Sri Mahavishnu Info: நான்கு செயல்களை மனிதன் தினமும் தவறாமல் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். நான்கு செயல்களை மனிதன் தினமும் தவறாமல் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

நான்கு செயல்களை மனிதன் தினமும் தவறாமல் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

Sri Mahavishnu Info
• 1. துயிலெழும்போது ஹரி ஹரி என்று எழுந்திருக்கவேண்டும் ('உத்திஷ்ட சிந்தய ஹரிம்').

• 2. குளிக்கும்போது கேசவனின் நாமம் சொல்லி குளிக்க வேண்டும் ('வ்ரஜன் சிந்தய கேசவம்').

• 3. உண்ணும்போது கோவிந்தனை மனதில் நினைத்து உண்ண வேண்டும் ('புஞ்சன் சிந்தய கோவிந்தம்'). 

• 4. தூங்க போகும் முன் மாதவனை நினைக்க வேண்டும் ('ஸ்வபன் சிந்தய மாதவம்') . 

இந்த நான்கு செயல்களையும் செய்வதால் எவருக்கும் எந்தவிதமான கஷ்டமோ நஷ்டமோ கிடையாது. மாறாக அமைதியான வாழ்க்கை நிச்சயமாக கிட்டும். 

இந்த நான்கு செயல்களையும் மக்கள் முந்தைய காலத்தில் தவறாமல் செய்து வந்தனர் என்பதை விளக்குமாப்போல ஆண்டாள் நாச்சியார் கோதையின் கீதை  (திருப்பாவை பாசுரங்கள்) திகழ்கிறது.

1. துயில்  எழும்போது ஹரி ஹரி என்பது புள்ளும் சிலம்பின்காண் என்கிற பாசுரத்தில் உள்ளத்துக்கொண்டு ''முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து ஹரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ'' (பாசுரம் - 6) என்கிறார்.

2. பெண்கள் எல்லாம் வந்து நாட்காலே நீராடி வந்து விட்டார்கள். தற்சமயம் தயிர் கடைந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கேசவனைப் பாடுதல் உன்காதில் விழவில்லையா?
"கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?" (பாசுரம் - 7).

3. பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து உண்பவர்கள் கூடாரை வெல்பவராகிய கோவிந்தனைப் பாடுகிறார்கள் (பாசுரம் - 27).

4. நன்கு தூங்க வேண்டுமானால் மாதவன் பெயரைச் சொல்லி இருப்பாள் போல் இருக்கிறது இந்தப் பெண். ஏமப் பெரும் துயில் மந்திரப் பட்டாளோ, மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ (பாசுரம் - 9).

 மனிதன் தினசரி தவறாமல் செய்ய வேண்டிய செயல்களை, கோதை நாச்சியார் தனது திருப்பாவை பாசுரங்களில், மேற்கண்டவாறு
சுட்டிக் காட்டியுள்ளதை வைணவப் பெரியோர்கள் நமக்கு  உணர்த்துகின்றனர்.

இவ்வாறு 'ஸ்ரீமத் பகவத் கீதை' சாஸ்திரத்திற்கு இணையான பெருமை இந்த பகவதி கீதைக்கும் உண்டென்பதை இக்கட்டுரைத் தொடரின் இறுதியில் நாம் உணரலாம்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் – கோதைதமிழ் ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு என்று  வேதப்பிரான் பட்டர் ஸ்வாமிகள் என்னும் வைணவ ஆச்சார்யர் அருளுகிறார். 

எவரையேனும் எதற்கும் ப்ரயோஜனம் இல்லாதவர்கள் என்று கருதினால் அவர்களை 'பூமிக்கு பாரம்' என்று திட்டுவார்கள். ஆனால் உண்மையில் பூமிக்கு பாரம் ஆனவர்கள் யார் என்பதை குறிப்பிடும் போது கோதைத் தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரே ஆவார். 

கோதை ஆண்டாள் நாச்சியார் பாடிக்கொடுத்த திருப்பாவை ஐந்தும் ஐந்தும் (5x5+5=30) அதாவது 30 பாடல்களையும் அறியாத மானிடர்களைத்தான் 'பூமிக்கு பாரம்' என்று கணக்கிட்டுள்ளார். 

நாம் எவரும் பூமிக்கு பாரமாக இருக்க விரும்ப மாட்டோம். ஆகவே கோதையின் கீதையை பின்பற்றிச் செல்லுவோம்....

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் 
Vinod Stainless Steel Kadhai

Vinod Stainless Steel Kadhai — 20 cm / 1.7 L

⭐ 4.2 out of 5 (2,672+ மதிப்பீடுகள்)

Extra-thick SAS heavy bottom • Glass lid • Induction & Gas Stove Compatible

Vinod Stainless Steel Kadhai

முக்கிய அம்சங்கள்:

  • 20 cm / 1.7 L — 2–3 பேர்க்கு தக்க அளவு
  • Induction மற்றும் Gas இரண்டிலும் பொருந்தும்
  • கண்ணாடி மூடி — உள்ளே பார்த்து சமைக்க வசதி
  • Food-grade Stainless Steel — நீண்ட ஆயுள்

சிறந்த தினசரி சமையல் பாத்திரம் — சம வெப்பம், குறைந்த எண்ணெய், எளிதான கிளீனிங். 🍳

இப்போதே வாங்குங்கள்

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்