Sri Mahavishnu Info: அனுமன் ஆலயங்களில் ஆஞ்சநேயரின் உடல் முழுவதும் செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா? அனுமன் ஆலயங்களில் ஆஞ்சநேயரின் உடல் முழுவதும் செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா?
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

அனுமன் ஆலயங்களில் ஆஞ்சநேயரின் உடல் முழுவதும் செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா?

Sri Mahavishnu Info
அனுமனின் பயன் 
கருதா பக்தி கதை!

ஆஞ்சநேயர் இருக்கும் ஆலயங்களில் பெரும்பாலும் பிரசாதமாக செந்தூரத்தை வழங்குவார்கள். மேலும் ஆஞ்சநேயர் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசி  ஆராதிப்பதை பார்த்திருக்கிறோம். இதற்கு சுவாரஸ்யமான ஒரு காரணம் உண்டு.

ராமராஜ்யம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், அரசவையில் கலந்து கொள்ள சீதா தேவி தயாராகிக் கொண்டிருந்தார். 

அப்போது ஒரு  சிறிது செந்தூரத்தை எடுத்து தன் நெற்றி வகிட்டில் இட்டுக் கொண்டார்.

சீதாதேவியை அரசவைக்கு அழைத்துச் செல்ல வந்த ராமனின் சேவகனான அனுமன் இதை கவனித்தார். 

“தாயே உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா ?” என்று கேட்டார். சீதா தேவியும் “தாராளமாக கேள்” என்றார்..

அன்னையே நீங்கள் 
ஏன் தினசரி உங்கள் வகிட்டிலும் சிந்தூரை வைத்துக் கொள்கிறீர்கள்” என்றார்.

மைந்தா, என் அன்பான கணவரின் நினைவு மட்டும்தான் எப்போதும் என்னுடம் இருக்க வேண்டும் என நினைத்தே செந்தூரத்தை வகிட்டில் இட்டுக் கொண்டேன். 

ஏன் என்றால் தூய்மையான செந்தூரத்தை 
எத்தனை அழித்தாலும் அது முழுவதுமாக அழியாமல் அதன் கறையை விட்டு வைக்கும்.

அது போலத்தான் என்னிடம் இருந்து என் கணவரின் நினைவை மாற்றவே முடியாது என்பதை காட்டவே அதை வகிட்டில் இட்டுக் கொண்டேன் என்றாராம் சீதாபிராட்டி.

மேலும் “என் கணவர் நீடூழி வாழ வேண்டும் என்பதற்காகவும் செந்தூரத்தை இட்டுக் கொண்டேன் என்றார்.. சீதா தேவி.

பிறகு அனுமன் சீதா தேவியை அரசவை வாயில் வரை சென்று விட்டு விட்டு. “தாயே நீங்கள் அரசவைக்கு செல்லுங்கள் நான் இதோ வந்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு  சென்று விட்டார்.

அனுமன் உடனே அயோத்தியின் கடை வீதிக்கு சென்று செந்தூரம் வாங்கி, 
தன் முகம் மற்றும் 
இதர பகுதிகளில் பூசிக்கொண்டார். 

மேலும் அச்செந்தூர மூட்டையைத் தரையில் கொட்டி, அதில் புரண்டு தன் உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக்கொண்டார். 

அக்கோலத்துடனேயே அனுமன் அயோத்தியின் அரசவைக்குசென்றார்.

தன் உடல் முழுவதும் செந்தூரைப் பூசிக் கொண்டு அரசவைக்கு வந்த அனுமனை பார்த்து “அனுமா.. இது என்ன கோலம்?” என்று ராமன் கேட்டார்

அதற்கு அனுமன்..
அன்னை சீதாதேவி நெற்றி வகிட்டில் வைத்துக் கொள்ளும் 
சிறு செந்தூரத்தினால் தங்களின் நினைவை மாற்றவே முடியாது என்றும் அந்த சிந்தூரம் தங்களின் 
நீண்ட ஆயுளுக்கு வழி வகுக்கும் என்று சீதா தேவிக் கூறியதாகவும்

அன்னை சிறிய அளவில் இடும் சிறு அளவு செந்தூரத்தினால் தங்களின் நினைவை மாற்றவே முடியாது, மேலும் அது தங்களின் ஆயுளை நீட்டிக்க  உதவும் என்றால் உங்கள் மீது அளவற்ற பக்தி கொண்டிருக்கும் நான் என் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொள்வதால், என்னிடமிருந்தும் தங்களின் நினைவை மாற்றவே முடியாது என்பதற்காகவும், செந்தூரம் தங்களின்  நீண்ட ஆயுளுக்கு வழி வகுக்கும் என்றால் நான்  தங்களின் பரிபூரண ஆயுளுக்காக என் உடல் முழுவதும் செந்தூரத்தை தினமும் பூசிக் கொள்வேன்” என்றார் அனுமன்

இதைக் கேட்ட ராமனின் கண்கள் அனுமனின் பக்தியையும்... வெகுளித்தனத்தையும்... நினைத்து கலங்கியது. அனுமனை கட்டித் தழுவிக் கொண்டார்.

கடவுளான ராமபிரான் மீது அனுமன் கொண்டுள்ள பயன் கருதாதபக்தியை வெளிப்படுத்தி காட்டவே அனுமன் சன்னதிகளில் செந்தூரத்தை பிரசாதமாகவும்... அனுமன் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசியும் வழிபடுகின்றனர்..!!
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏 DONATE Support Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚