Sri Mahavishnu Info: உணவு பழக்கம் எப்படி இருக்க வேண்டும் - விதுர நீதி - 17 உணவு பழக்கம் எப்படி இருக்க வேண்டும் - விதுர நீதி - 17
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

உணவு பழக்கம் எப்படி இருக்க வேண்டும் - விதுர நீதி - 17

Sri Mahavishnu Info
விதுரர் திருதராஷ்டிரன் மற்றும் பாண்டு விற்கு தம்பி ஆவார். அவர் திருதராஷ்டிரனுக்கு உபதேசித்தது  விதுரநீதி ஆகும்.  இந்த நீதியில் அரிய பல விஷயங்கள் கூறப் பட்டுள்ளன.  நாம் ஒவ்வொரு நீதியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  அடுத்து உணவுப் பழக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  அதைப் பற்றி நாம் இப்போது காண்போம்.

சத்துவகுணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் ஆகிய மூன்று குணங்களில் ஒரு குணம் ஒருவனுக்கு அதிகமாக இருக்கும். இந்த மூன்று குணங்களில் சத்துவ குணமே நல்ல குணமாகும்.  ரஜோ குணம் உள்ளவன் கோபக்காரனாகவும்  தமோ குணம் உள்ளவன் மந்த புத்தி உள்ளவனாகவும் இருப்பான்.   

சத்துவ குணம் வளர பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று உணவுப் பழக்கம் ஆகும். 

முதலில் நாம் சாப்பிடுவதால் ஏற்படும் பின்விளைவுகளை நினைத்து சாப்பிட வேண்டும். எப்படி தூண்டிலில் உள்ள தீனியை நினைக்காத மீனும் பொறியில் உள்ள உணவைப் பற்றி நினைக்காத எலியும் மாட்டிக் கொள்ளுமோ அவ்வாறு பார்த்தது எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு மாட்டிக் கொள்ளக் கூடாது. எது செரிக்குமோ அதைத்தான்  சாப்பிட வேண்டும்.  அவ்வாறு செரித்தாலும்  எது உடம்புக்கு ஆரோக்கியம்  கொடுக்குமோ அதைத்தான் சாப்பிட வேண்டும்.  சாப்பிட சுவையாக இருக்கின்றது என்று எண்ணி சாப்பிட்டு  விட்டு அது உடம்புக்கு கெடுதல் செய்யுமானால் அதை சாப்பிடக் கூடாது. 

பகவானுக்கு நைவேத்தியம் செய்து விட்டுத்தான் நாம் சாப்பிட வேண்டும்.  அப்போது தான் நமக்கு சத்துவ குணம் வளரும். குளிக்காமலும்  பெருமானுக்கு நிவேதனம் செய்யாமலும் சாப்பிடக் கூடாது.  (ஆனால் இவ்வாறு பிற இடத்தில் செய்யப் பட்ட உணவுப் பற்றி தெரியாததால் [சமைக்கும்போது உள்ள குணம், பெருமானுக்கு நிவேதனம் செய்ததா இல்லையா என்பது பற்றி ] ) சாப்பிட தவிர்ப்பவர்களைப்  பற்றி ஒரு சாரர் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்.

அடுத்து அதிக காரம், சூடு, உப்பு, கார்ப்பு கொண்ட உணவுகளை சாப்பிடக் கூடாது. இவ்வாறு சாப்பிட்டால் நமக்கு ரஜோ குணம் தான் வளரும். அடுத்து  மிச்சத்தை சாப்பிடக் கூடாது. எச்சில் படாத உணவைத் தான் சாப்பிட வேண்டும்.  அவ்வாறு  சாப்பிட்டால் நமக்கு தமோ குணமே வளரும்.

அடுத்து  எத்தனை வேளை சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி. இரண்டு வேளை சாப்பிடுபவன் போகி. மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி.  அதற்கு மேல் அதாவது நான்கு, ஐந்து வேளைகளைப்  பற்றி அவர் கூறவில்லை.  அவ்வாறு சாப்பிடுவோம் என்று நினைக்க வில்லை போலும். 

சத்துவ குணம் இருந்தால்தான் பகவானைப் பற்றி சிந்தனை வரும். இல்லை என்றால் சிந்தனையே வராது.  இவ்வாறு சத்துவ குணம் வளர சாப்பிட வேண்டிய உணவுப் பழக்கத்தைப் பற்றி விதுர நீதியில் கூறியுள்ளார்.   அடுத்து வரும் நீதியில் என்ன சொன்னார் என்று அடுத்த அத்தியாத்தில் காண்போம்.
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚