Sri Mahavishnu Info: எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 26 எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 26
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 26

Sri Mahavishnu Info
(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)
அனுப்பியவர் :
திருமதி.ஜெயந்திமனோகர்,சிவகங்கை.

என் வாழ்க்கையில் எம்பெருமாளின் அனுகிரகத்தை பெற்றதை அனைவருடன் பகிர்ந்து கொள்ளுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் ஒரு அறிவியல் ஆசிரியை. முதன் முதலில் 2007ல் புதுக்கோட்டை மாவட்டம் ஆலவயல் என்ற ஊரில் அரசு மேல்நிலைப்பள்ளியில்  பணியேற்ப்பு செய்தேன். ஆனால் நான் சிவகங்கை யிலிருந்து தினமும் காலையில் 5.30மணிக்கு பஸ் ஏறினால்  திருப்பத்தூர் - பொன்னமராவதி - ஆலவயல் பள்ளிக்கு 8.45மணியளவில் சென்றடைய முடியும். சிவகங்கையிலிருந்து செல்லும் போது திருக்கோட்டியூர் பெருமாள் கோயில் உள்ளது.அங்கே பஸ் நிறுத்தம் உள்ளதால் தினமும் காலையில் 6.45மணிக்கு கோபுரதரிசனம் எனக்கு கிடைக்கும்.

அப்போதெல்லாம் செளமிய நாராயணரிடம் கேட்பேன் நீ மட்டும் ஜம்னு படுத்துக்கொண்டு இருக்கிறாய் என்னை மட்டும் இப்படி தினமும் காலையிலும் மாலையிலும் 3+3 ஆறு மணி நேரம் பஸ்ஸிலேயே. அலைய வைக்கிறாய். எனக்குத் தெரியாது என் மகன் அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்பு செல்லும் போது நான் அவன் அருகில் இருந்து படிக்க வைக்க வேண்டும் என்று தினமும் ஸ்கூல் போகும் போதும் மாலையில் வீடு திரும்பும் போதும் திருக்கோட்டியூரில் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் போதெல்லாம் பெருமாளிடம் கேட்டுக்கொண்டே இருப்பேன்.சில சமயங்களில் கோபபட்டு திட்டுவேன்.ஆனால் என்னே எம் பெருமானின் திருவருள்  திருக்கோட்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது என்ற செய்தி கேட்டு மிகவும் ஆச்சரியமடைந்தேன். அந்த‌ இடம் போட்டிகளுக்குள்‌ எனக்கே‌ கிடைக்க கருணை காட்டி என்னை அரவனைத்து நினைக்கும் போதெல்லாம் சென்று தரிசனம் செய்யும் பாக்கியத்தை யும் அருளிய பெருமாளை எப்படி என்ன சொல்ல 11 வருடங்கள் அதே பள்ளியில் பணியாற்றி 2008-2018 ஏப்ரல் மாதத்தில் பணிநிறைவு பெற்றேன்.

நீங்களும் உங்கள் வாழ்வில்  பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம்.
  • ➤ உங்கள் பக்தி அனுபவம் பகிர
  • 📚 அர்த்தமுள்ள இந்து மதம் – 10 பாகங்கள் முழுத் தொகுப்பு!

    🙏 இந்து மதம், சனாதன தர்மம் மற்றும் ஆன்மிக அறிவை வளர்க்கும் அரிய PDF நூல்கள் ஒரே இடத்தில்!

    ✨ இதில் இடம்பெறும் நூல்கள்:

    • அர்த்தமுள்ள இந்து மதம் (1-10 பாகங்கள்)
    • 100 ஆண்டுகள் வாழ்வது எப்படி?
    • ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்
    • ஆன்மிக வினா – விடை தொகுப்புகள்
    • மேலும் பல அரிய சனாதன தர்ம நூல்கள்...
    💰 சிறப்புச் சலுகை விலை ₹199 ₹999
    💜

    பக்தர்கள் சொல்கிறார்கள்

    இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
    🌸 ரமேஷ், மதுரை

    இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
    🌼 சிந்து, தஞ்சாவூர்

    இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
    🌺 கிருஷ்ணன், கோவை

    என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
    🌹 சுகந்தி, சென்னை

    நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
    💠 லலிதா, ஈரோடு

    இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
    🌿 அருண், திருநெல்வேலி

    WhatsApp
    CHANNEL
    🛕
    📜
    🏠
    🎧
    📚