Sri Mahavishnu Info: எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 29 எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 29
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 29

Sri Mahavishnu Info
(பக்தர்கள் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)

அனுப்பியவர் : S.ருக்மணி, புதுடெல்லி

என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். பெருமாள் எனக்கு காட்டிய வழி. சுமார் 20 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்  புதுடெல்லியில் வசிப்பவர்களாகிய நாங்கள் 20 நபர்கள் திருப்பதிக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதற்காக திருப்பதிக்கு பெருமாள் கோவிலுக்கு  பயணம் மேற்கொண்டோம். எனக்கு காலில் ஆணி என்பார்களே அந்த தொந்தரவு என்னால நடக்க மிக்க சிரமமாய் இருந்தது. வீட்டில் எழுந்த எல்லா எதிர்ப்பையும்  மீறி நான் பெருமாளை சேவிக்க போகத்தான் போகிறேன் என்று பிடிவாதமாக கிளம்பிவிட்டேன் என் ஸ்நேகிதிகளினுடன் திருப்பதி வந்த பின், இரவு தங்குவதற்கு இடம்  கிடைக்காமல் எப்படியோ தனி தனி அறையாக எடுத்து  தங்கினோம். மறுநாள் விடியற்காலை தரிசினத்திற்கு ஏற்பாடு  எல்லோரும் இந்த கால்களோடு எப்படி நடப்பாய் என்று கேட்டனர். பெருமாள் என்னை நடத்தி செல்வார் என்றேன்.  என் மகன் முதல் முயற்சியில் CA தேர்ச்சி பெற்று இருந்தான் ஆகையால் கண்டிப்பாக நான் பெருமாளை காண வேண்டும் என்றேன் இரண்டு தோழிகளின் தோளின்  மேல் கை போட்டு கொண்டு மெல்ல நடந்தேன்.  நன்றாக தரிசனம் முடிந்தது. அடுத்து திருச்சியில் உள்ள கோவிலில் என் தம்பி அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததால் அதற்காக நான் மறுநாள் அங்கு செல்ல வேண்டும் நான் திருச்சிக்கு செல்ல இருந்ததால் என் உடன் வந்தவர்கள் என்னை சென்னை பேருந்து ஏற்றி விட்டார்கள் அங்கு இருந்து திருச்சி செல்ல வேண்டும் நான் தனியாக இதுவரை பயணம் செய்ததில்லை அன்று தான் முதல் முறை திருப்பதியில் இருந்து சென்னை சென்று விட்டேன் அங்கு இறங்கி எந்த பேருந்து ஏற வேண்டும் எங்கு செல்ல வேண்டும் என்று எனக்கு எதுவுமே தெரியவில்லை பிறகு என் தம்பியின் தொலைபேசி மூலம் சொன்னார் அதன்படி திருச்சி பேருந்தில் ஏறி அமர்ந்தேன் அங்கு இருந்து எப்படி திருச்சி வந்தேன் என்று எனக்கு இப்போது நினைத்தாலும் பிரம்மிப்பாகவே இருக்கும் எப்போதும் என்னை வழிகாட்டிக் கொண்டிருக்கும் கோவிந்தன் இருக்க எனக்கு எந்த கவலையும் இல்லை  பிறகு அபிஷேகம் அலங்காரம்  எல்லாம் கண் குளிர பார்த்து விட்டு பின் சுகமாக டில்லிக்கு திரும்பி சென்றேன். என் வாழ்வில் பிறகு நல்ல திருப்பம், கால் ஆணி தொந்தரவு நீங்கியது,.  நாராயணீயம் கற்று கொண்டு பாராயணம் செய்ய ஆரம்பித்தேன். என் வாழ்வில் பெருமாள் காட்டிய வழியை என்னால் மறக்க முடியாது.

நீங்களும் உங்கள் வாழ்வில்  பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம்.
  • ➤ உங்கள் பக்தி அனுபவம் பகிர
  • தேங்காய் துடைப்பம்

    🧹 இயற்கை தேங்காய் துடைப்பம்

    🌿 100% இயற்கை தேங்காய் குச்சியால் தயாரிப்பு
    💪 மிகவும் பலம் – உடையாது, நீண்ட நாட்கள் பயன்படும்
    🏡 வீடு, மாடி, தோட்டம் சுத்தம் செய்ய சிறந்தது
    ✨ தூசி, குப்பை எளிதில் அகற்றும் திறன்
    📦 3 துடைப்பம் கொண்ட value pack
    🔥 தினசரி பயன்பாட்டுக்கு super choice!

    ⚡ இன்று order பண்ணுங்க !

    🔗 இப்போது வாங்க
    💜

    பக்தர்கள் சொல்கிறார்கள்

    இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
    🌸 ரமேஷ், மதுரை

    இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
    🌼 சிந்து, தஞ்சாவூர்

    இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
    🌺 கிருஷ்ணன், கோவை

    என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
    🌹 சுகந்தி, சென்னை

    நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
    💠 லலிதா, ஈரோடு

    இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
    🌿 அருண், திருநெல்வேலி

    WhatsApp
    CHANNEL
    🛕
    📜
    🏠
    🎧
    📚