Sri Mahavishnu Info: பெருமாள் கோவிலில் இதை கவனித்தது உண்டா ? பெருமாள் கோவிலில் இதை கவனித்தது உண்டா ?
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

பெருமாள் கோவிலில் இதை கவனித்தது உண்டா ?

Sri Mahavishnu Info
பெரும்பாலான நேரங்களில் நாம் கோவிலுக்குப் போனாலும்,சில விஷயங்களை வெறும் சடங்குகளாகவே செய்வோம். அதன் பொருள் என்ன...ஏன் செய்கிறோம், அதன் பின்னால் இருக்கக்கூடிய தாத்பரியம் என்ன என்பதை நாம் எண்ணிப் பார்த்திருப்போமா....?

அப்படியான ஒரு விஷயம் தான்,பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு அளிக்கப்படும் சடாரி சேவையும். பகாவனை கண்குளிர சேவித்துதீபாரதனை முடித்து ,துளசி தீர்த்தம் ஆனப் பிறகு, நம் தலைமீது சடாரி வைக்கப்படுகிறது. சடாரி என்பது என்ன.. அது ஏன்  நம் தலை மீது வைக்கப்படுகிறது?  அதன் தாத்பரியம் என்ன? நாம் வழிபடும் ஒரு பொருளின் மகத்துவத்தைப் பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டாமா?

அடுத்த முறை வைணவக் கோயில்களுக்கு போகும் போது,தலையில் சாற்றப்படும் சடாரி என்ற மகுடத்தின் மேல் இரண்டு பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருப்பதை கவனித்துப் பாருங்கள். திருமுடியின் மேல் திருவடி இருப்பதை பார்க்க முடியும்.இதற்குப் பின்னால் இருக்கும் புராணக் கதையை தெரிந்துக் கொள்வோம்.

ஒருமுறைவைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமாகும் நேரம். தன்னுடைய சங்குசக்கரம்திருமுடி ஆகியவற்றை எடுத்துஆதிசேஷன் மீது வைத்தார். திடீரென தன்னை தரிசிக்க வந்த முனிவர்களின்  குரல் கேட்டுபாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்ற பரந்தாமன்வழக்கத்துக்கு மாறாக தன் பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டுவிட்டார்.

ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக சங்கும்சக்கரமும்கிரீடமும் அமர்ந்திருந்தன. ஆனால்அருகிலேயே பாதுகைகளும் இருந்தது அவற்றுக்குப் பிடிக்கவில்லை.சங்கும் சக்கரமும் பாதுகைகளைப் பார்த்து, "கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில்தூசியிலே புரளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்?" என்று கேட்டன."இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்" என்றன பாதுகைகள்.

பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும்சக்கரமும்! ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு. பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை.

உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள் என்றுகோபத்துடன் சொன்னது கிரீடம். இதுவரை பொறுமையாக இருந்த பாதுகைகள்கிரீடம் இப்படிச் சொன்னதும் கோபத்துடன்

"நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவர்கள்தான்.ஆனால்கேவலமானவர்கள் அல்ல. மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்களே தவிரஉங்களைத் தழுவித் தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள் தான்" என்று பதிலுக்கு பாதுகைகள் வாதிட்டன .

 

கிரீடத்துடன்சங்கும்சக்கரமும் கூட்டணி அமைத்துக் கொண்டதால்தனித்து நின்ற பாதுகைகளால்ஏளனப் பேச்சைத் தாங்கிக்கொள்ளமுடியாமல்,பகவானிடம் முறையிட காத்து நின்றன.பகவானும் வந்தார். அவர் பாதத்தை கண்ணீரால் கழுவி பாதுகைகள் முறையிட்டன. "இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சன்னதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல்கிரீடமும் சங்கும் சக்கரமும் கர்வம் கொண்டுபுனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட ஸ்ரீராமாவதாரம் நிகழும்போதுசக்கரமும் சங்கும் என சகோதரர்களாக பரதன்சத்ருக்னன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள்.

அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும் போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்துசங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது" என்றார் பகவான்.

 

சடாரியை நம் தலையில் வைத்துக்கொள்ளும் போது நம்முடைய 'நான்என்ற ஆணவம்அகங்காரம் அழியவேண்டும். வைணவக் கோயில்களில் பெருமாளை சேவித்த பிறகு சடாரி சாதித்தலின் அடிப்படை பொருள் இதுவே.

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏 DONATE Support Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚