Sri Mahavishnu Info: கடவுளும் ஒரு பானையும் கடவுளும் ஒரு பானையும்
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

கடவுளும் ஒரு பானையும்

Sri Mahavishnu Info
இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் ஒரு பானையை கொடுத்து அனுப்புகிறார்... 

அந்த பானை முழுவதும் நாம் நிறைவோடு வாழ்வதற்கு தேவையான எல்லா பொக்கிஷங்களும்  நிறைந்திருக்கும்!

உணவு, உடை, இருப்பிடம், அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவுகள், கல்வி, கருணை,  அமைதி, நிம்மதி, சந்தோஷம்,  நல்லெண்ணம், அன்பு, ஆரோக்கியம், பக்தி, தியாகம் இதுபோன்ற நிறைய பொக்கிஷங்கள் அதில் இருக்கும், 

ஆனால் எந்த பொக்கிஷத்தையும் நாம் முழுமையாக அனுபவிப்பது இல்லை, 

காரணம் நம் பார்வையெல்லாம் அடுத்தவன் பானைமீது தான் இருக்கிறது! 

ஒரு சிலர் செம்பு பானையோடு செல்வார்கள் அதைப்பார்த்து ஏங்குவோம்! 

ஒரு சிலர் வெள்ளிப்பானையுடன் செல்வார்கள் அதைப்பார்த்து ஏங்குவோம், 

ஒரு சிலர் தங்கப்பானையோடு செல்வார்கள் அதைப்பார்த்தும்  ஏங்குவோம்! 

எப்படியாவது அந்த ஆடம்பரமான பானையை அடைந்துவிடவேண்டும் என்று போராடுவார்கள், ஆனால் இவர்களுக்கு தெரிவதில்லை மண்பானையில் இருக்கும் எந்த பொக்கிஷமும் அதில் முழுமையாய் இல்லையென்று! 

அருகில் சென்று உங்களுக்கு மட்டும் எப்படி தங்கப்பானை கிடைத்தது என்று கேட்க, எனக்கும் மண்பானை தான் கொடுத்தார், 

நான் தான் நிறைய சம்பாதித்து இந்த பானையை வாங்கினேன் என்றதும், 
ஓடி ஓடி சம்பாதித்து தங்கப்பானை வாங்கிவிடுவார்கள், 

ஆனால் உள்ளே எதையும் வைக்கமுடியாது, வெளியுலகுக்கு மட்டும் தங்கப்பானை கவுரவமாகவும்  பெருமையாக இருக்கும்! 

இந்த பானை கிடைத்த சந்தோஷத்தில் மண்பானையை தூக்கி எறிந்துவிட்டு அதில் இருந்த பொக்கிஷங்களை எடுத்து தங்கப்பானையில் திணிப்பார்கள் 

சில பொருத்துக்கொள்ளும் 
சில சிதறிவிடும், 

சிதறியவற்றை பற்றி கவலைப்படாமல் தங்கப்பானையோடு வாழ்வதே சந்தோஷம் என்று வாழ்வார்கள் 

காலம் மாற மாற  அடைத்து வைத்த பொக்கிஷங்கள் எல்லாம் 

தங்களது இயல்பு நிலையை இழந்து அங்கே இருக்க முடியாமல் பானையை சிதைத்துக்கொண்டு வெளியேறிவிடும்! 

இறுதிகாலத்தில் சிதைந்த பானையில் இருக்கவும் முடியாமல், பொக்கிஷங்களையும் இழந்துவிட்டு, தெருத்தெருவாக அலைவோம், 

நம்மை தாக்குவதற்காக விதவிதமான எதிரிகள் நோய்கள் என்ற பெயரில் கொடூரமாக தெருக்களில் உட்கார்ந்து இருப்பார்கள்! 

தெருவை கடப்பதற்குள் ஆளுக்கொரு பக்கம் கடித்து குதற ரத்த காயங்களோடு தப்பித்து ஓடிவருவோம், 

ஆரோக்கியம் என்ற பொக்கிஷத்தின் அருமை அப்போதுதான் தெரியும்! 

தங்கப்பானைக்குள் அடங்காததால் வெளியே வீசியெறிந்தது அப்போது தான் நினைவுக்கு வரும்! 

ரத்த காயங்களுக்கு மருந்துபோட உறவுகளையும் நட்பையும் தேடுவோம்! 

பானையில் இடமில்லை என்று பொய்யாக விரட்டியடித்தது தவறு என்று இப்போது புரியவரும், 

யாருமற்ற நிலையில் நோய்களிடமிருந்து காத்துக்கொள்ள அந்த மண்பானையாவது கிடைக்காதா என்று தேடி அலைவோம் ...

ஏதோ ஒரு தெருவோரத்தில் உடைந்த நிலையில் சாய்ந்தபடி அந்த மண்பானை கண்ணில் தெரியும், 

ஆசை ஆசையாய் ஓடிச்சென்று பார்ப்போம், அம்மா அப்பா என்ற பொக்கிஷங்கள் இறந்துபோயிருக்கும்,

மனைவி குழந்தைகள் உறவுகள் நட்புகள் அமைதி நிம்மதி சந்தோஷம் என்ற பொக்கிஷங்கள் எல்லாம் சிதைந்து போயிருக்கும்! 

ஆரோக்கியம் எனும் பொக்கிஷம் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும்! 

அன்பு கருணை தியாகம் பக்தி என்ற  பொக்கிஷங்கள் மட்டும் எந்தவித சேதமும் இன்றி எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி 

காயம் பட்டவர்களுக்கு மருந்து தடவிக்கொண்டு இருக்கும்! 

மண்பானையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நல்லமுறையில் 
வாழவேண்டும் என்று நினைக்கும் போது 

Excuse me...  

உங்களுக்கு கொடுத்த time முடிஞ்சிடுச்சி, 

அந்த பானையையும் பொக்கிஷங்களையும் திருப்பி தரமுடியுமா !?
என்று கேட்டபடி ஒருவர் நிற்பார்! 

யார் நீங்க?? என்றால்  கடவுள் என்று சொல்லியபடி உடைந்த பானையையும் சிதைந்த பொக்கிஷங்களையும் தூக்கிச்செல்வார்! 

ஏக்கத்தோடு அவரையே பார்த்து நிற்க, பின்புறத்தில் ஏதோ கரடுமுரடான சத்தங்கள் கேட்டு திரும்பி பார்த்தால் நம்மை தேடியலைந்த நோய்களெல்லாம 
கொடூரமான முகத்தோடு 
ரத்தவெறியுடன் ஓடிவரும்!  

அப்புறமென்ன கண்ணிமைக்கும் நேரத்தில் கதம் கதம்!! 

கடவுள் தந்த அந்த பானையையும் பொக்கிஷங்களையும் எங்கு வைத்திருக்கிறீர்கள் என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

படைத்தவன் பானைதேடி எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏 DONATE Support Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚