வணக்கம்!
ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்போ என்னும் இந்த இணையதளம் அளவில்லா ஆர்வத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் உருவாக்கி இருக்கின்றோம். மற்றும் இதில் உள்ள பதிவுகளை மிகுந்த கவனத்துடன் உங்களுக்கு வழங்குகிறோம். இந்த வெளியீட்டிற்கு பின்னணியாக இருந்த சில விவரங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
இந்த தளத்தின் நோக்கம் என்னவென்றால் ஸ்ரீமன் நாராயணனின் அற்புத கதைகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டது மனித வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி இருக்கும் இது மனித வாழ்க்கையின் இயல்பு ஆனாலும் நம் இந்து தர்மம் என்று நிறைய கொள்கை முறைகள் கோட்பாடுகள் இவையெல்லாம் உள்ளன அவையெல்லாம் பின்பற்றி புண்ணியங்களை சேர்க்க இந்த பிளாக் உதவியாக இருக்கும் முந்தையக் காலங்களில் நம் முன்னோர்கள் எவையெல்லாம் செய்யலாம் எதையெல்லாம் செய்யக்கூடாது என்றெல்லாம் அறிவுரைகள் வழங்கி வந்தனர் நாம் அதை எல்லாம் பின்பற்றி வந்தோம் ஆனால் காலப்போக்கில் தனி குடுத்தனம் ஆக மாறி விட்டார்கள் அதனால் இவை எல்லாம் நம் வாழ்க்கையில் செய்யலாம் செய்யக்கூடாது என்றெல்லாம் பெரும்பாலும் நமக்கு தெரிவதில்லை வாழ்க்கை முறைகள் வழிபாட்டு முறைகள் இவையெல்லாம் நம் ஸ்ரீ மகாவிஷ்ணு இன்ஃபோ தளத்தில் பதிவு செய்யப்படும் வாழ்க்கை முறைகள் அனைத்தும் அனைவரும் தெரிந்து கொள்ள அதுவே இணையத்தின் மூலமாக உங்களுடன் பகிரவும் என்னை தூண்டியது.
கடல் போல் பரந்து விரிந்து இருக்கும் நம் ஆலயங்களைப் பற்றிய தகவல்களிலும் செய்திகளிலும் இருந்து ஒரு சில துளிகளையாவது வாசகர்களாகிய உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பதுதான் இந்த ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்போ; இணையதளத்தின் நோக்கம் ஆகும். இந்த இணையதளத்தின் பதிவுகளைப் படித்து மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்
முதன் முதலில் இந்த வைணவ தகவல்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று என் (ஹரி) மனதில் தோன்றியது அப்போது என் தோழியிடம் இது பற்றி கூறினேன் அவரும் செய்யலாம் என்று சொன்னார் நானும் என் தோழியும் சேர்ந்து முதன் முதலில் ஒரு வாட்ஸ் அப் குழு தொடங்கி விஷ்ணுவை பற்றிய தகவல்களை பதிவிட்டு வந்தோம் அதை படிப்படியாக உயர்த்தி இப்போது 100 வாட்ஸ்அப் குழுக்கள் முகநூலில் 5000 அதிகமான பின் தொடர்பவர்கள் இன்ஸ்டாகிராமில் 2000 அதிகமான பின் தொடர்பவர்கள் மற்றும் நமது யூடியூப் சேனலில் 16,000 அதிகமான சப்ஸ்கிரைபர் உள்ளனர் இது தவிர ஆங்கில மொழியிலும், கன்னட மொழியிலும் குழுக்கள் என்று அனைத்திலும் பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன விரைவில் மற்ற மொழிகளிலும் வாட்ஸ் அப் குழு தொடங்கப்படும்.
நம்முடன் இணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வரும் நபர்களையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்
நம்முடைய sri mahavishnu info யூடியூப் சேனலில் பதிவு செய்யப்படும் வீடியோவில் உள்ள குரல் அனுப்பும் திருமதி ரேவதி ஜெயராமன் மலேசியா அவர்களுடைய சேவையும் மிகப் பெரியது அவருக்கு நம்முடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும்,
நம்முடைய ஹிந்தி குழுவின் மொழிபெயர்ப்பு ரேவதி சென்னை அவர்களின் சேவையும் மிகவும் பாராட்டுக்குரியது. அடுத்து ஆலோசனை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு மேகஅகிலா, தருமபுரி.
நன்றி!
ஓம் நமோ நாராயணாய