40 ஆண்டுகளானாலும் அத்திவரதரின் சிலை அதே பொலிவுடன் இருக்கும்

40 ஆண்டுகளானாலும் அத்திவரதரின் சிலை அதே பொலிவுடன் இருக்கும் என்று காஞ்சிபுர ஸ்தபதி கூறியிருப்பது அனைவரையும் அதிர செய்துள்ளது.

நேற்றுடன் அத்திவரதரின் தரிசனம் முடிவடைந்துள்ளது. இன்று குளத்தில் அத்திவரதரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் நிலையை பற்றி ஹரிதாஸ் என்ற ஸ்தபதி ஊடகங்களிடம் கூறியதாவது:
என் பெயர் ஹரிதாஸ். மாமல்லபுரம் அரசு சிற்பக்கலை கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைஞர் அவர்கள் திறந்து வைத்த திருவள்ளுவரின் சிலையை வடிவமைத்த கணபதி ஸ்தபதியின் மாணவர் ஆவேன். அத்திமரம் என்பது மூலிகை சக்தி நிறைந்த சிறந்த மரமாகும். அத்திவரதரின் சிலையை அத்திமரத்தினால் இந்த சிலை செய்யப்பட்டுள்ளது. சிறப்பான மூலிகைகளின் கலவைகள் இந்த சிலையில் பூசியுள்ளனர். இதனால் அந்த சிலை எந்தவித சிதைவும் அடையவில்லை.
இந்த காலத்தில் வடிவமைக்கப்பட்டுவரும் மரங்களுக்கு எந்தவித காலக்கேடும் இல்லை. சிலையின் வலிமையை அதிகரிப்பதற்காக தண்ணீரில் மூழ்கி வைக்கப்படும். ஆனால் இந்த காலத்தில் இந்த முறையினாலும் கூட சிலையின் வலிமையை கூட்ட இயலவில்லை.
இந்நிலையில் தேக்கு மரங்களினால் வடிவமைக்கப்பட்ட சிலைகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு எடுத்தால் அவற்றின் உருவம் சிதைந்து விடும் என்பது உண்மை. ஆனால் அத்திமரத்தினாலான அத்திவரதரின் சிலையானது மருந்துகள் பூசப்பட்டுள்ளன.

அஜந்தா, எல்லோரா ஆகிய இடங்களில் உள்ள சிலைகள் எவ்வளவு காலமானாலும் எந்தவித சிதைவும் இல்லாமல் இருப்பது போன்று அத்திவரதரின் சிலை சிதையாமல் இருக்கும். அத்திவரதரை தரிசிக்க வருபவர்களுக்கு எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது உண்மை என்று பொதுமக்கள் நம்பி வருகின்றனர். இவ்வாறு ஹரிதாஸ் ஸ்தபதி கூறினார்.