Sri Mahavishnu Info: Cambodia Angkor Wat - அங்கோர் வாட் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் Cambodia Angkor Wat - அங்கோர் வாட் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

Cambodia Angkor Wat - அங்கோர் வாட் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

Sri Mahavishnu Info

Cambodia Angkor Wat - அங்கோர்வாட்
Cambodia Angkor Wat - அங்கோர்வாட்

அங்கோர் வாட் என்பது, அங்கோர், கம்போடியாவில் உள்ள முன்னதாக பகவான் விஷ்ணுவுகாக கட்டப்பட்டு பின்னர் புத்த மதக் கோயிலாக மாறிய ஒரு கோவிலாகும்.

இது 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும்.

இது இரண்டாம் சூரியவர்மன் என்பவரால் 12ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் கட்டப்பட்டது.

இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.

திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள்.

இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை.

40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும்.

கம்போடியாவின் முக்கிய வருவாயே இக்கோவிலை நம்பித்தான் என்றும் கூறுவர்.
இந்தக் கோயிலின் ஒரு பக்கச் சுற்றுச் சுவரின் நீளம் மூன்றரை கிலோமீட்டர். இந்தக் கோயிலுக்குள் நம் தமிழகத்து ஸ்ரீரங்கம் கோயிலைப் போன்று 20 கோயில்களை அடைக்கலாம்.

இந்த கோவில் எவ்வளவு பெரியது எனில் பூமியிலிருந்து 20,000 மீ உயரம் மேலே சென்று படம்பிடித்தால்தான் இதை முழுமையாக படம்பிடிக்க முடியும். (அவ்வளவு பெரியது) இக்கோயிலை மேலிருந்து பார்க்கும்போது மூன்று அடுக்குகளாகத் தோற்றமளிக்கிறது.

முதல் அடுக்கில் உள்ள சுவரில் ராமாயணம், மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.

இரண்டாம் அடுக்கின் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

மூன்றாம் அடுக்கில் விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது.

மேலும், இக்கோயிலுக்கு மிகப் பெரிய நான்கு நுழைவுவாயில்களும் உள்ளன. கெமர், தமிழ்க் கலைகளைக் கொண்டு கட்டப்பட்டிருப்பதால் கம்போடிய அரசின் தேசியக் கொடியில் தேசியச் சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
சூரியவர்மன் இறந்த பிறகு ஆட்சிக்கு வந்த ஏழாம் ஜெயவர்மன் இதை பவுத்தக் கோயிலாக மாற்றினார்.

1992-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அங்கோர் வாட்டை உலக மரபுச் சின்னமாக அறிவித்ததுடன், அதிகம் சிதைவுறாமல் பராமரித்தும் வருகிறது. உலகிலேயே மிகப் பெரிய கலைவடிவமாகக் கருதப்படும் இக்கோயிலை பார்க்க, ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கில் மக்கள் வருகிறார்கள்.

இன்றளவும் வியந்து பார்க்க வைக்கும் சிற்பங்கள், கட்டிடத் திறமையை காட்டும் விதமாக இந்த கோயில் அமைந்துள்ளதால் தான் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கக் கூடிய இடமாக அமைந்துள்ளது.

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்