Sri Mahavishnu Info: ஸேனை முதலியார் | Vishwaksena – Commander of Perumal ஸேனை முதலியார் | Vishwaksena – Commander of Perumal

ஸேனை முதலியார் | Vishwaksena – Commander of Perumal

Sri Mahavishnu Info

விக்ஷ்வக்ஸேனர் என அழைக்கப்பெரும் ஸேனை முதலியார், ஐப்பசி மாதம் பூராட நக்ஷத்திரத்திலே அவதரித்தவர்.

எப்படி ஒரு அரசனுக்கு தளபதி என்று ஒருவர் இருப்பாரோ, அதைப் போல பெருமாளுக்கு தளபதியாக இருப்பவர் இவர். கூர்ம புராணத்தில் இவர் பெருமாளின் ஒரு அம்சமே என்று கூறப்பட்டுள்ளது.

மஹாவிஷ்ணுவைப் போலவே நான்கு கைகளுடனும், சங்கு, சக்கரம், கதை, தாமரையுடன் காட்சியளிப்பார். இவரின் மறு அவதாரமாக நம்மாழ்வார் கருதப்படுகிறார். ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமானின் வாயில் காப்பானாக இருக்கிறார்.

அர்ச்சாவதார ரூபியாக எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்களின் ப்ரம்மோற்சவங்களின் போது, அங்குரார்ப்பணத்தன்று விக்ஷ்வக்ஸேனர் மாட வீதிகளில் புறப்பாடு கண்டருளி, நகர சோதனை செய்கிறார். இதன் மூலம் இவர் எம்பெருமான் தளபதியாக கருதப்படுவது நமக்கு புலப்படுகின்றது.

மேலும் இங்கே அடியேன் ஒரு செய்தியினையும் குறிப்பிட விரும்புகிறேன். முற்காலங்களில் திருநக்ஷத்திர தொடக்கம், இவர் அவதரித்த பூராட நக்ஷத்திரத்தில் தொடங்கி, குருபரம்பரையின் ஈடாக இருக்கும் ஸ்வாமி மணவாள மாமுனிகள் அவதார நக்ஷத்திரமான மூலத்துடன் முடிவடைவதாக முன்னோர் கூறுவர்.

பிறகு தான் இது மாறி அஸ்வினி நக்ஷத்திரத்தில் தொடங்கி ரேவதி நக்ஷத்திரத்தில் முடிவு பெறும் வகையில் இப்பொழுதைய வழக்கம் தொடருகிறது.

ஸேனை முதலியார் திருவடிகளே சரணம் 🙏

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்