Sri Mahavishnu Info: திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் – What Is the Secret Behind Thirukolur Penpillai? திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் – What Is the Secret Behind Thirukolur Penpillai?
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் – What Is the Secret Behind Thirukolur Penpillai?

Sri Mahavishnu Info

சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கும் அம்மையார் வைணவ ஆச்சார்யார் ஸ்ரீ ராமானுஜரிடம் தெரிவித்த 81 கருத்துக்கள்தான் இந்த ரகசியம்.

இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருத்தலம் திருக்கோளூர். 108 வைணவத் திருப்பதிகளுள் ஒன்று. தாமிரபரணிப் படுகையில் உள்ள நவ திருப்பதிகளிலும் ஒன்று. பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வாரின் ஜென்மஸ்தலம். திருக்கோளூர் என்றாலே ‘தேடிப் புகும் ஊர்’ என்கிறார்கள் ஆச்சார்யார்கள்.

அத்தகைய இந்த ஊருக்கு ராமானுஜர் வரும் ஓர் அதிகாலை வேளையில், மோர் விற்கும் அம்மையார் ஒருவர் வியாபாரத்திற்காக ஊரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்.  அதைக் கண்ணுற்ற ராமானுஜர், ‘புகும் ஊருக்கு நாங்கள் வரும் போது நீங்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறீர்களே’ என்று கேட்கிறார்.

அதற்கு, ராமாயணமும், மகாபாரதமும், பாகவதமும், ஆழ்வார்கள் வரலாறும் தெரிந்த அந்த அம்மையார், வெகு இயல்பாக, ‘அழைத்து வருகிறேன் என்றேனோ அக்குரூரரைப் போலே’, ‘அகல் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே’ எனத் தொடங்கி ‘துறைவேறு செய்தேனோ பகவரைப் போலே’ என முடியும் 81 விஷயங்களைக் கூறி, ‘அப்பேர்ப்பட்ட நபர் நான் அல்ல, எனவே வெளியேறிக் கொண்டிருக்கிறேன்’ என்று பாண்டித்யமாக பதில் அளிக்கிறார்.

அந்த 81 வாக்கியங்களில் அவர் வைணவத்தைச் சாறாகப் பிழிந்து தருகிறார். அதைக் கேட்ட ராமானுஜர், சாதாரண தயிர் விற்கும் பெண்மணிக்கே இந்த ஞானம் இருக்கும் எனில் நிச்சயம் இது புக வேண்டிய ஊர்தான் என அம்மையாரைப் பணிகிறார்.  பின்னாளில் அந்த அம்மையாரும் ராமானுஜரின் சீடராகிறார்.

இவர் கூறிய 81 வாசகங்கள் அதாவது ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’ நமக்கு வைணவத்தை மட்டும் பாமரப் பெண்களும் கூட இந்த நாட்டில் மேதைகளாகத் தான் இருந்திருக்கிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது.

அந்த 81 வாக்கியங்கள்.... 
  
1. அழைத்து வருகிறேன் என்றோனோ அக்ரூரரைப் போலே!
2. அகமொழித்து விட்டேனோ விதுரரைப்போலே!
3. தேகத்தை விட்டேனோ ரிஷி பதினியைப் போலே!
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே!
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப்போலே!
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப்போலே!
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயையைப் போலே!
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப்போலே!
9. மூன்றெழுத்து சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப்போலே!
10.முதலடியை பெற்றேனோ அகலிகையைப் போலே!
11.பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே!
12.எம்பெருமான் என்றேனோ பட்டர்பிரானைப் போலே!
13.ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே!
14.அவன் சிறியனென்றேனோ அழ்வாரைப் போலே!
15.ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போலே!
16.யான் சத்யம் என்றேனோ அழ்வாரைப் போலே!
17.அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே!
18.அந்தரங்கம் சொன்னேனோ திரிஜடையைப் போலே!
19.அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே!
20.அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே!
21.தேவுமற்றரியேனோ மதுரகவியாரைப் போலே
22.தெய்வத்தை பெற்றேனோ தேவகியைப் போலே!
23.ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே!
24.ஆயனை(னாய்) வளர்த்தேனோ யசோதையைப் போலே!
25.அநுயாத்திரை செய்தேனோ அணிலங்கனைப் போலே!
26.அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே!
27.ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே!
28.அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே!
29.கர்மத்தால் பெற்றேனோ ஜநகரைப் போலே!
30.கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கயாரைப் போலே!
31.குடை முதலானதானேனோ ஆனந்தால்ழ்வான் போலே!
32.கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே!
33.இளைப்பு விடாய் தீர்தேனோ நம்பாடுவான் போலே!
34.இடைக்கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே!
35.இருமன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே!
36.இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்போடியார் போலே!
37.அவனுரைக்க பெற்றேனோ திருக்கசியார் போலே!
38.அவன்மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே!
39.அனுப்பி வையுமேன்றேனோ வசிஷ்டரைப் போலே!
40.அடி வாங்கினேனோ கொங்கில் பிராட்டியைப் போலே!
41.மண்பூவை இட்டேனோகுரவ நம்பியைப் போலே!
42.மூலமென்றழைத்தேனோ கஜராஜனைப் போலே!
43.பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே!
44.பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே!
45.வைத்தவிடத்து இருந்தேனோ பரதரைப் போலே!
46.வழி அடிமை செய்தேனோ இலக்குவணனைப் போலே!
47.அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாளைப் போலே!
48.அரக்கனுடன் பொருதேனோ பெரியவுடயாரைப் போலே!
49.இக்கரைக்கே செற்றேனோ விபீஷணனைப் போலே!
50.இனியதென்று வைத்தேனோ சபரியைப் போலே!
51.இங்கும் உண்டென்றேனோ பிரஹலாதனைப் போலே!
52.இங்கில்லை என்றேனோ திதிபாண்டனைப் போலே!
53.காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே!
54.கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப் போலே!
55.இருகையும் விட்டேனோ திரௌபதியைப் போலே!
56.இங்குபால் பொங்கும் என்றேனோ வடுகனம்பியைப் போலே!
57.இருமிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே!
58.நில்லென்று(னப்) பெற்றேனோ இடையற்றூர்நம்பியைப் போலே!
59.நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே!
60.அவன் போனான் என்றேனோ மாருதியாண்டான் போலே!
61.அவன் வேண்டாம் என்றேனோ அழ்வானைப் போலே!
62.அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே!
63.அருளாழங் கண்டேனோ நல்லானைப் போலே!
64.அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே!
65.ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரியாண்டானைப் போலே!
66.அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே!
67.அனுகூலம் சொன்னேனோ மால்ய்வானைப் போலே!
68.கள்வனிவன் என்றேனோ லோககுருவைப் போலே!
69.கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே!
70.சுற்றிக்கிடந்தேனோ திருமாலையாண்டான் போலே!
71.சூலுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார் போலே!
72.உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே!
73.உடம்பை வெறுத்தேனோ திருனறையூரார் போலே!
74.என்னைப்போல் என்றேனோ உபரிசரனைப் போலே!
75.யான் சிறியன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே!
76.நீரில் குதித்தேனோ கணப்புரதாளைப் போலே!
77.நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே!
78.வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே!
79.வாயிற் கையிட்டேனோ எம்பாரைப் போலே!
80.தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே!
81.துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே!

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚