Sri Mahavishnu Info: திருப்பாவை ஜீயர் திருப்பாவை ஜீயர்
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

திருப்பாவை ஜீயர்

Sri Mahavishnu Info

🌸 திருப்பாவை ஜீயர் – பகவத் ராமானுஜர்
Thiruppavai Jeeyar – Bhagavad Ramanuja

பகவத் ராமானுஜருக்குத்தான் ‘திருப்பாவை ஜீயர்’ என்ற புனித நாமம் வழங்கப்பட்டது.

திருப்பாவைக்கு ராமானுஜர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்தும் ஒரு சுவையான நிகழ்வு வைணவ மரபில் பெரிதும் பேசப்படுகிறது.

ராமானுஜர், தமது அத்தியந்த சீடரான கிடாம்பி அச்சனுடன், திருமடைப் பள்ளியில் (சமையலறை) அமர்ந்து, தளிகைச் சேவைகள் தொடங்கும் முன்,

சில சிரேஷ்ட இல்லங்களுக்குச் சென்று, சமையலுக்குத் தேவையான பொருட்களை மாதுகரமாகப் பெறுவது வழக்கம். அப்போது ஆண்டாள் அருளிய திருப்பாவையை மிகச் சன்னமான குரலில் பாடிக்கொண்டே செல்வார்.

ஒருநாள், தனது ஆச்சாரியர் பெரிய நம்பிகளின் இல்லத்திற்கு, திருப்பாவை அனுசந்தானத்தோடு சென்றபோது,

திருப்பாவை 18-ம் பாசுரமான “உந்து மதகளிற்றன்… செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய்” என்ற வரிகள் அவரின் உதடுகளில் ஒலித்துக் கொண்டிருந்தன.

அப்போது பெரிய நம்பிகளின் இல்லத்து வாயிற்கதவு தாளிடப்பட்டிருந்தது.

ராமானுஜரின் குரலை நன்கு அறிந்த பெரிய நம்பிகளின் மகள் திரு அத்துழாய் கதவைத் திறந்ததும்,

அவளைக் கண்ட மாத்திரத்திலேயே, ராமானுஜர் மூர்ச்சித்து விழுந்தார்.

அதிர்ச்சியடைந்த திரு அத்துழாய், தந்தை பெரிய நம்பிகளிடம் நடந்ததைச் சொல்ல,

ஞான உத்தமரான பெரிய நம்பிகள், “நீ கதவைத் திறக்கும் போது, ராமானுஜர் அந்தப் பாசுர வரிகளைப் பாடிக்கொண்டிருந்தாரா?” என்று கேட்டார்.

அப்போது அவர் விளக்கியது —

“18-ம் திருப்பாவைப் பாசுரத்தில் வர்ணிக்கப்படும் நப்பின்னை நாயகியை நேரில் தரிசித்த திகைப்பில்தான், ராமானுஜர் மூர்ச்சித்திருக்க வேண்டும்.”

அதன்பின் ராமானுஜரை நோக்கி, “திருப்பாவை ஜீயரே, உந்து மதகளிற்றன் அனுசந்தானமோ?” என்று முகமன் கூறி வரவேற்றாராம்.

திருப்பாவை மீது கொண்ட அசாதாரண பக்தியும், ஆண்டாளின் திருவாக்கியங்களில் முழுமையாக லயித்த நிலையும், பகவத் ராமானுஜருக்கு ‘திருப்பாவை ஜீயர்’ என்ற பெருமைமிகு நாமத்தை வழங்கியது.

🕉️ ஸ்ரீமதே ராமானுஜாய நம: 🙏

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்