Sri Mahavishnu Info: குழந்தை பிரகலாதருக்கு உயர்ந்த ஞானம் எவ்வாறு கிடைத்தது ? குழந்தை பிரகலாதருக்கு உயர்ந்த ஞானம் எவ்வாறு கிடைத்தது ?
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

குழந்தை பிரகலாதருக்கு உயர்ந்த ஞானம் எவ்வாறு கிடைத்தது ?

Sri Mahavishnu Info
அசுரன் ஹிரண்யகசிபுவின் மகனாகப் பிறந்த பிரகலாதர் சிறு வயதிலேயே மாபெரும் ஞானத்துடன் திகழ்ந்தார். இஃது அனைவருக்கும் தெரிந்த கதை. அந்த ஞானம் பிரகலாதருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது தெரியாத துணுக்கு.

ஹிரண்யகசிபு தன் ராஜ்ஜியத்தை விட்டு, கடுந்தவம் புரிவதற்காக மந்தராசல மலைக்குச் சென்றான். அப்பொழுது அவனது மனைவியான கயாது கர்ப்பவதியாக இருந்தாள். அவள் இன்னுமோர் அசுரனைக் கருவில் சுமந்து கொண்டிருக்கிறாள் என்று எண்ணிய தேவர்கள் அவளைச் சிறைப்பிடித்தனர். குழந்தைப் பிறந்தவுடன் அதைக் கொன்று விட வேண்டும் என்பது அவர்களுடைய திட்டம். அவர்கள் கயாதுவை ஸ்வர்க லோகத்திற்குக் கொண்டுச் சென்றபொழுது, வழியில் அவர்களைத் தடுத்து நிறுத்திய நாரத முனிவர், கருவில் இருப்பது மாபெரும் *நாராயண பக்தர்*,” என்று கூறி, ஹிரண்யகசிபு திரும்பி வரும்வரை அவளைப் பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு, அவளைத் தமது ஆஷ்ரமத்திற்கு அழைத்துச் சென்றார்.

ஆஷ்ரமத்தை அடைந்த கயாது, கர்ப்பத்திலுள்ள தன் குழந்தைக்குப் பாதுகாப்பளிக்கும்படி நாரதரிடம் வேண்டினாள், தன் கணவர் தவத்திலிருந்து திரும்பி வந்த பின்னரே குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமென்று விரும்பினாள். நாரதரும் அதற்கு உறுதியளிக்க, கயாது பெரும் பக்தியுடன் நாரதருக்கு சேவை செய்யத் தொடங்கினாள். அச்சமயத்தில் நாரத முனிவர் கயாதுவிற்கும்  அவளது கருவிலிருந்த குழந்தைக்கும் பகவத் விஷயங்களை நீண்ட காலம் உபதேசித்தார்.

பிரகலாதர் கர்ப்பத்தினுள் இருந்தபோதிலும், நாரதரின் திவ்யமான உபதேசங்களைக் கேட்பதற்கான அந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டார். கயாதுவின் விருப்பப்படி பிரகலாதர் அவளது வயிற்றிலேயே நீண்ட நெடுங்காலம் தங்கியிருந்தார். ஹிரண்யகசிபு தவத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்த பின்னர் கயாது மகனைப் பெற்றெடுத்தாள். பெண்ணாக இருந்த கயாதுவினால் நாரதர் வழங்கிய உபதேசங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஆயினும், நாரதரின் கருணையினால் பிரகலாதர் அவை எல்லாவற்றையும் நினைவில் வைத்திருந்தார்.

-ஆதாரம்: ஸ்ரீமத் பாகவதம் 7.7.2-16
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏 DONATE Support Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚