Sri Mahavishnu Info: உற்சாகமாக இருப்பது ஒரு கலை உற்சாகமாக இருப்பது ஒரு கலை
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

உற்சாகமாக இருப்பது ஒரு கலை

Sri Mahavishnu Info
உற்சாகமாக இருப்பது ஒரு கலை.... அது மிகச் சிலருக்கு இயற்கையாகவே அமைந்துவிடும்....

பாருங்களேன்.... பெரும்பாலும் உற்சாகமாக இருப்பவருக்கு அதிகக் கஷ்டங்கள் வருவதில்லை..வந்தாலும் அவ்வளவு பாதிப்பு இருப்பதில்லை... கடல்போல் வந்தாலும் பனிபோல் மறைந்துவிடும்.... அவர்களைச் சுற்றி எப்போதுமே கூட்டம் இருக்கும்...

பிரச்சனைகளை அதிகம் கொண்ட நோய்கள்கூட அதிகம் தாக்குவதில்லை இத்தகையவர்களை....

எப்பொழுதும் உற்சாகமாக வளைய வருபவர்களுக்கு உறவுகளும்..சுற்றமும் அதிகரிக்கும் நாளுக்கு நாள்...

இதிலிருந்து என்ன தெரிகின்றது.. எல்லோரது மனமுமே அந்த உற்சாகத்திற்கு ஏங்குகிறது...ஆசை கொள்கிறது.... அந்த உற்சாகத்தை அனுபவிக்கின்றது...

தான் இருக்கும் நிலையைவிட அந்த உற்சாக நிலை தன்னை எளிதில் ஆட்கொள்கின்றது....

இயற்கையாக அமைந்தால்தான் என்றில்லை... தனக்குப் பிடித்ததுபோல் தன்னை மாற்றிக் கொள்ளலாமே.... அதில் என்ன தடை இருக்கின்றது....

இந்த மாதிரி விஷயங்களில் தயக்கமும்..கூச்சமும் நமது மிக வலுவான எதிரிகள்..... அவர்களைக் கழுத்தைப் பிடித்து அப்புறப்படுத்தி விடவேண்டும்.

ஒருவரைச் சந்திக்கும்போது...ஹாய் என்ற நமது உற்சாகக் குரலே அந்தச் சூழ்நிலை எப்படி இருந்தாலும் கலகலப்பாக்க வல்லது...

அதே சூழ்லையை... அழுமூஞ்சியாக்குவதும் நமது கையிலேயே.. நடவடிக்கையிலேயே 
தான் இருக்கின்றது...

பலர் கூடியிருந்தாலும்.. மோசமான மந்தநிலை நிலவினாலும்.. ஒரே ஒரு உற்சாகவாதி அங்கே தலைகாட்டினால் போதும்... எல்லா முகங்களும் ஆட்டோமேட்டிக்காக டியூப்லைட் போட்டுக் கொள்ளும்.... புன்னகையும்.. உற்சாகமும்.. சிரிப்புகளும்..
கலகல பேச்சுகளும் 
தீ போல் பற்றிக் கொள்ளும்

இறுக்கம் மாறும்.... வெங்கலக் கடையில் யாணை புகுந்தது போல். மிக கலகலப்பாகும்... இரத்த ஓட்டம் சீராகும்..சுகர் லெவலை உடனே 
பார்த்தால் தெரியும். 
மாற்றமாகி யிருக்கும்... 
மன உளைச்சலும்... அழுத்தமும் சீரடையும்...

ஸ்வாசம் இழுத்து விடப்படும்.... சாப்பிடவேண்டும்போல் இருக்கும்... உற்சாகத்தோடு அடுத்த வேலையில் ஈடுபடத் தோன்றும்... நல்ல உறக்கம் இருக்கும்.

மொத்தத்தில் இலவசமாகக் கிடைக்கும்... காஸ்ட்லியான ஒன்று இந்த உற்சாகம்.... பல வகையிலும் பயனளிக்கக் கூடிய ஒரு சொத்து இந்த உற்சாகம்....

இந்தச் சொத்தை மட்டும் சேர்த்து விட்டோமானால் போதும்..எந்தப் பிரச்சனை யையும் எளிதாகக் கடந்து விடுவோம்...

இலவசம்தான் நமக்குப் பிடிக்காதே.... அதுவும் நல்ல விஷயங்கள் ஆகவே ஆகாது...வறட்டுக் கௌரவம் வேறு... சிரிக்கவே காசுகேட்டால் என்ன செய்வது... ?

அவ்வப்போது கொஞ்சம் உற்சாகமாக, சந்தோஷமாக... ஜாலியாக இருக்கலாமே.... என்ன பிரச்சனை 
நாமும் சிரிக்கமாட்டோம்... மற்றவன் சிரித்தாலும் பிடிக்காது என்றிருந்தால் யாராலும் காப்பாற்ற முடியாது...

கொடுங்கோலாக இருந்து என்னத்தைக் கொண்டு போகப் போறோம்
எல்லாம் தெரிந்த விஷயம்தான்..
ஃபாலோதான் பண்ணுவதில்லை... 

இனியாவது யோசிப்போமா.... ஆரோக்கியத்திற்கு அவசியமானது என்ன என்று...
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚