Sri Mahavishnu Info: பாவங்கள் போக்கும் சிறந்த தானங்கள் | Best Bestowal to Clear Sins பாவங்கள் போக்கும் சிறந்த தானங்கள் | Best Bestowal to Clear Sins
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

பாவங்கள் போக்கும் சிறந்த தானங்கள் | Best Bestowal to Clear Sins

Sri Mahavishnu Info

பாவங்கள் செய்யத மனிதர்களே இல்லை. சந்தர்ப்பம், சூழ்நிலை அப்படி அமைந்துவிடுவது உண்டு. சற்று, சுமாரான நிலையை வாழ்வில் எய்தியவுடன், செய்த தவறுக்கு பரிகாரம் செய்ய உள்மனசு துடிக்கும்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக பரிகாரம் செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால், அவர்கள் கீழ்க்காணும் ஏதாவது ஒரு தானம் செய்து, மனம் திருந்தி வாழ்வது நல்லது.

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கு/மனவளம் குன்றியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும்.

அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது.

இவைகளை விட சிறந்த புண்ணியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இதனை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் கூட விலகும் என சில ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.

பசுவிற்கு பழங்கள், அகத்திக்கீரை அளிப்பதும் - ஒரு சிறந்த புண்ணிய காரியம் ஆகும். பிராமண சமூகத்தில் - இன்னொரு மிகச்சிறந்த விஷயம் நடைமுறையில் இருக்கிறது. கோ தானம் என்று பெயர். ஆச்சார, அனுஷ்டானங்களில் ஈடுபாடுள்ள, சற்று வசதியுள்ள குடும்பத்தில் இது நடைமுறையில் உள்ளது. அவர்கள் குடும்பத்தில் - தாயோ, தந்தையோ இறந்து விட்டால் அவர்கள் ஞாபகார்த்தமாக - ஆரோக்கியமான பசு ஒன்றை வாங்கி - ஒரு கோசாலைக்கு தானம் அளிக்கிறார்கள்.

இறந்துபோன அவர்கள் ஆத்மா சாந்தி அடைய, அந்த பசு கறக்கும் பாலில் - அதிகாலையில் - அந்த கோசாலை அருகில் இருக்கும் - சிவன் ஆலயத்திற்கோ, பெருமாள் ஆலயத்திற்க்கோ - அந்த பாலில் இருந்து அபிசேகம் செய்கிறார்கள். அந்த பசுவினை நல்ல முறையில் பராமரித்து, போஷிப்பது - அந்த கோசாலை உரிமையாளரின் கடமை ஆகும். அந்த பசுவினால் வரும் இதர வருமானம் முழுவதும் அவருக்கே.

சுமார் ஒரு வருடம், அவர்கள் முதல் திதி கொடுக்கும் வரை - நாள் தவறாது - இறைவனுக்கு பாலபிசேகம் செய்யும் வழக்கம்க்கடைபிடிக்கப்படுகிறது.

இதனால், இறந்து போனவரின் ஆத்மா சாந்தி அடைந்து - அந்த குடும்பத்திற்கு சகல ஐஸ்வர்யங்களும் தங்கு தடையின்றி கிடைக்க வலி ஏற்படுகிறது.

நீங்களும் இதைக் கடைபிடிக்க நினைத்தால், வசதி வாய்ப்பு இருந்தால் - நீங்களும் செய்யலாமே..!!

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚