Sri Mahavishnu Info: ஏன்.. புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது ? ஏன்.. புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது ?
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

ஏன்.. புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது ?

Sri Mahavishnu Info

புரட்டாசி மாதம் வீடு குடி போகலாமா?

தமிழ் மாதங்களில் 6-வது மாதமாக புரட்டாசி வருகிறது. இது கன்னி ராசிக்குரிய மாதமாகும். தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகலாமா?

 போகக்கூடாதா? என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கிறது.

புரட்டாசி மாதம் வீடு குடி போகலாமா?

புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது.

 ஏனெனில் இந்த மாதத்தில் தான் இரணியன் தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியினால் சம்ஹாரம் செய்யப்பட்டார்.

🗿இரணியன் கதை :

இரணியன், பிரம்மனை நோக்கி நீண்டகாலம் தவமிருந்து, எவராலும், எந்த ஆயுதத்தாலும், பகலிலும், இரவிலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் கேட்டான். பிரம்மனும் வரம் அளித்தார். இரணியன் ஆணவம் மிகுந்து, தேவர்களையெல்லாம் அடிமைகளாக்கி, மூன்று லோகங்களையும் ஆட்சி செய்து வந்தான். தேவாதி தேவர்கள் எல்லாம் அவனுக்கு அடிபணிந்து வாழ்ந்தார்கள். துன்பத்தை தாங்க முடியாமல், தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவர் வெகுவிரைவில் இரணியனை கொன்று, அவர்களை காப்பாற்றுவதாக அருளினார்.

தேவேந்திரன் இரணியனைப் பழிவாங்க நினைத்து, இரணியனின் மனைவி கருவுற்றிருந்தபோது அவளை சிலகாலம் ஆசிரமத்தில் வைத்து, நாரதர் மூலம் மகாவிஷ்ணுவின் மகிமைகளை அறிய வைத்தான். இதை அவள் வயிற்றிலிருந்த குழந்தையும் கேட்டு, மகாவிஷ்ணுவின் பக்தனாகியது. அந்தக் குழந்தைதான் பிரகலாதன். அனைவரும் இரணியனையே கடவுளாக வணங்கினார்கள். ஆனால், இரணியனின் மகன் பிரகலாதன் மகாவிஷ்ணுவையே எப்போதும் போற்றி வணங்கினான். அதைப் பொறுக்க முடியாத இரணியன், தன் மகன் என்றும் பார்க்காமல் ஆயுதங்களைக் கொண்டு கொல்ல முயன்றான். தீயில் தள்ளிவிட்டும், கடலுக்குள் தள்ளிவிட்டும், நச்சுப் பாம்புகளை கடிக்கவிட்டும் எத்தனையோ கொடுமைகளை செய்தான். ஆனால், எல்லா ஆபத்துகளிலிருந்தும் மகாவிஷ்ணு பிரகலாதனைக் காப்பாற்றினார்.

'தன்னை எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பவர் ஹரி என்று அழைக்கப்படுகின்ற மகாவிஷ்ணுவேதான்" என்று பிரகலாதன் கூறினான். அதைக் கேட்ட இரணியன், 'அந்த ஹரி எங்கே இருக்கிறான்?" என்று கேட்டான். அதற்கு பிரகலாதன், 'எங்கும் நிறைந்துள்ள இறைவன் இந்தத் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்" என்று ஒரு தூணைக் காட்டினான். இரணியன் ஆவேசத்துடன், தன் கையிலிருந்த கதாயுதத்தால் அந்தத் தூணை அடித்தான். அப்போது, ஸ்ரீமந் நாராயணனாகிய மகாவிஷ்ணு, சிங்க முகமும், மனித உடலும் கொண்ட நரசிம்ம அவதாரத்தில், தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டார்.

அவரைத் தாக்கப் பாய்ந்தான் இரணியன். நரசிம்மர் தன் நகங்களால் அவனது வயிற்றைக் கிழித்து, குடல்களை உருவி, மாலையாக அணிந்து கொண்டார். பூமியிலும், ஆகாயத்திலும் அவன் உடல் படாமல், தமது மடியில் வைத்துக் கொன்றார். அந்த நேரம் இரவுமின்றி, பகலுமின்றி மாலை வேளையாக இருந்தது. மகாவிஷ்ணுவின் பயங்கரமான நரசிம்ம உருவத்தைக் கண்டு, தேவாதி தேவர்கள் எல்லோரும் அருகில் வரப் பயந்து, தூரத்திலிருந்தபடியே வணங்கினார்கள். பக்த பிரகலாதன் அவர் அருகில் சென்று இனிய பாடல்களைப் பாடி வணங்கினான். அப்போது, ஸ்ரீநரசிம்மர் தமது கோபம் தணிந்து, அனைவருக்கும் அருள் புரிந்தார் 
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏 DONATE Support Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚