Sri Mahavishnu Info: செல்வம் பெருக சில குறிப்புகள் செல்வம் பெருக சில குறிப்புகள்

செல்வம் பெருக சில குறிப்புகள்

Sri Mahavishnu Info

நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பணவரவு ஏற்படும்.

அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக் கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.

வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர்,உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது.பணம் ஓடிவிடும்.

பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்யபலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.

வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும்.

அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும். யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசை தான்.

பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும். 45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்கு அளித்திடவும். இதனை தொடர்ந்து செய்துவர பணத்தடை நீங்கும்.

வெள்ளிக் கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேக த்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.

பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.

பசும் பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக் கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.

பாசி பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறு நாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.

தினசரி குளிக்கும் முன் பசுந் தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.

குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்

தமிழ் மாதத்தில் முதல் திங்கட் கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம். பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.

அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப் பெட்டியில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.

குடியிருக்கும் வீட்டில் வட கிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம் செய்வாள்.

மகாலட்சுமிக்கு இளஞ் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசிய முண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.

வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ண மியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.

ஐப்பசி மாத வளர் பிறையில் மகா லட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்