Sri Mahavishnu Info: பகவானே எல்லாம் உன் சித்தம் என்று சொல்வது ஏன் தெரியுமா?... பகவானே எல்லாம் உன் சித்தம் என்று சொல்வது ஏன் தெரியுமா?...
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

பகவானே எல்லாம் உன் சித்தம் என்று சொல்வது ஏன் தெரியுமா?...

Sri Mahavishnu Info
மகாபாரத யுத்தத்தின் போது, ஜயத்ரதன் என்பவனை,சூரிய அஸ்தமனத்துக்குள் கொன்று விடுவேன் அல்லது தீக்குளிப்பேன் என சபதம் செய்தான் அர்ஜுனன்.

அன்று காலையிலிருந்தே மறைவாகவே இருந்தான் ஜயத்ரதன்.
துரியோதனன், கர்ணன் போன்றோர் அவனுக்கு பாதுகாவலாக இருந்தனர். அர்ஜுனனால் அவனை நெருங்கவும் முடியவில்லை.
அவனிருக்கும் இடமும் தெரியவில்லை.
மாலை நேரமும் நெருங்கியது.

" என்ன கிருஷ்ணா...
சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே.!...
ஜயத்ரதனை எப்படிக் கொல்வது,"
என்றான் அர்ஜுனன்.

சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார், பகவான். இருள் சூழ ஆரம்பித்தது. இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான்.
"சூரியன் அஸ்தமித்து விட்டான். இனி அர்ஜுனன் தீக்குளித்து விடுவான்" என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான்.

உடன் அர்ஜுனனைப் பார்த்து,
" அதோ ஜயத்ரதன் தலை தெரிகிறது.
ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து, தலை கீழே விழாமல், அருகில் சமந்த பஞ்சகத்திலுள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு." எனறார் கிருஷ்ணர்.

ஜயத்ரதனுடைய தகப்பனார் தான் விருத்தட்சரன். தனது கோரமான தவப்பயனால், ஜயத்ரதனைப் பெற்றார். அவன் பிறக்கும் போது ஒரு அசரீரி ஒலித்தது.. "உன் புத்திரன் மகாவீரனாக எல்லோராலும் கொண்டாடப் படுவான். மிக்க கோபமும், பராக்ரமும் உள்ள வீரன் ஒருவனால், அவன் தலை அறுபட்டு மாள்வான்" என்றது.

இதைக்கேட்ட விருத்தட்சரன், தன் தவ வலிமையால்
"யுத்தகளத்தில் எவன் தன் பிள்ளையின் தலையை கீழே தள்ளுகிறானோ, அவன் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும்" எனறு சாபமிட்டிருந்தான்.

இந்த விபரத்தை அர்ஜுனனுக்கு சொல்லி" உன்னால் அறுபட்டு இந்தத்தலை கீழே விழுந்தால், உன் தலை வெடித்து விடும். அதனால் அருகிலுள்ள அவன் தகப்பனார் விருத்தட்சரன் மடியில் அந்தத் தலையைத் தள்ளு ," என்றார் கிருஷ்ணன்.

அர்ஜுனனும் அப்படியே செய்தான். அந்த சமயம் விருத்தட்சரன் பூமியில் அமர்ந்து சந்தியோபாசனம் செய்து கொண்டிருந்தார், மடியில் தலை விழுந்ததை கவனிக்கவில்லை.

பிறகு அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்த போது, அவரது மடியில் ஏதோ கனமாக இருப்பதைக் கண்டு கீழே தள்ளினார். அது பூமியில் விழுந்தது. தன் மகன் தலையைக் கீழே தள்ளுபவனின் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும் என்ற சாபத்தால், விருத்தட்சரனின் தலை வெடித்துச் சிதறியது.

நாம் என்னதான் சூழ்ச்சி செய்தாலும், சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், அதைத் தீர்மானம் செய்வதும், நடத்தி வைப்பதும் பகவான் தான். 

அதனால் எல்லாப் பொறுப்புகளையும், பகவானிடம் ஒப்புவித்து விட்டு, "பகவானே.! உன் சித்தம்.! எது நல்லதோ, அதைச் செய் என்று சொல்லி, அவனைச் சரணடைந்தால் போதும். நம்மைக் காப்பாற்ற வேண்டியது அவன் கடமை. அவன் செய்வான்....

"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்"

‌...ஓம் நமோ நாராயணா

🌿 நல்ல அதிர்ஷ்டம் தரும் Lucky Bamboo 🌿

Lucky Bamboo 3 Layer

🍀 வீட்டில், அலுவலகத்தில் செல்வம், ஆரோக்கியம், அமைதி சேர்க்க உதவும் Ugaoo Lucky Bamboo – 3 Layer Feng Shui செடி. 🪴 பராமரிக்க எளிது, நீண்ட காலம் பசுமையாக இருக்கும்!

  • 💚 வீட்டிற்கு நேர்மறை ஆற்றல் தரும்
  • 🎁 பரிசளிக்க சிறந்த தேர்வு
  • 🌱 Feng Shui & Vastu இரண்டிற்கும் ஏற்றது
  • ⭐ 4.2/5 மதிப்பீடு – 7,400+ விமர்சனங்கள்
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்