ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்போ – எப்படி ஆரம்பமானது? | How Sri Mahavishnu Info Journey Began

Sri Mahavishnu Info Team

வணக்கம்! 🙏

ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்போ என்பது ஆழமான ஆன்மீக நோக்கத்துடன் உருவான ஒரு தளமாகும். இதில் உள்ள ஒவ்வொரு பகிர்வும் பக்தி மற்றும் பாசத்துடன் தயாரிக்கப்பட்டவை.

இந்த தளத்தை உருவாக்கின நேரத்தில் எங்களுக்குள் இருந்த ஒரே எண்ணம்: “பக்தியில் பயணிக்கும் ஒரு சாதாரண மனிதருக்கு ஒவ்வொரு நாளும் சிறிய ஒளிக்கீற்று ஏற்பட வேண்டுமே.”

நம் மூதாதையர்கள் கடந்து வந்த அந்த பக்தி பாதையில், இன்றைய தலைமுறையினருக்கும் அந்த ஞாபகத்தை மீண்டும் சுடர்விட ஆசைபட்டோம்.

பெரிய பெரிய நூல்களில் அடங்கிய ஆன்மீக தகவல்களை எளிய மொழியில், நம் வாழ்வோடு இணைக்க முயற்சி செய்தோம்.

அந்த முயற்சிதான் இன்று “ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்போ” என்ற பெயரில் உங்கள் மனதைக் கூட தொடுகிறது என்றால் – அதுவே எங்களுக்குப் பெருமை!

“இந்த தளத்தில் பகிரப்படும் ஒவ்வொரு வரியும், பக்தியில் பயணிக்கும் ஒரு உள்ளத்திற்கு ஒரு சிறிய ஒளிக்கீற்று ஆகட்டும் என்பதே எங்கள் ஆசை.”

– ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்போ குழு

💡 இந்த எண்ணம் முதலில் என்னுள் (ஹரி) தோன்றியது. அதை ஒரு தோழியிடம் பகிர்ந்தேன். அவர் ஆதரித்து, சிறிய WhatsApp குழுவில் ஆரம்பித்தோம். இன்று இது வளர்ந்து...

  • 💬 100+ WhatsApp குழுக்கள்
  • 📘 5000+ Facebook பின்தொடர்பவர்கள்
  • 📸 2000+ Instagram பின்தொடர்பவர்கள்
  • 📺 18,000+ YouTube சந்தாதாரர்கள்

...என்று வளர்ந்து கொண்டே இருக்கிறது! இப்போது English, Kannada போன்ற மொழிகளிலும் குழுக்கள் தொடங்கியுள்ளன; மேலும் பல மொழிகள் உருவாக்கப்படுகின்றன.

🙏 எங்கள் பங்களிப்பாளர்களுக்கு நன்றிகள்

  • 💬 திருமதி. ஹேமலதா (பெங்களூரு) – முதல் நாள் முதல் முழு ஆதரவுடன் செயல்படுபவர்
  • 🎙 திருமதி. ரேவதி ஜெயராமன் (மலேஷியா) – YouTube குரல் பதிவு பங்களிப்பு
  • 🌸 திருமதி. ரேவதி (சென்னை) – இந்தி மொழிபெயர்ப்பு உதவி

எங்கள் பயணத்திற்கு ஆதரவளிக்கும் அனைத்து பக்தர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். இந்த தளம் உங்கள் ஆன்மீக பாதையில் ஒரு ஒளிக்கொடி ஆக அமையட்டும்.

ஓம் நமோ நாராயணாய! 🙏