமின்மையே காரணம். இந்த அதிர்ஷ்டமில்லா நிலையைப் போக்கும் மந்திரம் தான் இது.

மந்திரம்:

ஓம் நமோ வெங்கடேசாய

காமித்தார்த்த ப்ரதாயிநே

பிரணதஹ் கிலேச நாசாய

கோவிந்தாய நமோ நமஹ

இம்மந்திரத்தை வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்குச் சென்று நெய்விளக்கு ஏற்றி, மல்லிப்பூ சாற்றி, 108 முறை ஜெபித்து வழிபட்டு வர வேண்டும். உங்கள் வீட்டிலிருந்தபடியே செய்வதாக இருந்தால் பெருமாள் படத்திற்கு நெய்விளக்கு ஏற்றி, பால், கற்கண்டு நிவேதனம் வைத்து 108 முறை ஜெபித்து வழிபட வேண்டும். ஏகாதசி மற்றும் வெள்ளிக்கிழமை சேர்ந்து வரும் நாட்களில் இந்த மந்திரத்தை கூறுவது மேலும் சிறப்பு சேர்க்கும். இதன் மூலம் உங்கள் அதிர்ஷ்டமில்லா நிலை நீங்கி உங்களுக்கு.நியாயமாக கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்கும்,செல்வம் பெருகும்

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!