Sri Mahavishnu Info: எனது வாழ்வில் பெருமாள் பகுதி - 9 எனது வாழ்வில் பெருமாள் பகுதி - 9
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

எனது வாழ்வில் பெருமாள் பகுதி - 9

Sri Mahavishnu Info
(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)
அனுப்பியவர் ; கிருஷ்ணமூர்த்தி   லலிதா
(திருப்பதி  மாமா) - திருநெல்வேலி 

அனைவருக்கும்  வணக்கம் கருணை கடல் ஆனந்த நிலையத்தின் அமுதம் திருப்பதி ஏழுமலையான் எனது வாழ்வில் நடத்திய அற்புதம் சொல்ல வார்த்தைகள் கிடைக்காது அனைத்தும் எம்பெருமான் எனக்கு அருளிய அமுதம் 

நான் திருப்பதி ஏழுமலையான் ஸ்ரீவாரி சேவைக்கு (உழவாரப்பணி) கடந்த 15  வருடங்களாக மக்களை மாதமாதம் அழைத்துச் செல்வது வழக்கம் இந்த  முறை  என்னுடன் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து  சுமார் 75 பேர் வந்திருந்தார்கள் நான்கு மாதங்களுக்கு முன்னால் ரயிலில்  முன்பதிவு தொடங்கும் தேதியில்  படுக்கை வசதியுடன் முன்பதிவு செய்து விடுவேன் பின்னர் திருப்பதி சேவை முடித்து வரும் வழியில் அனைவரும் என்னிடம் டிக்கெட் பணம் தருவார்கள் நாங்கள் 11/11/2011 அன்று திருப்பதி சேவைக்கு கிளம்பினோம் சேவை முடிந்து 17/11/2011 அன்று மாலை கிழ்திருப்பதிக்கு வந்து ஸ்ரீனிவாசா காம்ப்ளக்சில் லாக்கர் போட்டு தங்கினோம் மறுநாள் மதியம் 12 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் தான் ரயில்  எனவே  காலையில் T.T.D தேவஸ்தானம் மூலம் காலை 6 மணிக்கு பேக்கேஜ் டூர் பஸ் தினசரி கிளம்பும் காலை 10 மணிக்கு திரும்ப ஸ்ரீனிவாசா காம்ப்ளக்ஸ்  வந்து விடும் அதில் பேக்கேஜ் டூர் போவது என தீர்மானம் செய்தோம் அதன்படி கிளம்பினோம்

ஆனால்  ஓரிடத்தில் பஸ் பிரேக்  டவுன்   ஆனது ஒருவழியாக சரிசெய்து அலர்மேல்மங்காபுரம் வரும்போது மணி 10.40 சீக்கிரம் தரிசனம் முடித்து விடலாம் என வரிசையில் நின்றோம் கூட்டம் மிக அதிகமாக இருந்தது மணி 11.20 ஆகிவிட்டது வரிசை நகரவே இல்லை வேறு வழி இல்லாமலும் ரயில் 12 மணிக்கு பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் நான் எல்லோரையும் வெளியில் வரும்படி அழைத்தேன் 

ஒரு வழியாக அனைவரையும்  அழைத்துக் கொண்டு ஸ்ரீனிவாசா காம்ப்ளக்ஸ் வரும்போது மணி 11.40 வேகமாக  லாக்கர் மற்றும் அறைகளை காலி செய்து கிடைத்த ஆட்டோவில் ஏறி ரயில் நிலையத்தில்  வந்து இறங்கும் போது மணி 11.55  அனைவரும் எந்த முன்பதிவு பெட்டி கிடைத்தாலும் ஏறிக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டேன்  முதலாவது நடைமேடையில் ரயில் புறப்பட தயாராகியிருந்த நேரத்தில் ஒடி சென்று ஏறிவிட்டோம் யார் எந்த பெட்டி  என தெரியாமல் அனைவரும் ஏறியதும் ரயில் கிளம்பியது பெருமாள் கிருபை இது  நான் ஆட்டோவில் இருந்து இறங்கும் போது என்னுடைய பை ஒன்றை தவற விட்டு விட்டேன் ரயிலில் தேடினால் பையை காணோம் அதில்தான் அனைவரது டிக்கெட்  மற்றும் பணம் இருந்தது நிமிடத்தில் ஆடிபோனேன் பெருமாளே...என்ன செய்ய போறேன் என பரிதவித்து இருகரம் கூப்பி கண்ணீர் மல்க ஆபத்பாந்தவனை மனமுருகி பிரார்த்தனை செய்த போது பையைகொண்டு வந்து கொடுத்தார் ஆட்டோ டிரைவர்  நீங்கள் தவறவிட்ட பையை ஓடி வந்து கொடுத்ததாக கூறினார் 

திருமலையப்பனை கோவிந்தா கோவிந்தா என சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணி கண்ணீருடன் பெற்றுக் கொண்டேன் ரயிலில் என்னுடன் சேவைக்கு  வந்த அனைவரும்  பெருமாளின் கருனையை நினைத்து  போட்ட கோவிந்தா கோஷம் ரயிலை தாண்டி திருமலையை தொட்டது என்னப்பன் கருனையை சொல்ல வார்த்தைகளே இல்லை

கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 

நீங்களும் உங்கள் வாழ்வில்  பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்
 
அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏 DONATE Support Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚