Sri Mahavishnu Info: எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 5 எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 5

எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 5

Sri Mahavishnu Info
(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)

அனுப்பியவர் : S. வசந்தி 
புதுக்கோட்டை

வணக்கம் திருப்பதி ஏழுமலையான் எனது வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை பகிர விரும்புகிறேன்  நான் தினமும் உச்சரிக்கும் நாமம் நாராயணா என்பதே என்னிடம் பலரும் கேட்பார்கள் ஏன் அடிக்கடி நீங்கள் நாராயணா என்று சொல்கிறீர்கள் என ஏனெனில் அந்த அளவுக்கு எனக்கு அவரை பிடிக்கும் எனக்கு 25  வயது இருக்கும் நான் சென்னையில் வசித்து வந்த என் மூத்த சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன் அப்போது அங்கிருந்து திருப்பதி சென்றோம் சென்னைக்கு அருகில் திருப்பதி இருப்பதால் வீட்டிலேயே நேரடியாக ரூம் எதுவும் போடாமல் சென்றுவிட்டோம் அன்று தரிசனம் அதிக நேரம் கழித்து தான் கிடைத்தது தரிசனம் முடிந்து வெளியில் வந்த போது இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிட்டது வெளியில் வந்ததும் எனக்கு மிகவும் குளிர ஆரம்பித்தது காரணம் அது குளிர் மாதம் குளிர் தாங்காமல் எனக்கு அழுகை வந்தது என் சகோதரியின் கணவர் ரூம் எதுவும் கிடைக்கிறதா என பார்க்கிறேன் என்று ரூம் தேட ஆரம்பித்தார் பஸ் கீழே செல்ல விடியற்காலை ஆகும் எனக் கூறி விட்டார்கள்

என்ன செய்வது என்று தெரியாமல் பெருமாளை நோக்கி கேள்வி எழுப்பினேன் நாராயணா உன் தரிசனம் காணவே வந்தேன் உன் தரிசனம் காணும் வரை உள்ளே எனக்கு துளியளவும் குளிர் தெரியவில்லை ஆனால் வெளியில் வந்ததும் இப்படி குளிர்கிறது என்னால் தாங்க முடியவில்லை ஏன் எனக்கு சோதனை தருகிறீர்களா எனக்கு ஏதாவது இதற்கு உதவி செய்யுங்கள் என வேண்டினேன் அப்போது ஒரு பெண்மணி என் சகோதரியிடம் கேட்டார் ஏன் இந்தப் பெண்மணி அழுகிறாள் என்று என் சகோதரியின் நாங்கள் தரிசனம் முடிந்து வீட்டிற்குச் சென்று விடலாம் என எண்ணி ரூம் எதுவும் செய்யவில்லை தரிசனம் தாமதமானதால் கீழே செல்லவும் இயலவில்லை 

குளிர் தாங்கமுடியாமல் அழுகிறாள் என கூறினார் அந்த பெண்மணி பெங்களூரைச் சேர்ந்தவர் தரிசனத்திற்காக காத்திருந்த போது வரிசையில் எங்களுக்கு பின்னால் எங்களுடன் உரையாடிக் கொண்டே வந்தார் உடனே அந்த பெங்களூர் பெண்மணி என் ரூமில் இரண்டு அறைகள் உள்ளது அதில் ஒரு அறையை நீங்கள் உபயோகித்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார் என் சகோதரியின் கணவரும் ரூம் கிடைக்கவில்லை என திரும்பி வந்துவிட்டார் பிறகு பெருமாளைப் பார்த்து என் கவலைக்கும் வேண்டுதலுக்கும் உடனே செவி சாய்த்து அந்த பெண்மணி மூலம் கருணை மழை பொழிந்த என் நாராயணருக்கு நன்றி கூறி இரவு அங்கேயே தங்கி விடியலில் ஊருக்கு கிளம்பி வந்தோம் இது போன்று இன்னும் பல அற்புதங்கள் நிகழ்த்தி உள்ளார் 

என் வாழ்வில் இன்றும் நான் சனிக்கிழமை விரதம் கடைப்பிடித்து வருகிறேன் என் நாராயணரை வழிபடவே இன்னும் சில காலம் வாழ வேண்டும் என விரும்புகிறேன் என் நாராயணரின் மற்ற அவதாரங்களான ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் அனைவரும் என் பூஜை அறையில் வைத்து வழிபட்டு வருகிறேன் 

நீங்களும் உங்கள் வாழ்வில்  பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்

அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173
RAISOM சிறப்பு பூஜை விளக்கு

🪔 சிறப்பு பூஜை விளக்கு – RAISOM

  • பித்தளை: சங்க, சக்கரம், திலக வடிவில்
  • உயரம்: 3.5 இன்ச் | எடை: 145g
  • பயன்பாடு: வீடு, அலுவலகம், கோவில்
  • சிறந்த பரிசு: கிரஹபிரவேசம்
🛒 அமேசானில் இப்போது வாங்க
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்