Sri Mahavishnu Info: பிறந்தநாளன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை | What to do on Birthdays பிறந்தநாளன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை | What to do on Birthdays
```
📿 வைணவ அடிப்படைகள் • 🛕 108 திவ்யதேசங்கள் • 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் • 🎧 தினசரி ஸ்லோகங்கள் • 📅 இன்றைய வைபவம் • 🙏 தினசரி பக்தி வழிகாட்டி • ❓ பக்தி கேள்வி & பதில்கள் • 📖 ஆன்மீக நூல்கள் • 🧒 குழந்தைகள் பக்தி பகுதி • 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை • 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் • 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் • 🌺 திருப்பாவை • 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் • 🛕 திருத்தல தரிசனம் • 🔔 கோவில் விழாக்கள் • 📜 பக்தர் அனுபவங்கள் • ✨ அற்புத நிகழ்வுகள் • 🕉️ நாமஸ்மரணையின் மகிமை • 📚 பக்தி குறிப்புகள் • 🌸 ஆழ்வார்கள் வரலாறு • 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் • 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ • 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி • 🌟 புதிய பக்தி பதிவுகள்

பிறந்தநாளன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை | What to do on Birthdays

Sri Mahavishnu Info

ஒருவருடைய பிறந்த நாள் என்பது வெறும் கொண்டாட்டத்திற்கான நாள் மட்டுமல்ல; அது இறைவனால் அருளப்பட்ட ஆயுள் நீட்டிப்பையும், புதுப்பொலிவையும் பெறும் உன்னதமான நாளாகும். அத்தகைய புண்ணிய தினத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக நெறிமுறைகள் மற்றும் தவிர்க்க வேண்டிய செயல்களை இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்.

ஒருவர் பிறந்த நாள் என்பது அவரது ஆயுளை இறைவன் மேலும் நீட்டித்து வழங்கும் நாளாகும். இறைவனின் நேரடி பார்வை அன்று நம்மீது இருக்கும். எனவே பிறந்தநாளை ஒருவர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு இறையருளுக்கு பாத்திரமாகவேண்டும்.

பிறந்தநாளன்று ஒருவர் செய்யவேண்டியது என்ன?

  1. காலையில் சீக்கிரம் எழுந்து எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும்.
  2. புத்தாடைகள் இருப்பின் அவற்றை பெரியோரிடம் தந்து குங்குமம் வைத்து வாங்கி அணியலாம். (ஆடைகளில் தோஷம் ஏதேனும் இருந்தால் குங்குமம் வைப்பது மூலம் அவை நீங்கிவிடும்).
  3. பெற்றோர் மற்றும் மூத்தோரின் கால்களில் விழுந்து ஆசி பெறவேண்டும்.
  4. அவர்கள் கையால் இனிப்புக்களை பெற்று அதை உண்ணவேண்டும்.
  5. குல தெய்வத்தின் கோவிலுக்கு செல்லவேண்டும்.
  6. ஆலயத்தில் உங்கள் பெயர் ராசி நட்சத்திரப்படி அர்ச்சனை, அபிஷேக, ஆராதனைகள் செய்யவேண்டும்.
  7. வீட்டிலும் கோவில்களிலும் முடிந்த எண்ணிக்கையில் விளக்கேற்றவேண்டும்.
  8. ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம் உள்ளிட்ட தர்ம காரியங்கள் செய்யலாம். (தவிர ரத்த தானம், கண் தானம், உடல் தானம் போன்ற மிகுந்த புண்ணியம் தரக்கூடிய தானங்களை கூட செய்யலாம்.)
  9. அன்று ஆயுஷ் ஹோமம் செய்வது நன்று.
  10. கோ-பூஜை செய்வது சாலச் சிறந்தது. கோ-பூஜை செய்ய இயலாதவர்கள் பசுவுக்கு உணவளிக்கலாம்.
  11. புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள விரும்பினாலோ அல்லது புதிய வகுப்பில் சேர விரும்பினாலோ அன்று அதை செய்யலாம்.
  12. அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளலாம்.
  13. புதிய சொத்துக்கள் வாங்கலாம்.
  14. வாகனங்கள் வாங்கலாம்.
  15. புதுமனைப் புகு விழா (கிரஹப் பிரவேசம்) செய்யலாம்.
  16. உபநயனம் செய்துகொள்ளலாம்.
  17. பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, நண்பர்களோ அளிக்கும் பரிசுகளை ஏற்றுக்கொள்ளலாம். நல்ல எண்ணத்துடன் எந்த வித எதிர்பார்ப்புமின்றி அந்த பரிசு கொடுக்கப்படவேண்டும்.
  18. இராமாயண, மகாபாரத, இதிகாசங்களை படிக்கலாம். பக்தி நூல்களை, ஸ்தோத்திரங்களை படிக்கலாம்.

பரபரப்பான வாழ்க்கையில் உழல்பவர்கள் அன்றைக்கு அலுவலகத்திற்கு ஒரு நாளோ அறைநாளோ விடுப்பு எடுத்துக்கொண்டால் மேற்கூறியவைகளை பதட்டமின்றி செய்யமுடியும்.

பிறந்த நாளன்று செய்யக்கூடாதவை:

  • புதிய மருந்து உட்கொள்வது கூடாது.
  • திருமணம் செய்துகொள்வது கூடாது.
  • சீமந்தம், வளைகாப்பு செய்யக்கூடாது.
  • சாந்தி முஹூர்த்தம் வைத்துக்கொள்ளக்கூடாது.
  • அசைவ உணவு சாப்பிடுவது அல்லது அசைவ உணவு விருந்தளிப்பது கூடாது.
  • கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றுதல், அதை வாயால் ஊதி அணைத்தல் கூடவே கூடாது. (அன்றைய நாளில் விளக்கேற்ற வேண்டுமே தவிர அணைக்கக் கூடாது.)
  • வம்பு தும்பு வழக்கு, வாதம், சண்டை ஆகியவற்றில் ஈடுபடுவதை அன்று நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
  • முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் அன்று தங்களுக்கு கீழ் உள்ளவர்களை தண்டிக்கக் கூடாது. முடிந்தால் அவர்களை மன்னிக்கலாம்.
  • தங்களின் புதிய சொத்துக்கள், பரிசுகள், வருவாய் ஆகியவை குறித்து தம்பட்டம் அடித்துக்கொள்ளுதல் கூடவே கூடாது.
மொத்தத்தில் இறைவன் நம்முள் நுழையும் நாளான நம் பிறந்தநாளன்று கேளிக்கைகளை தவிர்த்துவிட்டு அன்றைய தினத்தை ஆத்ம சுத்திக்காக ஒதுக்கிடவேண்டும். இப்படி செய்தால் இறையருளுக்கு பரிபூரணமாக பாத்திரமாவதுடன் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் நல்லோர் நட்பையும் ஒருவர் பெறலாம்.

📚 ஆன்மிக PDF தொகுப்பு

🙏 “தெய்வத்தின் குரல்” முழு தொகுப்பு, காஞ்சி மகாபெரியவா அருள்மொழிகள், ஆன்மிக சிந்தனைகள் (14 PDF புத்தகங்கள்) மற்றும் அரிய PDF நூல்கள். (போனஸ் 10 PDF)

📥 Instant Download
♾️ Lifetime Access
🎁 Bonus PDF Included
💰 சிறப்பு சலுகை
₹199
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

❝ இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

❝ இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

❝ இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

❝ என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

❝ நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

❝ இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

❝ இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

❝ தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

❝ ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

❝ மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

❝ கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

❝ ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏
Donate Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚