Sri Mahavishnu Info: சனிக்கிழமை ஏன் பெருமாளுக்கு உகந்த நாளாக மாறியது சனிக்கிழமை ஏன் பெருமாளுக்கு உகந்த நாளாக மாறியது
```
📿 வைணவ அடிப்படைகள் • 🛕 108 திவ்யதேசங்கள் • 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் • 🎧 தினசரி ஸ்லோகங்கள் • 📅 இன்றைய வைபவம் • 🙏 தினசரி பக்தி வழிகாட்டி • ❓ பக்தி கேள்வி & பதில்கள் • 📖 ஆன்மீக நூல்கள் • 🧒 குழந்தைகள் பக்தி பகுதி • 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை • 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் • 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் • 🌺 திருப்பாவை • 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் • 🛕 திருத்தல தரிசனம் • 🔔 கோவில் விழாக்கள் • 📜 பக்தர் அனுபவங்கள் • ✨ அற்புத நிகழ்வுகள் • 🕉️ நாமஸ்மரணையின் மகிமை • 📚 பக்தி குறிப்புகள் • 🌸 ஆழ்வார்கள் வரலாறு • 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் • 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ • 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி • 🌟 புதிய பக்தி பதிவுகள்

சனிக்கிழமை ஏன் பெருமாளுக்கு உகந்த நாளாக மாறியது

Sri Mahavishnu Info

மண்ணையும் விண்ணையும் அளந்த பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை விளங்குகிறது. 

புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் எம்பெருமானுக்கு உகந்த நாள்தான். 

வேண்டிய வரம் பெற திரு வேங்கடவனை நினைத்து திருவோண விரதமாக இருக்க நல்ல நாளாக சனிக் கிழமையைச் சொல்லலாம். 

ஏழரைச் சனியால் பாதிக்கப் பட்டிருப்பவர்கள் அதிலிருந்து விடுபட ஒரே வழி எம்பெருமானை சரணடைவதுதான் ஒரே வழி. 

சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்கிறோம். 

இவர் சூரியன் மற்றும் சாயாதேவியின் புதல்வர். 

புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சனீஸ்வரன் பிறந்தார். 

நவக்கிரகங்களின் சனிபகவான் ஆதிக்கத்தைப் பொறுத்தே ஒருவனது ஆயுட்காலம் அமைகிறது. 

சனியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் பெருமாளே சனிக்கு அதிபதியாக இருக்கிறார்.

ஒருமுறை சனிபகவான் கலியுகத்துக்கு முதன் முதலாக வருவதற்கு ஆயுத்தமானார்.

அப்போது எதிர்ப்பட்ட நாரதரைச் சந்தித்தார். 

அப்போது தான் கலியுகத்துக்கு செல்வதாக கூற .. 

அப்படியானால் சரி ஆனால் நீங்கள் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று யாரை வேண்டுமானாலும் துன்புறுத்தலாம். 

ஆனால் தப்பி தவறி கூட திருமலை பக்கம் சென்றுவிடாதீர்கள். 

ஏன் உங்கள் பார்வை கூட அங்கு படாமல் இருப்பதே நல்லது என்று மறைமுகமாக வழக்கத்துக்கே உரிய தம் கலக பாணியில் தெரிவித்தார் நாரதர். 

என்ன செய்ய வேண்டும் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்று சொல்லும்போது தான் கவனம் அவற்றில் போகும். 

குழந்தைகளும் இதைத்தான் விரும்புவார்கள். 

சனிபகவான் மட்டும் விதிவிலக்கா என்ன !!

நான் சனிபகவான்.. நான் பிடித்தால் யாராக இருந்தாலும் எனக்கு கட்டுப்பட வேண்டியதுதான் என்று, திருமலையில் பாதம் பதித்த அடுத்த நொடியில் தூக்கியெறியப்பட்டார். 

மற்றவரை துன்பப்படுத்தி இன்பம் காணும் உனக்கு திருமலையில் இருப்பது யார் என்று தெரிந்தும் உன் திரு விளையாடலை என்னிடம் காட்டுகிறாயா என்றார் திருவேங்கடவன் ?  

கோபாக்னி கொண்ட திரு வேங்கடவனைக் கண்டு நடுங்கினார் சனிபகவான். 

எல்லோரையும் துன்பப்படுத்தி மகிழும் என்னையும் வழி நடத்தும் பரம்பொருளே !!!
 
என்னை மன்னித்தருளும் என்று அவர் பாதம் பிடித்து மன்னிப்பு கேட்டார் !!!

பிறகு சாந்தமான கருணாமூர்த்தி
என்னை நினைத்து வாழும் பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கினார் பரம்பொருள். 

அப்போது சனி பகவானின் விருப்பத்துக் கிணங்க அவர் பிறந்த தினமான சனிக்கிழமையன்று பெருமாளை வழிபட்டால் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டார் திருவேங்கடவன். 

அன்று முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக ஆயிற்று.

பக்தர்களின் வேண்டுதல் செல்வம், ஆயுள், ஆரோக்யம் இவற்றை முன்னிறுத்திதானே. 

இவை அனைத்தும் குறைவின்றி கிடைக்க ஒவ்வொரு சனிக்கிழமையும் சங்கடத்திலிருந்து காக்கும் திரு வேங்கடவனை வழிபடுவோம். 

சனியின் உக்கிர பார்வையைத் தணித்து நம்மைக் காக்கத்தான் திரு வேங்கடவன் கலியுகத்தில் குடி கொண்டு இருக்கிறாரே !
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

❝ இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

❝ இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

❝ இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

❝ என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

❝ நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

❝ இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

❝ இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

❝ தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

❝ ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

❝ மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

❝ கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

❝ ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏
Donate Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚