Sri Mahavishnu Info: கருட புராணம் - 03 கருட புராணம் - 03

கருட புராணம் - 03

Sri Mahavishnu Info
03. சூதமாமுனிவர்

பெருமாள் திருமாலின் உந்தியில் பிரம்மதேவன் தோன்றி இவ்வுலகம் அனைத்தையும் படைத்தார். தவம் புரிவதற்குச் சிறந்த இடமாக ஆரணியங்களுகெல்லாம் அரசாக விளங்குவது நைமிசாரணியம்.

புராணங்களைச் சொல்வதில் வல்லவரான சூதமாமுனிவர் அங்கு வந்து கொண்டிருந்தார். வேத வேதாங்கங்களை ஐயந்திரிபற கற்று உணர்ந்தவர்களும் ஸ்ரீ-ஹரிகதா சங்கீர்த்தன சீலர்க்களுமான கவுனகர் முனிவர்கள் ஆசார சீலர்களாய், சொரூபத்தியானம் செய்பவர்களாய் கூடியிருந்தார்கள்.

சௌனகாதிமுனிவர்கள் எதிர்கொண்டு வரவேற்று நன்கு உபசரித்து உயர்ததொரு ஆசனத்தில் அமரச் செய்து பூஜித்து வணங்கினார்கள்.          அருந்தவ முனிவர்கள் அனைவரும் சூதபுராணிகளுக்கு அஞ்சலி செய்து,

“சூதமாமுனிவரே! தங்களிடமிருந்து பல புராணங்களை கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். ஆகவே விஷ்ணு சம்பந்தப்பட்ட உயர்ந்த ஒரு புராணத்தைத் தாங்கள் சொன்னால் நாங்கள் கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறோம். தாங்களோ பகவானின் அம்சமாக விளங்கும் வேத வியாச முனிவரின் சீடர். நீங்கள் அறியாதது ஒன்றுமில்லை. தர்மார்த்த கர்ம மோட்சம் எனப்படும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப்புருசார்த்தங்களையும் கொடுப்பதாகிய சாத்வீகமான புராணம் ஒன்றை தேவரீர் கருணை கூர்ந்து எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று பணிவோடு கேட்டார்கள்.

அவர்களின்  வேண்டுகோளுக்கு இணங்கி சூதமாமுனிவர் தம் குருநாதரான வியாச மகரிஷியின் திருவடித் தாமரைகளைத் தமது இருதயத்தில் தியானித்து, பிறகு சிரசின்மேல் தம்மிரு கரங்களையும் குவித்து, சர்வஜெகத்காரணனும், ரட்சகனுமான ஸ்ரீமத் நாராயணனைத் தொழுது வணங்கி பூஜித்து விட்டு, சௌனகாதி முனிவர்களை நோக்கி, “அருந்தவ முனிவர்களே! நீங்கள் நல்லதொரு கேள்வியை கேட்டீர்கள். தேவதேவன் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முப்பெருந்தொழில்களை செய்பவனும், புருசோத்தமனுமான  ஸ்ரீமத் நாராயணனை, முன்பு ஒரு சமயம் பட்சிராஜனான ஸ்ரீ கருடாழ்வான்  பணிந்து, இப்போது நீங்கள் என்னிடம் கேட்டது போன்றதொரு கேள்வியை உலக நன்மையின் பொருட்டுக் கேட்டான். அதற்கு ஸ்ரீமந் நாராயணன் தக்க விடையளித்தார். அந்தக் கதையை திருமால் கருடனுக்குக் கூறியவாறே நானும் உங்களுக்குச் சொல்கிறேன் கேளுங்கள்.” என்று சூதமாமுனிவர் கூற ஆரம்பித்தார்.

உன் திருவடியில் நிரந்தரமான பக்தியை எனக்குக் கொடு!

இறைவனிடம் பக்தன் எதையும் கேட்கக் கூடாது என்கிறது கருடபுராணம். இப்படி சொல்வது நமக்குப் புதுமையாக இருக்கும். நாம் விரும்பியதை எல்லாம் கேட்பதற்குத் தானே கடவுள் இருக்கிறார் என்று நினைக்கிறோம். 

ஒரு குழந்தைக்குத் தாய் பார்த்து பார்த்து, பணிவிடை செய்வாள். தூங்கும் குழந்தையைக் கூட எழுப்பி, பாவம் பசியோடு குழந்தை தூங்குகிறதே! என்று பாலூட்டுவாள். அதே போல் தான் இறைவனும்! அவர் தாயன்போடு நம்மை காத்தருள்கிறார். இந்த நம்பிக்கை ஒருவனுக்கு ஆழமாக இருந்தால், இதைக் கொடு அதைக் கொடு என்று கேட்கத் தோன்றாது.

பக்தனுக்கு எதை எப்போது கொடுக்கவேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் இறைவனைத் தவிர வேறொருவர் இல்லை. இதை உணர்ந்தவர்கள், இறைவா! உன் திருவடியில் நிரந்தரமான பக்தியை எனக்குக் கொடு! என்று மட்டும் கேட்பார்கள்.
RAISOM சிறப்பு பூஜை விளக்கு

🪔 சிறப்பு பூஜை விளக்கு – RAISOM

  • பித்தளை: சங்க, சக்கரம், திலக வடிவில்
  • உயரம்: 3.5 இன்ச் | எடை: 145g
  • பயன்பாடு: வீடு, அலுவலகம், கோவில்
  • சிறந்த பரிசு: கிரஹபிரவேசம்
🛒 அமேசானில் இப்போது வாங்க
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்