Sri Mahavishnu Info: ராமானுஜர் எனும் கட்டமைப்பு ராமானுஜர் எனும் கட்டமைப்பு
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

ராமானுஜர் எனும் கட்டமைப்பு

Sri Mahavishnu Info
ராமானுஜரை அநேகரும் கொண்டாடுகிறோம், ஏன் நாஸ்திகர்கள் கூட அவர் ஆற்றிய சமூக சீர்திருத்தங்களை அடிகோலிட்டு பணிகின்றனர். அவர் பகவத் விஷயமாக சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டார் என்பதை மட்டும் அறிந்தே துறந்த நாஸ்திகர்கள்.

எப்படி ராமானுஜர் அனந்தசரஸில் நீராடி தேவ பெருமானை தியானித்து சந்நியாசம் பூணும் போது துறந்தோம்! துறந்தோம்! துறந்தோம் தாசரதியை (ராமானுஜரின் மருமகன் முதலியாண்டான்) தவிர்த்து அனைத்தும் துறந்தோம் என்பது போலே.

துறவறம் என்றால் அனைத்தையும் துறக்க வேண்டியது தானே, மருமகன் மேல் மட்டும் பற்று எப்படி விசேஷ தர்மமோ, அதே போல் எங்கள் கோட்பாடுக்கு ஏற்றவை மட்டும் எடுத்து கொள்வோம் என்பது எதிர் தரப்பு வாதம்.

துறவறம் என்பது சம்சார பந்தங்களை துறந்தல், ராமானுஜர் மருமகன் முதலியாண்டானை பற்றி கொண்டது பகவத் விஷயத்திற்கு தொண்டாற்றவே.

ஏன் சந்நியாசம் பூண்டும் ராமானுஜர் கிருஹஸ்தாஸ்ரமத்தில் இருந்தே நம் சம்பிரதாயத்தை வளர்த்து எடுத்தார் என்றே கொள்ளலாம் தன் சொந்த பந்தங்கள் கொண்டு. சந்நியாஸத்தில் சொந்தங்களா? உண்டே ஆதலால் தான் அவர் ஒரு புரட்சி மகான்.

  • பிள்ளை: சம்பத் குமாரன்
  • தங்கை: ஆண்டாள்
  • சிஷ்யர்: திருக்குறுங்குடி நம்பி
  • தம்பி: எம்பார்
  • மருமகன்: முதலியாண்டான்.

ஒரு தலைவனை காலம் உள்ள வரை கொண்டாட போகிறோம் என்றால் அவரின் கட்டமைப்பு எத்தகையதாக இருந்திருக்க வேண்டும். அது தலைவனால் மட்டுமே சாத்தியமாகிருக்காது, தொண்டர்களே அதன் அடிநாதம்.

ராமானுஜர் கட்டமைப்புக்கு தொண்டாற்றி அனுக்க்ஷணமும் ராமானுஜரை கட்டமைத்த தொண்டர்கள் பற்றிய குறிப்பே இப்பதிவு.

1. ராமானுஜர் கிரந்தங்கள் படைக்க உறுதுணையாக இருந்தவர்கள்

  • முதலியாண்டான் திருக்குமாரன் கந்தாடையாண்டான்
  • நடாதூராழ்வான்
  • ஸ்ரீ பராசர வேதவ்யாச பட்டர்
  • கூரத்தாழ்வான்

2. எம்பெருமானார் மடத்தில் இருந்த நூலகத்தின் காப்பாளராகவும் & பண்டகசாலை பொறுப்பாளராகவும் இருந்தவர்

  • கூரத்தாழ்வான்

3. ராமானுஜரின் திருவாராதன பெருமாளான பேரருளாளரரை நித்ய திருவாராதனம் செய்தவர்

  • அருளாள பெருமாள் எம்பெருமானார்

4. திருமடைப்பள்ளி கைங்கரியப்பரர்கள்

  • கிடாம்பியாச்சான்
  • கிடாம்பி பெருமாள்

5. மடத்திலுள்ள பசுக்களுக்கு புல் இடுபவர்

  • வடுக நம்பி

6. எம்பெருமானாருக்கு எண்ணெய் காப்பு சாற்றுகைக்கும், உரிய வேளைகளில் பாலமுது சமர்ப்பிப்பதற்கும் கடவர்

  • வடுக நம்பி

7.எம்பெருமானாருக்கு திருமண்காப்பு பணிவிடை

  • முதலியாண்டான்

8. அருளாள பெருமாள் எம்பெருமானார் திருவாராதன உதவி

  • முதலியாண்டான்

9. எம்பெருமானார் திருவீதி எழுந்தருளும் முன் பாதுகைகள் சமர்ப்பிப்பவர்

  • முதலியாண்டான் (நம்பெருமாள் பாதுகை நம்மாழ்வார், நம்மாழ்வாரின் பாதுகை மதுரகவி & ராமானுஜர், ராமானுஜரின் பாதுகை முதலியாண்டான்)

10. ராமானுஜர் சயனத்திற்கு முன் திருப்படுக்கை சோதிப்பவர்

  • எம்பார்

11. ராமானுஜர் சயனித்திருக்கையில் திருக்கால்களை பிடித்துவிடுவபவர்

  • எம்பார்

12. ராமானுஜர் திருப்பறியட்டம் திருத்துபவர்

  • எம்பார்

13. ராமானுஜருக்கு அர்க்யம் பாத்யம் சேர்ப்பவர்

  • எம்பார்

14. திருக்கை செம்பும் ஸ்ரீபாத ரக்ஷையும் எடுப்பவர்

  • கோமடத்து சிறியாழ்வான்

15. வரவு செலவுகளை கணக்கிடுபவர்

  • பிள்ளை உறங்காவில்லிதாசர்

16. கருவூல காப்பாளர்

  • பிள்ளை உறங்காவில்லிதாசர்

17. பாலமுது காய்ச்சுபவர்

  • அம்மங்கியம்மாள்

18. திருத்தளிகை சாதிப்பவர்

  • உக்கலாழ்வான்

19. திருவாராதனத்திற்கும் & திருத்தளிகைக்கும் நீர் சேர்ப்பவர்

  • மாருதியாண்டான்

20. அமுதுபடி சுத்தம் செய்வது & கரியமுது திருத்துவது

  • சிறியாண்டான்

21. ராமானுஜருக்கு திருமேனி காவலர்களாக பணிபுரிந்தவர்

  • வண்டர்
  • செண்டர் (இவர்கள் சோழ படை தளபதிகள்)

22. திருவரங்க காவல் பணி

  • அகளங்க நாட்டாழ்வான்

இப்படி ராமானுஜரை ஆச்ரயித்தோர் பலரும் வெவ்வேறு கைங்கரியங்கள் செய்து வந்தனர். ஒவ்வொரு சிஷ்யரும் எப்பேர்பட்டவர்கள், இப்படியதாக ஓர் அடிதளத்தை கொண்டு தான் ஸ்ரீவைஷ்ணவம் எனும் கட்டுமானத்தை ஸ்திரமாக நிலைநாட்டினார் எம்பெருமானார்.

எம்பெருமானாரை தியானிக்கும் பொழுது அவர் சிஷ்யர்களையும் நினைவுக்கூற வேண்டும்.

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚