Sri Mahavishnu Info: ஆச்சார்யன் எப்போது மகிழ்வடைகின்றார்..? ஆச்சார்யன் எப்போது மகிழ்வடைகின்றார்..?
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

ஆச்சார்யன் எப்போது மகிழ்வடைகின்றார்..?

Sri Mahavishnu Info
தோஷமுள்ள ஜீவர்களை பெருமாளின் திருவடியில் சரணாகதி பண்ண வைத்து தாம் அவர்களுக்காக பெருமாளிடத்தில் பிரார்த்திக்கும் போது சந்தோஷமடைகின்றார்களாம் ஒரு ஜீவன் கடைத்தேற வழி செய்தோமேயென்று! பாதுகையும் அதைத்தானேச் செய்கின்றது.!

நம்மையும் நம்பெருமாளின் திருவடியையும் பந்தபடுத்தி பிரார்த்திக்கின்றது.  நம்பெருமாளின் ஸ்ரீசடாரி சாதிக்கப்பெற்ற அனைவருமே நம் பரம ஆச்சார்யரான ஸ்வாமி நம்மாழ்வாரின் அனுக்ரஹம் பெற்றவர்கள்.
பொன்னிசூழ் அரங்கமேய பூவை வண்ண! மாய! கேள்
என்னதாவி என்னும் வல்வினையினுட்கொழுந்தெழுந்து
உன்ன பாதமென்ன நின்ற ஓண்சுடர்க் கொழுமலர்
மன்னவந்து புண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே   (திரு-17)

எம்பெருமான் பரமபதத்தில் துயில்வது நித்யசூரிகள் அனுபவிப்பதற்கு – திருப்பாற்கடலில் உறைவது அதன் கரையில் வாழும் ஸ்வேத தீப வாஸிகள் அனுபவிப்பதற்கு – ஆனால் பரமபதத்தினை விரஜாநதி சூழ்ந்திருப்பது போல பொன்னி சூழ்ந்த திருவரங்கத்தில் உறைவது பாபக்குவியலான எனக்கு.

வேறு எவரிடமும் காண முடியாத நேர்மையையும், எளிமையையும் உடைய,  தேவரீரிடம் ருசியை உண்டாக்கி என்னை அனுபவிக்கச் செய்வதற்கு!  பாபக்குவியலான என்னுடைய ஆத்மாவிற்கு உன்னைக் குறித்த ஈடுபாடு தோன்றிற்று. பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள ரத்னங்களும், முத்துக்களும் சேர்ந்து பாதுகை தம் செம்பவளவாய் திறந்து, தம் முத்துப்பல் காட்டி சிரிக்கின்றதாம். எதற்கு..?

பிழைசெய்த மக்கள்தமை பெருமாள் திருவடியில் சேர்ப்பித்து திருப்தியோடு புன்னகை புரிகின்றதாம். பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள அநேக ஜாதிகற்களும் சேர்ந்து மயில் தோகை போன்றுள்ளதாம்.  இது கிருஷ்ணாவதாரத்தில் அவரின் திருமுடியில் ஏறியமர்ந்ததற்கு மன்னிப்புக் கேட்டு பெருமாள் திருவடியில் அடைக்கலம் புகுந்தது போலுள்ளதாம்!.

நாம் இப்போது இருக்கும் லோகத்திலிருந்து பிரும்மலோகம் வரையில் லீலாவிபூதி என்று பெயர்.  இது பிரகிருதியால் செய்யப்பட்டது. இந்த பிரகிருதிக்கு ஸத்வம், ரஜஸ், தமோ மூன்று குணமுண்டு. நம்பெருமாளின் பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள சிகப்பு, வெளுப்பு, கறுப்பு ஆகிய ரத்னங்கள் இந்த மூன்று குணங்களின் பிரதிபலிப்பாக,  பிரகிருதியின் பிரதிபலிப்பாக, நம்பெருமாளின் திருவடியில் சேர்ந்திருக்கின்றது.   இந்த மூன்று குணங்களால் அனைத்து ஜீவன்களும் திண்டாடுகின்றது. 

இந்த பிரகிருதியானது ஸம்ஸாரம், மோக்ஷம் இரண்டுக்குமே உதவுகின்றது. ஆனால் பாதுகை, அதாவது நம்மாழ்வார், மோக்ஷத்திற்கு மாத்திரமே உதவுகின்றார்.

பாதுகையில் வைரமும், இந்திர நீலக்கல்லும் பதிக்கப்பட்டுள்ளன.  இதனைப் பார்க்கும் போது பகலும், இராத்திரியுமாக, தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு மோக்ஷத்தினை கொடுப்பதற்காக, பகல், இரவு இரண்டினையும் விலங்கில் போட்டிருப்பது போலுள்ளதாம்.  நல்ல ஆச்சார்யனை ஆஸ்ரயித்தவர்களுக்கு புண்ணியம், பாபம் இரண்டும் தொலைந்து நித்யமான பெருமாளுடைய லோகம் கிடைக்கின்றது.

பாதுகைதான் நல்ல ஆச்சார்யன்!  பாதுகையினைப் பணிவோம்!  பெறுதற்கரிய பேறு பெறுவோம்!
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏
Donate Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚