Sri Mahavishnu Info: ஸ்வாமி முதலியாண்டான் வைபவம் | Swami Mudaliandan Vaibhavam ஸ்வாமி முதலியாண்டான் வைபவம் | Swami Mudaliandan Vaibhavam

ஸ்வாமி முதலியாண்டான் வைபவம் | Swami Mudaliandan Vaibhavam

Sri Mahavishnu Info
ஸ்வாமி முதலியாண்டான் வைபவம் | Swami Mudaliandan Vaibhavam
ஸ்வாமி முதலியாண்டான் திருநட்சத்திரம் சித்திரை புனர்பூசம் 

இராமானுசன் பொன்னடி
யதிராஜ பாதுகா
வைஷ்ணவதாசர்
திருமருமார்பன்
இராமானுச திருதண்டம்
நம்வதூல தேசிகன்
வைஷ்ணவசிரபூஷா
ஆண்டான்

என்று வைணவப் பெரியோர்களில் கொண்டாடப்படும் "ஸ்வாமி முதலியாண்டான்" திரு நஷ்சத்திரம்  சித்திரை புனர்பூசம் 

ஸ்ரீராமானுஜரின் சகோதரியான நாச்சியாரம்மாள், அனந்த நாராயண தீக்ஷிதருக்கும் திருக்குமாரராய் ஸௌம்ய வருஷம் (கி.பி. 1027) "சித்திரை மாதம் புனர்பூசம்" பூந்தமல்லிக்கு அருகில் பச்சை வர்ணபுரம் (தற்போதைய நசரத்பேட்டை) எனும் ஊரில் அவதரித்தார்.

"தாசரதி" எனும் இயற்பெயருடைய ஸ்வாமி, இராமானுசரின் 
மருமகன் ஆவார்.

ஸ்ரீராமானுஜர் சன்யாசம் பெற்றுக் கொண்டவுடன் அவரை அடிபணிந்து அவருடைய சீடரானார். பின்னாளில் 'சீடர்கள் அனைவருக்கும் இவரே முதல்வராயிருந்தபடியால் முதலியாண்டான் எனப்பட்டார்'

திருக்கோட்டியூர் நம்பி, ஸ்ரீராமானுஜருக்கு சரம ஸ்லோக அர்த்தத்தை அதிகரிக்க இசைந்த போது தண்டும் பவித்திரமுமாய் அவர் மட்டுமே வர வேண்டும் என்று நியமித்தார். 

ராமானுஜரோ, கூரத்தாழ்வானையும் முதலியாண்டானையும் கூட அழைத்துச் சென்றார். தேவரீருடைய நியமனப்படியே தண்டும் பவித்திரமுமாக வந்துள்ளேன். 

இந்த முதலியாண்டானே திரிதண்டம்; ஆழ்வானே பவித்திரம் என்று அருளிச் செய்தார்*. இவ்வாறாக எம்பெருமானுடைய திரிதண்டமாகிற ஸ்தானத்தை அடைந்தவர் முதலியாண்டானே

ராமனுஜரின் பாதுகையாக ஸ்வாமி முதலியாண்டான் கொண்டாடபடுகிறார். இவருக்கே 'யதிராஜ பாதுகா' என்ற திருப்பெயர் உண்டு

ஸ்வாமி முதலியாண்டான் அருளிச் செய்த முதல் பகவத் விஷயமான முதல் திருவந்ததாதி தனியன்

கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த
பொய்கைப் பிரான் கவிஞர் போரேறு – வையத்
தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி
படி விளங்கச் செய்தான் பரிந்து 

ஸ்வாமி முதலியாண்டான் தனியன் :

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா |
தஸ்ய தாசரதே பாதௌ சிரஸா தாரயாம்யஹம் ||

"யதிராஜருக்குப் (ஸ்ரீராமானுஜர்) பாதுகை (திருவடிநிலை) என்று போற்றப்படும் தாசரதி மஹாகுருவின் திருவடி நிலைகளை என் தலையால் தாங்கி வணங்குகிறேன்

வாழி திருநாமம் :

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தான் வாழியே
சித்திரையில் புனர்பூசம் சிறக்க வந்தோன் வாழியே
சீபாடியம் ஈடுமுதல் சீர்பெறுவோன் வாழியே
உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே
ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதொறும் வாழியே

முதலியாண்டான் திருவடிகளே சரணம்
பெரிய நம்பிகள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
விளக்கு படம்

🪔 சிறப்பு பூஜை விளக்கு – RAISOM

  • பித்தளை: சங்க, சக்கரம், திலக வடிவில்
  • உயரம்: 3.5 இன்ச் | எடை: 145g
  • பயன்பாடு: வீடு, அலுவலகம், கோவில்
  • சிறந்த பரிசு: கிரஹபிரவேசம்
🛒 அமேசானில் இப்போது வாங்க
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்