📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

கருட புராணம் - 02

Sri Mahavishnu Info
02. முன்னுரை

பதினெட்டு புராணங்களில் ஒன்று கருடபுராணம். எழுதியவர் வியாசர். இது இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். பெயரைப் பார்த்ததும், விஷ்ணுவின் வாகனமான கருடனைப் பற்றிய வரலாறு இதில் இருக்கிறதோ என்று எண்ணி விட வேண்டாம். அப்படியானால், கருடபுராணம் என்று பெயர் வைப்பானேன்!  இந்த விஷயத்தை ஸ்ரீமன் நாராயணன், கருடனுக்கு முதலில் உபதேசம் செய்தார். கருடன் கேட்ட புராணம் என்பதால், அது கருட புராணமாயிற்று.

வைணவ புராணமான இதில்  மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, வாழ்வுக்குப் பின் உயிர்கள் எங்கே போகின்றன? சொர்க்கம் நரகம் உண்டா? அங்கே என்னென்ன சுகதுக்கத்தை உயிர் அனுபவிக்கிறது, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி விளக்குகிறது. இப்புராணத்தில் வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தின கட்டமைப்பு மற்றும் பண்புகள் பற்றி விவாதிக்கிறது. மொத்தம் பத்தொன்பது ஆயிரம் செய்யுட்கள் கொண்ட இப்புராணம், பூர்வ கந்த மற்றும் உத்திர கந்த என்ற இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.

அதை பவுராணிகரான (புராணக்கதை வல்லுநர்) சூதமுனிவர், மற்ற ரிஷிகளுக்கு உபதேசித்தார். இப்புராணத்தில், நரகத்தை நிச்சயிக்கும் பாவங்களைப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து மீளவும் வழி சொல்லித் தருகிறது. துன்பம் வரும்போதும், வியாதிகள் வரும்போதும், இனி உயிர் வாழமாட்டோம் என்ற நிலை வரும் போதும் தான் கடவுளின் நினைப்பு நமகெல்லாம் வருகிறது. காலங்கடந்து உணர்வதில் பயனில்லை என்பதையும் இப்புராணம் நமக்கு உணர்த்துகிறது.

கருடபுராணத்தில் பிறப்பு, இறப்பு, தானம், தருமம், தவம், சடங்குகள், சொர்க்கம், நரகம், மறுபிறப்பு என்று மனித வாழ்க்கைக்குத் தேவையான எல்லா விவரங்களும் சொல்லப்பட்டுள்ளன. இப்புராணம் படித்துப் பயப்படுவதற்காக மட்டுமல்ல அல்ல: மனத்தைப்பக்குவப்படுத்திக் கொள்வதற்காகவும் தான்.
பொதுவாக, இதை வீடுகளில் வாசிப்பதில்லை. ஆனால், துக்கவீட்டில் இதை வாசித்தால், கேட்பவர்கள் சொர்க்கம் செல்வர் என்பது ஐதீகம். வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய புராணம் இது என்பது மட்டும் நிஜம். தவறுகள் குறைய இந்த கருடபுராணம் வழிவகுக்கும். மொத்தத்தில் அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும் என்பதை உணர்த்தும் நூல் கருடபுராணம்.

உலகில் உயிரினங்களுக்கு பிறப்பும் இறப்பும் எந்தக் காரணத்தால் உண்டாகின்றன? எந்த காரணத்தால் தீராத நோய்கள் வருகின்றன? எதனால் முக்தி மோட்சம் கிடைக்கும்? ஜெனனம் எடுத்து பூமியிலே வாழ்ந்து வளர்ந்து அனுபவமடைந்து மரணம் அடைந்த பிறகு எந்தச் செய்கையால் சொர்க்கமும், நரகமும் அடைய நேரிடுகிறதென கூறப்படுகிறது? என்று நைமிசாரணியவாசிகள் கேட்டதற்கு சூதமா முனிவர் கூறிய புராணம் இது. வாழ்விற்கு அப்பால் ஜீவன் செல்லும் வழி வகைகளை விளக்கும் நூல்.

சிரார்த்தம்
ஒவ்வொரு உயிரின் எண்ண உணர்வதிர்வுகள் அந்த ஜீவனை கட்டு படுத்துகின்றன. இந்த அதிர்வுகள் நீக்கி அவை விடுபட்டு செல்ல இந்த சிரார்த்தம் வழிவகை செய்கிறது. இதன் விளைவாக உடலை விட்ட உயிரானது எல்லாவகை உணர்வு பிணைப்புகளில் இருந்தும், அதிர்வுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டு தக்க உலகத்தை சென்றடையும்.

வருடம் ஒருமுறை முன்னோர்கள் இறந்த திதியில் செய்யப்படும் சிரார்த்தத்தை தவிர அமாவாசை மகாளயபட்சம், மாதப்பிரப்புகள், சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஆகிய நாட்களில் செய்யப்படும் தர்ப்பணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தந்தை இறந்த பிறகே தர்ப்பணம் செய்யும் உரிமை மகனுக்கு வருவதாக சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. அப்படி செய்யப்படும் தர்ப்பணங்கள் தந்தை வழியில் முன் தோன்றிய முன்னோர்கள் ஆறு பேருக்கும், தாய் வழியில் முன் தோன்றிய ஆறு பேருக்கும் சேர்த்து, மொத்தம் பன்னிரண்டு பேருக்கு செய்யவேண்டும். அதாவது மூன்று தலைமுறைகளுக்கு செய்ய வேண்டும்.

காசி, கயா, பத்ரிநாத், இராமேஸ்வரம் போன்ற புண்ணிய தளங்களில் பிரம்மகுண்டத்தில் பித்ருக்களுக்கு சிரார்த்த கர்மங்களை செய்துவிட்டால் பிறகு வருடந்தோறும் வீட்டில் அவர்கள் இறந்த திதியில் கர்ம காரியங்கள் செய்யவேண்டியதில்லை என்று ஒரு நம்பிக்கை உள்ளது.

இது தவறு. புண்ணிய தளங்களில் செய்வதால் அதிக புண்ணியமும், பலனும் கிடைக்கும். அதனால், தொடர்ந்து வருடா வருடம் தவறாமல் பிதுர் காரியங்களை தவறாமல் செய்ய வேண்டும்.

கருடபுராணத்தை படிக்க துவங்குவதற்கு முன், மேற்கண்ட விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

இப்புராணமானது பகவான், கருடனுக்கு கூறும் கேள்வி – பதில் பாணியில்  அமைந்துள்ளது.

இனி, வியாசர் அருளிய பதினெட்டு புராணங்களில் ஒன்றான கருட புராணத்தை பகவானை வணங்கி படிக்க தொடங்குவோம்......
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்