Sri Mahavishnu Info: பெருமாளின் 8 சயனங்கள் – 8 Divine Sayanams of Vishnu Across Temples பெருமாளின் 8 சயனங்கள் – 8 Divine Sayanams of Vishnu Across Temples

பெருமாளின் 8 சயனங்கள் – 8 Divine Sayanams of Vishnu Across Temples

Sri Mahavishnu Info

தல சயனம் - மாமல்லை

திருமால், உபதேச முத்திரையுடன் வலது கையை மார்பின்மீது வைத்தபடி ஆதிசேஷன்மீது கடல் மல்லையில் பள்ளிகொண்டிருக்கும் காட்சியை ‘தல சயனம்’ என்பார்கள். இங்கு, மூலவரே ‘ஸ்தல சயனப் பெருமாள்’ என்றுதான் அழைக்கப்படுகிறார். புண்டரீக மகரிஷிக்குக் காட்சியளித்ததைப்போலவே தரையில் படுத்து, பக்தர்களுக்கும் காட்சியளிக்கிறார். ஸ்தல சயனப் பெருமாளை வணங்கினால் முற்பிறப்பில் செய்த பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

புஜங்க சயனம் - திருவரங்கம்

‘அரங்கனைக் கண்டதும் பண்ணிய பாவமெல்லாம் என்னைவிட்டுப் பறந்தோடிவிட்டது’ என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட பெருமாளின் சயனம்தான், திருவரங்கம் புஜங்க சயனம். இதை, ‘சேஷ சயனம்’ என்றும் கூறுகிறார்கள். பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் திருவரங்கநாதனைத் தரிசித்தால், பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஜல சயனப் பெருமாளை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.

உத்தியோக சயனம் - சாரங்கபாணிப் பெருமாள் கோயில்

சாரங்கபாணிப் பெருமாள் திருமழிசையாழ்வாருக்காக சயனத்திலிருந்து எழுந்து பேசுவதுபோலவே, உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார். வேறெங்கும் காண முடியாத இந்த அற்புதக் காட்சியை திருக்குடந்தை சாரங்கபாணிப் பெருமாள் கோயிலில் மட்டுமே தரிசிக்க முடியும்.

வீர சயனம் - வீரராகவப் பெருமாள் கோயில், திருவள்ளூர்

உண்ட மயக்கத்தில் ‘எங்கு உறங்கலாம்?’ என்று சாலிஹோத்ர முனிவரிடம் பெருமாள் கேட்க, முனிவர் சுட்டிக்காட்டிய இடத்தில் தெற்கு நோக்கி ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டார் பெருமாள். ‘ராவணனைக் கொன்ற ராமன்தான் பெருமாளாகக் காட்சியளிக்கிறார்’ என்று பாடிய திருமங்கை ஆழ்வாருக்கு, வீரராகவப் பெருமாளாகவே திருவள்ளூரில் காட்சியளிக்கிறார். இங்கு, வீர சயனத்தில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளை வணங்கி, தானம் செய்தால், பலன் பன்மடங்காகப் பெருகும் என்பது நம்பிக்கை.

யோக சயனம் - கோவிந்தராஜப் பெருமாள், திருச்சித்திரக் கூடம்

சிதம்பரம் திருச்சித்திரக்கூடத்தில், கோவிந்தராஜப் பெருமாள் யோக சயனத்தில், தாயார் புண்டரீக வல்லியுடன் காட்சியளிக்கிறார். ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டிருக்கும் கோவிந்தராஜப் பெருமாள் யோக நிலையில் காணப்படுவதால், இவரது சயனத்தை 'யோக சயனம்' என்று கூறுகிறார்கள். யோக சயனப் பெருமாளை வணங்கினால், அனைத்துப் பாவங்களும் விலகும் என்று கூறுகிறார்கள்.

தர்ப்ப சயனம் - ஆதிஜகந்நாதர், திருப்புல்லாணி

மற்ற தலங்களில், பெருமாள்தான் பல்வேறு சயனக் கோலங்களில் அருள்கிறார். ஆனால், திருப்புல்லாணி திருத்தலத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஶ்ரீராமபிரான் சயனக் கோலத்தில் அருள்கிறார். ஆதிசேஷன் லட்சுமணனாக அவதரித்திருந்தபடியால், ராமபிரான் இந்தத் தலத்தில் தர்ப்பைப் பாயில் சயனக் கோலம் கொண்டிருக்கிறார். இந்தத் தலத்து ஆதிஜகந்நாத பெருமாளை வழிபட்ட பிறகே, தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

பத்ர சயனம் (ஆலிலை சயனம்) - வடபத்ர சாயி, ஸ்ரீவில்லிப்புத்தூர்

‘பத்ர’ என்றால் ஆலமர இலை என்று பொருள். பெயருக்கு ஏற்ப பெருமாள் வடபத்ர சயனத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் காட்சியளிக்கிறார். அதனால், மூலவரும் ‘வடபத்ர சாயி’ என்றே வணங்கப்படுகிறார். பக்தர்களின் பாவத்தைப் போக்கவே வடபத்ரசாயி பெருமாள் சுதபா முனிவரின் வேண்டுகோளின்படி காட்சியளித்தார் என்கின்றன புராணங்கள். இவரை வழிபட்டால், கல்யாண வரம் கூடும் என்பது ஐதீகம்.

மாணிக்க சயனம் - நீர் வண்ணன், திருநீர்மலை

‘நீர் வண்ணன்’, ‘நீலமுகில் கண்ணன்’ என பக்தர்களால் அழைக்கப்படும் பெருமாள், நான்கு கரங்களுடன் மாணிக்க சயனத்தில் திருநீர்மலையில் காட்சியளிக்கிறார். பூலோக அவதாரத்தை முடித்த பிறகு வைகுண்டம் செல்லும் பெருமாள் இங்கு நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்று அனைத்து நிலைகளிலும் காட்சிதருவதைத் தரிசிக்கலாம். மாணிக்க சயனப் பெருமாளை வணங்கினால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தூய நெஞ்சத்துடன் பக்தி செய்து...

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பெருமாளின் சயனக் காட்சிகளை வணங்கி, அவனது பேரருளைப் பெற்று, பெறுதற்கரிய பதவியான வைகுண்டப் பதவியை அடைவோமாக!

Mahalakshmi Pyramid

💰 மகாலட்சுமி பிரமிட் 💰

செல்வம், அதிர்ஷ்டம், ஆனந்தம் சேர்க்கும் மூல மகாலட்சுமி பிரமிட்
கோமதி சக்ரம், ருத்ராட்சம், கௌரி கோடி சேர்ந்து வடிவமைக்கப்பட்டது.
வீட்டில் வைப்பதால் வாஸ்து சமநிலை & நிதி வளர்ச்சி கிடைக்கும். 🙏

🌟 மதிப்பீடு: 4.4 / 5 ⭐

🛒 இப்போதே வாங்குங்கள்
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்