(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)
அனுப்பியவர் : மஞ்சுளா (செவிலியர்)
ஈரோடு மாவட்டம்
வணக்கம் நான் படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு சிறிய சம்பவம் நடந்தது எங்கள் ஊரில் ஒரு சிறிய ராமர் கோயில் உள்ளது கடைசிப் புரட்டாசி சனிக்கிழமை அன்று கோவிலில் சென்று அங்கு சேவைகள் எல்லாம் அனைத்தும் செய்து விட்டு வீட்டுக்கு வரும்போது மணி ஒரு ஒன்பது மணி இருக்கும் அப்பொழுது இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்தது அப்போது என் மன நிலையை மாற்ற மடிக்கணினி எடுத்து உபயோகித்து கொண்டு இருந்தேன் மடிக்கணினியில் சார்ஜர் போட்டு இருந்தேன் 10.30 மணி இருக்கும் அப்பொழுது ஒரு 30 மணி துளிகள் எனக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை திடீரென்று என் மடியில் இருந்த மடிக்கணினி கீழே விழுந்திருந்தது சிறிது நேரத்திற்கு பிறகு எழுந்தேன் பிறகு கோவிந்தா என்று சொல்லியே இருந்தேன் ஏன் அப்படி சொன்னேன் என்று கூட எனக்கு தெரியவில்லை
எனக்கு அடிக்கடி ஒரு சந்தேகம் இருக்கும் நாம் இறக்கும் தருவாயில் அவரின் நாமத்தை உச்சரித்தால் அவரிடமே சென்று விடுவோம் என்று ஆனாலும் அந்த இறக்கும் தருவாயில் அப்படி நினைக்க முடியுமா என்று என்று எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது அன்று எனக்கு கடவுளே அது உண்மைதான் என்று நிரூபித்தது போல இருந்தது அந்த நேரத்திலும் அவரின் நாமத்தை உச்சரிப்பது என்னை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்தது பிறகு அன்று மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும் பொழுது மின் இணைப்பில் வரும் பீஸ் கர் கீழே விழுந்துள்ளது எனது வீடு ஓட்டு வீடு மேலே உள்ள ஓடுகள் எல்லாம் சிதைந்துவிட்டது
அன்று இடி விழுந்ததில் ஒரு வாழை மரமே எரிந்துவிட்டது மின்சார அடுப்பு செயலிழந்து விட்டது இவை அனைத்துமே இப்படி ஆகிவிட்டது ஆனால் அந்த மடிக்கணினி வைத்திருந்த எனக்கு எதுவும் ஆகவில்லை அந்த பீஸ் கர் மட்டும் தானாகவே கீழே விழுந்துள்ளது என்றால் கடவுளே பார்த்து எனக்காக செய்தது போலிருந்தது எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் சொல்வதும் அதேதான் நீ அவரு ஆலயத்திற்குச் சென்று இவ்வளவு சேவைகள் செய்வதற்காக அவரே உன்னை வந்து காப்பாற்றியதாக சொன்னார்கள் அந்த நேரத்தில் அவர் மட்டும் அந்த பீஸ்கேர் எடுக்காமல் இருந்தால் அன்றே நான் கரிக்கட்டையாக ஆகியிருப்பேன்.
பிறகு அரசு செவிலியர் தேர்வில் தேர்ச்சி பெற்று இப்போது நான் மருத்துவமனையில் வேலை செய்து கொண்டிருக்கிறேன் இந்த வேலை செய்ய அவரின் ஆசிர்வாதம் தான் நான் தேர்ச்சி பெற்ற பிறகு அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்துவிட்டது ஆனால் அங்கு சென்று பார்க்கும் போது இங்கு காலியிடம் இல்லை என்று சொன்னார்கள் நான் ஈரோடு மாவட்டம் திருவண்ணாமலை வருவது எனக்கு மிகுந்த தூரம் சரி இருந்தாலும் செய்யலாம் என்று வந்தால் இங்கு வந்தால் காலியிடம் இல்லை என்று சொல்கிறார்கள் எனக்கு மிகுந்த வருத்தம் ஆகி விட்டது நாம் தேர்வில் தேர்ச்சி பெற்று வந்த பிறகும் நமக்கு இது போல் ஆகி விட்டதே என்ற வருத்தம் பிறகு சென்னை சென்று இரண்டு நாட்கள் அங்கேயும் தேடிச் சென்றோம்
பிறகு திருவண்ணாமலைக்கு சென்று என் மாமாவுக்கு தெரிந்தவர் வீட்டில் தங்கியிருந்தோம் அவர் அவர் உதவி மூலமாக DMS ஆபிஸ் ஒருவரின் உதவி பெற்று எனது மாவட்டத்திலேயே எனக்கு பணி கிடைத்தது திருவண்ணாமலைக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும்போதே நான் ராம ராம என நினைத்துக்கொண்டே எனக்கு திருவண்ணாமலையில் வேலை கிடைத்தால் உங்களை வந்து பார்ப்பது மிகவும் கஷ்டம் என நினைத்து கொண்டே சென்றேன் அவரை நினைத்துக்கொண்டே பேருந்தில் பயணிக்கும் போது எனக்கு அழுகை வந்து கொண்டிருந்தது அந்த அழுகைக்கு அவர் எனக்கு இதை பரிசாக தந்தது ஆகவே நான் உணர்கிறேன் நீ இவ்வளவு துன்பப்படும்போது உன்னை தவிக்க விடுவேனோ என்று சொல்வது போல இருந்தது சொல்ல வார்த்தைகளே இல்லை
நீங்களும் உங்கள் வாழ்வில் பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்
அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173
Follow Us