Sri Mahavishnu Info: கோபத்தை குறைப்பவனே ஞானி கோபத்தை குறைப்பவனே ஞானி
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

கோபத்தை குறைப்பவனே ஞானி

Sri Mahavishnu Info
கோபத்தினால் எதுவுமே சாதிக்க முடியாது 

மஹா பாரதத்தில் ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், பலராமர், அர்ஜுனன் மூவரும் அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். 

இரவாகி விட்டது. மூவரும் ஓரிடத்தில் தங்கி விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினார். 

வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒருசேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்துக்கு ஒருவராகக் காவல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். 

அதன்படி கிருஷ்ணரும், பலராமரும் தூங்கச் செல்ல அர்ஜுனன் காவல் இருந்தான். 

அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. 

அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம். 

மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. 

அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான். அப்போது அந்த உருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்யவேண்டும் என்றும் கேட்டது. அதைக் கேட்ட அர்ஜுனன், கோபம் கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான். அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக, அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெருகியது. 

அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட, அது பூதாகாரமாய் விளங்கியது. இறுதியில் அர்ஜுனனைப் பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது. 

இரண்டாம் ஜாமம் தொடங்க, பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜுனன் தூங்கச் சென்றான். பலராமர் காவல் இருந்தார். அப்போது, மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி, அர்ஜுனனிடம் கூறியது போல பலராமரிடமும் கூறியது. 

அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமரும் அதனுடன் சண்டையிட்டார். அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை. பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக, அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது. 

பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்து விட்டது. மூன்றாம் ஜாமம் தொடங்க, பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு தூங்கச் சென்றார். 

அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது. அதைப் பார்த்த கிருஷ்ணர், கடகடவெனச் சிரித்தார்.

ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம். உனது தூக்கிய பற்களையும், அழகான முட்டைக்கண்களையும் கண்டுதான் என்றார் கிருஷ்ணர், சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது. கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார். கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. கிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார். பொழுது விடிந்தது. 

பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர். அப்போது கிருஷ்ணர், துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, 

நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான். 

நீங்கள் அதனுடன் சண்டை போடும்போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. நான் அதனுடன் சிரித்துக் கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறி விட்டது. 

வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்குச் சமமாகி விடுவான். கோபத்தையும் குறைப்பவனே ஞானி என்றார் கிருஷ்ணர்.

ஆம் 

நீங்கள் கோபத்தினால் சாதிக்க முடியாததை ஒரு புன்னகை சாதித்து விடும்.

பிருகு பரமாத்மா ஸ்ரீமந் மஹாவிஷ்ணுவை நெஞ்சிலே எட்டி உதைத்தும் கோபப்படாமல் சமயோஜித புத்தியால் மும்மூர்த்திகளில் மிகவும் பொறுமைசாலி என்ற பட்டம் பெற்றார்.

ஹரி ஸர்வோத்தமா 
மூல ராமோ விஜயதே 

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏 DONATE Support Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚