Sri Mahavishnu Info: சுயமரியாதையின் முக்கியத்துவம் என்ன? சுயமரியாதையின் முக்கியத்துவம் என்ன?
```
📿 வைணவ அடிப்படைகள் • 🛕 108 திவ்யதேசங்கள் • 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் • 🎧 தினசரி ஸ்லோகங்கள் • 📅 இன்றைய வைபவம் • 🙏 தினசரி பக்தி வழிகாட்டி • ❓ பக்தி கேள்வி & பதில்கள் • 📖 ஆன்மீக நூல்கள் • 🧒 குழந்தைகள் பக்தி பகுதி • 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை • 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் • 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் • 🌺 திருப்பாவை • 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் • 🛕 திருத்தல தரிசனம் • 🔔 கோவில் விழாக்கள் • 📜 பக்தர் அனுபவங்கள் • ✨ அற்புத நிகழ்வுகள் • 🕉️ நாமஸ்மரணையின் மகிமை • 📚 பக்தி குறிப்புகள் • 🌸 ஆழ்வார்கள் வரலாறு • 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் • 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ • 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி • 🌟 புதிய பக்தி பதிவுகள்

சுயமரியாதையின் முக்கியத்துவம் என்ன?

Sri Mahavishnu Info

"எது மரியாதை? எது சுய மரியாதை?

"நமது அன்றாட வாழ்வில் ‘மரியாதையாகப் பேசு’ ‘மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு’ போன்ற சொற்களை கேட்டு இருக்கிறோம். 

மரியாதை என்றால் என்ன? 

நம்முடைய நற்குணங்கள்/நற்செயல்கள்/ நன்னடத்தை சமுதாயத்தில் நமக்குதேடித்தரும் நன்மதிப்புதான் மரியாதை.பணம், பதவியினால் வரும் மதிப்பு நிலையானதன்று; 

காரணம் பணமும், பதவியும் நம்மை விட்டுச்செல்லும் போது, மதிப்பும், மரியாதையும் நம்மை விட்டுச்சென்று விடும்.

உடல்நலம்குன்றி ஒருவர் ஓய்வு எடுக்கும்போது, நாம் அவரைச்சந்தித்து நலம் விசாரிப்பது மனிதநேயம்,மனிதப்பண்பாடு அதுதான். அதேநேரம் செல்வ,செல்வாக்கு,உடையவரை சிலர் சந்திப்பதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். இப்படி சாதாரண மனிதரை யாரும் சந்திப்பதில்லையே ஏன்? எண்ணிப்பார்க்க வேண்டும். பணம் , பதவி படைத்தோரை மரியாதை நிமித்தம் என்று சந்திப்பதில் ஒரு சுயநலம் இருக்கிறது. இன்று வணக்கம் போட்டு வைத்தால், நாளை பயன்படும் என்னும் நினைப்பில் தன்னலம்தானே இருக்கிறது? இது நமக்கு சுயமரியாதை இல்லை.

நாம் ஒருவரை இயல்பாகச் சந்திக்கும் போது வணக்கம் செலுத்துவதில் தவறில்லை. ஆனால் வணக்கம் செலுத்துவதற்காகவே, வலியச்சென்று சந்திப்பது சரியன்று. நாம் ஒருவருக்கு அதிக மரியாதை கொடுத்து நமது'சுயமரியாதை'யைக் காயப்படுத்தி விடக்கூடாது. நாட்டில் தாங்களே பெரியவர்களென்று சிலர் இருக்கிறார்கள். அவர்களைச் சந்திக்கச் செல்பவர்களை, நாற்காலியில் அமரச்செய்து பேசமாட்டார்கள். ஆனால் சுய மரியாதை உணர்வுடன் ஒரு சிலர் துணிந்து அவர்களாகவே அமர்ந்து விடுவார்கள். அப்போது அந்த பெரியவர்களின் கண்களில் தீப்பொறி பறப்பதை காணலாம்.நம்முடைய நற்செயல்கள், நன்னடத்தை குறித்து நாம் பெருமையும், பெருமிதமும் கொள்வது நமக்குச் சுய மரியாதை உணர்வை உருவாக்கும் அடிமை மனத்தை அகற்றும். ஆகவே சந்திக்க வருபவர்களை உட்காரச்செய்து உரையாடினால் அவர்களை நமக்கு சமமாக மதித்தது போலாகிவிடும் என்று எண்ணி நிற்க வைத்தே பேசி அனுப்பிவிடுவார்கள், வந்தர்களை நிற்க வைத்துப்பேசும் போது இவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள் என்ற போலியான எண்ணம்! இது மிக மட்டமானது என்ற உண்மை விளங்கும் நாள் எந்நாளோ?

‘மதியாதார் வாசல் மிதியாமை’ என்பதை மனதில் நிறுத்தி, போலிப் பெரியோர்களைச் சுயமரியாதை உடையவர்கள் சந்திக்க விரும்புவதில்லை. சுயநலம் மிக்கவர்களும் சுயமரியாதையை தொலைத்தவர்களும் அவ்வளவு எளிதில் அடிமைப்புத்தியைக் கை விட மாட்டார்கள்.  

அவர்களைபொருத்தமட்டில்'காலில்நெடுஞ்சான்கிடையாகவிழுவதை' ஒரு கலையாகவே கொண்டவர்கள். இப்படிக்காலில் விழுந்து கிடப்பவனைப் பெரியவர்கள் சிலர் விரும்பி ,வரவேற்று மகிழலாம். ஆனால் காலப்போக்கில் காலைத்தொட்டுத் தொழுது கிடப்பவன், காலை வாரி விடவும் தயங்க மாட்டான்,என்று காலமாறுதலில், எதிர்பாராதவை சில நடக்கக்கூடும்.காலில் விழுந்து கிடப்பவனின் பண்பு அறிந்து எட்டி உதைத்து ஒதுக்கிவிடுவது நடக்கக்கூடும். சுயமரியாதை இல்லாதவனின் நடிப்பும் நயவஞ்சகமும் நீண்டநாள் வெற்றி பெற முடியாது. சுய மரியாதை இழந்து குனிந்து கும்பிட்டுக் கிடப்பவர் வாழ்விலொருநாள் கூனிக்குறுகி நிற்கும் நிலை ஏற்படும், சுயமரியாதை உணர்வுடன் நிமிர்ந்து நடந்தால், சமுதாயத்தில் மரியாதை நம்மை நாடி ஓடி வரும்.சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு, எழிலார்ந்த ஏற்றமிகு வாழ்வு, உயிரனைய உரிமை வாழ்வு என்பதை மனதில் நிறுத்தி மாண்புற வாழ்வோம்.

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

❝ இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

❝ இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

❝ இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

❝ என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

❝ நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

❝ இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

❝ இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

❝ தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

❝ ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

❝ மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

❝ கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

❝ ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏
Donate Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚