Sri Mahavishnu Info: ஸ்ரீ ராமானுஜரின் வரலாற்று மகிமை பகுதி 20 ஸ்ரீ ராமானுஜரின் வரலாற்று மகிமை பகுதி 20
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

ஸ்ரீ ராமானுஜரின் வரலாற்று மகிமை பகுதி 20

Sri Mahavishnu Info
 
ராமானுஜரின் மனம் குளிரும் வண்ணம் திருக்கோஷ்டியூர் நம்பியின் பதில் அமைந்தது. அப்பா ராமானுஜா! நீ கேட்டு வந்துள்ள உயர்ந்த மந்திரத்தை உனக்கு நான் உபதேசிக்கிறேன். கலியுகத்தில் இம்மந்திரத்தை கேட்கும் தகுதி உனக்கு இருப்பதால் தான், பரந்தாமன் உன்னை என்னிடம் அனுப்பியுள்ளான். 

ஆனால், இந்த மந்திரத்தை நீ மட்டுமே மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இம்மந்திரம் தெரிந்தவர் இறந்த பின் வைகுண்டத்தை அடைவார். பிறவாவாழ்வெனும் முக்தி பெறுவார். அந்த பரந்தாமனுடன் ஐக்கியமாவார். வேறு யாருக்கும் இம்மந்திரத்தைச் சொல்லக்கூடாது, என்றார். பின்னர் ராமானுஜருக்கு ரகசியமாக அந்த மந்திரத்தைக் கற்பித்தார். 

அந்த மாத்திரத்திலேயே ராமானுஜர் தெய்வீக சக்தி பெற்றார். உள்ளத்தில் அமைதி நிலவியது. உலகத்தையே தன் கைக்குள் அடக்கியவன் எப்படி மகிழ்வானோ, அப்படியே மகிழ்ந்தார் ராமானுஜர். குருவின் பாதத்தில் விழுந்து தம் நன்றியைத் தெரிவித்தார். மந்திரம் தெரிந்த மகிழ்ச்சியுடன் ஸ்ரீரங்கத்துக்கு கிளம்பினார். 

புறப்பட இருந்த சமயத்தில் ராமானுஜரின் உள்ளத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. நாம் படித்த மந்திரம் வைகுண்டம் செல்ல உதவும் என்பது குருவின் வாக்கு. இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்பது அவரது கட்டளை. குருவின் கட்டளையை மீறக்கூடாது என்பது உண்மையே. அதே நேரம் இம்மந்திரம் தெரிந்த குருவும், நானும் மட்டுமே வைகுண்டம் செல்வதென்பது என்ன நியாயம்? 

ஊரில் எல்லாருக்கும் தெரியட்டுமே! எல்லாருமே இப்பிறவி துன்பத்தில் இருந்து நீங்கி, பரந்தாமனுடன் கலக்கட்டுமே! இதில் தவறென்ன இருக்கிறது? குருநாதர் ஏன் இப்படி சொல்கிறார்? என தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டார். சிந்தித்தார் சில நிமிடங்கள். இதை எல்லாருக்கும் சொல்லி விட வேண்டும். 

குருவின் கட்டளையை மீறுவதற்குரிய பாவத்தை நாம் ஏற்றுக் கொள்வோம். நாம் அழிந்தாலும், பிறர் வாழ வேண்டும், என்றவராய், திருக்கோஷ்டியூர் கோயில் வாசலுக்கு சென்றார்.

முதலில் தன் சீடர்களான முதலியாண்டான், கூரத்தாழ்வான் ஆகியோருக்கு இம்மந்திரத்தை போதித்தார். அடுத்து மக்கள் கூட்டத்தை அழைத்தார். அன்பர்களே! உங்களுக்கு நான் உயர்ந்த மந்திரம் ஒன்றைக் கற்றுத் தரப்போகிறேன். செல்வம், உலக இன்பம் இவற்றையெல்லாம் விட உயர்ந்த ஒன்று உங்களுக்கு இதைக் கேட்பதால் கிடைக்கும், என்றார். 

எல்லாரும் ஒருமித்த குரலில் அம்மந்திரத்தைக் கூறுமாறு கேட்டனர். ஊருக்குள் இதற்குள் செய்தி பரவி விட்டது. நம் ஊருக்கு வந்துள்ள மகான் ஒருவர் ஒரு மந்திரத்தைச் சொல்லப் போகிறாராம். இதைச் சொன்னால், கிட்டாத பொருள் ஒன்று கிட்டுமாம். அது என்னவென தெரியவில்லை. 

நமக்கு இன்னும் பொருள், பொன், நினைத்த பெண்...இப்படியெல்லாம் கிடைத்தால், இன்னும் நல்லது தானே, என பாமரர்களும், ஏதோ ஒரு தெய்வீகப்பொருள் கிடைக்கப் போகிறதெனக் கருதி கற்றறிந்தவர்களும் அங்கு கூடினர்.

 ராமானுஜர் என்ற கருணைக்கடல் மக்களுக்கு அம்மந்திரத்தை ஓதியது. அந்த மந்திரத்திற்கு எத்தனை எழுத்துக்கள் தெரியுமா? எட்டே எட்டு. இத்தொடரை வாசித்துக் கொண்டிருக்கும் அனைத்து அன்பர்களுக்கும் அந்த மந்திரம் என்னவென்று அறியும் ஆவல் இருக்கும். அதுமட்டுமல்ல, அதை ஓதினால், எங்களுக்கும் பரந்தாமனுடன் கலக்கும் பாக்கியம் கிடைக்குமே என்ற ஏக்கத்துடன் இருப்பீர்கள் அல்லவா?
 
இதோ! பகவான் விஷ்ணு திருக்கோஷ்டியூர் நம்பிக்கு அறிவித்து, அவர் மூலம் ராமானுஜர் மக்களுக்கு அறிவித்த அந்த மந்திரம் இதுதான். உரக்க படியுங்கள். உங்கள் இல்லம் முழுவதும் இந்த மந்திரத்தின் ஒலி பரவட்டும். பக்தியுடன் படியுங்கள்.

அந்த பரந்தாமனை மனதுக்குள் கொண்டு வாருங்கள். சொல்லுங்கள்....உரக்கச் சொல்லுங்கள்...ஓம் நமோ நாராயணாய....ஓம் நமோ நாராயணாய...ஓம் நமோ நாராயணாய ராமானுஜர் சொன்ன இம்மந்திரத்தை அனைவரும் மும்முறை முழங்கினர். எல்லாருமே வைகுண்டம் செல்லும் பாக்கியத்தை அடைந்தனர். 

அடுத்து எங்கிருந்து இடிவரும் என்பதை ராமானுஜர் அறிந்திருப்பாரே! திருக்கோஷ்டியூர் நம்பியைச் சந்திக்க அவரே சென்று விட்டார். உள்ளே நுழைந்தது தான் தாமதம். அங்கே அதிகபட்ச வெப்பத்தில் பால் பொங்குவது போல, திருக்கோஷ்டியூர் நம்பி கொதித்து நின்றார். அடத்துரோகியே! குருவின் வார்த்தையை மீறிய உன்னிலும் பெரிய துஷ்டன் உலகில் யாருமில்லை.

 என் கண்முன்னால் வந்து, உன்னை பார்த்த பாவத்தை எனக்கு தராதே. குருவின் வார்த்தையை மீறிய நீயும் ஒரு மனிதனா? நீ பேயை விடக் கொடியவன். உன்னை நரகத்தில் சேர்க்கக்கூட யோசிப்பார்கள். அதையும் விட கொடிய இடத்திற்கு நீ செல்வாய், என்று உணர்ச்சியை வார்த்தைகளாக வடித்து கொட்டித் தீர்த்து விட்டார். குருவின் நிந்தனை கண்டு ராமானுஜர் சற்றும் கலங்கவில்லை. 

பலருக்கு நன்மை செய்த தனக்கு, குரு சொல்வது போல, கொடிய நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை எனக் கருதியவர், குருவிடம், ஆச்சாரியாரே! தாங்கள் சொல்வது முழுவதும் நியாயமே. நான் செய்தது தவறென்பது எனக்கும் தெரியும். ஆயினும், இந்த தவறுக்காக எனக்கு கொடிய நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை.

ஆனால், இந்த மந்திரத்தைக் கேட்ட ஆயிரக்கணக்கானவர்கள் வைகுண்டம் செல்வார்களே! அதைக்கண்டு நான் மகிழ்வேன். அவர்கள் பரந்தாமனுடன் கலக்கும் காட்சியை என் மனக்கண்ணால் காண்கிறேன். எனக்கு கிடைக்கப் போகும் துன்பத்தை விட, மக்கள் அடையும் நன்மையே பெரிதாகத் தெரிகிறது, என்றார் பணிவுடன். 

ராமானுஜர் பேசப்பேச, திருக்கோஷ்டியூர் நம்பியின் முகம் மாறியது.

ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ

  தொடரும்......
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏 DONATE Support Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚