Sri Mahavishnu Info: கஷ்டங்கள் நீங்க... தூப வழிபாடு..!! கஷ்டங்கள் நீங்க... தூப வழிபாடு..!!

கஷ்டங்கள் நீங்க... தூப வழிபாடு..!!

Sri Mahavishnu Info
கஷ்டங்கள் எல்லாம்... புகைபோல் மறைந்து போக... மகாலட்சுமியை இப்படி வழிபடுங்கள்...!!

வெள்ளிக்கிழமை என்றவுடன் நம் நினைவிற்கு வருவது மகாலட்சுமி தான். நம் வாழ்வில் செல்வங்களை அள்ளி தரும் மகாலட்சுமியை அனைத்து தினத்திலும் வணங்கலாம். ஆனால் வெள்ளிக்கிழமையில் வணங்குவது இன்னும் சிறப்பானது.

அதன்படி,  வெள்ளிக்கிழமை  அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனை வணங்கினால், நம்மையும் நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வாள்.

பணம் நமக்கு கிடைப்பது போல இருக்கும். ஆனால் கடைசியில் எல்லாம் கைநழுவி போய்விடும். வீட்டு வாசல் வரைக்கும் வந்த மகாலட்சுமி, நம் வீட்டிற்குள் வந்திருக்க மாட்டாள்.

இது நமக்கு நடக்கும் கெட்ட நேரமாக கூட இருக்கலாம் அல்லது இதற்கு கண் திருஷ்டியும் ஒரு காரணமாக இருக்கலாம். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க ஒரு சிறந்த வழிபாட்டினை பார்க்கலாம்..

மகாலட்சுமியை வழிபட உகந்த கிழமை:

மகாலட்சுமியை வீட்டிற்கு வரவழைக்க வெள்ளிக்கிழமை ஒரு சிறந்த நாளாகும். மற்ற கிழமையில் மகாலட்சுமியை வழிபட்டாலும் சிறப்பு தான். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் தினந்தோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபடுங்கள். 

வழிபடும் முறை :

பூஜை அறையை சுத்தப்படுத்தி, இறைவனின் திருவுருவப் படங்களுக்கு பொட்டு மற்றும் பூ வைத்து கொள்ளவும்.

ஒரு மஞ்சள் நிற துணியில் சிறிதளவு கல் உப்பு, ஒரு சின்ன வசம்பு துண்டு, மூன்று மிளகு வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை பூஜை அறையில் மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பு வைத்து விடுங்கள்.

விளக்கேற்றி பூஜை செய்த பின் அந்த முடிச்சு மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பு அப்படியே சிறிது நேரம் இருக்கட்டும். 

பூஜை முடிந்த பின்பு தூப காலில் இந்த முடிச்சை எடுத்து வைத்து, இந்த முடிச்சில் கொஞ்சமாக நெய் விட்டு மேலே ஒரு பச்சை கற்பூரம் வைத்து பற்ற வைத்து விடுங்கள். எரியும்போது கொஞ்சமாக தேன் விடலாம் (தேன் நெருப்பை சாந்தி செய்வதற்காக).

இந்தப் புகையை உங்களுடைய வீடு முழுவதும் காண்பித்து விட்டு, மீண்டும் பூஜை அறையில் வைத்து விட வேண்டும். 

பின் அந்த புகை சூழ்ந்த இடத்தில் ஐந்து நிமிடங்கள் அமர்ந்து, உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களெல்லாம் சரியாக வேண்டும், துன்பங்கள் எல்லாம் தவிடுபொடியாக வேண்டும், தடைகள் எல்லாம் நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். 

இந்த வழிபாட்டினை 3 வெள்ளிக்கிழமைகளில் முயற்சி செய்து பாருங்கள். நல்ல முன்னேற்றம் தெரியும்.

வழிபாட்டின் நன்மைகள் :

இந்த வழிபாட்டின் மூலம் வீட்டில் உள்ளவர்களுக்கு நிம்மதியான சூழ்நிலை உண்டாகும்.

சண்டைகள் நீங்கி வீட்டில் சகல ஐஸ்வர்யமும் பெறுவீர்கள்.
     
பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.

சுபகாரிய தடை அல்லது குழந்தைகள் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரியாகிவிடும்.
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்