ஸ்ரீமத் பாகவதம் ''கலி காலம்,கலியுகம், எப்படி இருக்கும்?- சுக ப்ரம்ம ரிஷி கணிப்பு'' श्रीशुक उवाच ततश्चानुदिनं धर्म: सत्यं शौचं क्षमा दया । कालेन बलिना राजन् नङ्क्ष्यत्यायुर्बलं स्मृति: ॥12.2.1 ॥śrī-śuka uvāca tataś cānu-dinaṁ dharmaḥ satyaṁ śaucaṁ kṣamā dayā kālena balinā rājan naṅkṣyaty āyur balaṁ smṛtiḥபரீக்ஷித் ராஜாவுக்கு அவனது வாழ்வின் கடைசி ஏழு நாட்களில் எத்தனையோ விஷயங்களை சொல்கிறார் சுக ப்ரம்மம். அதில் அவர் அவனுக்கு பிறகு இந்த உலகம் கலியுகத்தில் எவ்வாறு இருக்கும் என்று தனது ஞான த்ரிஷ்டியால் கவனித்து சொல்வது நமது இன்றைய நிலைமையை தான். ஆஹா எப்படித்தான் இவ்வளவு கன கச்சிதமாக சுக ப்ரம்ம ரிஷி முன்கூட்டியே ஆணி அடித்தது மா திரி சொல்கிறார்! இந்த ருசிகரமான தகவலை தெரிந்துகொள்ளவேண்டாமா? ஸ்ரீமத் பாகவதத்தில் 12வது காண்டம் 2வது அத்தியாயத்தில் இதெல்லாம் அப்பட்டமாக இருக்கிறது.
''பரீக்ஷித், மதம், சத்யம், சுத்தம், பொறுமை, கருணை, இரக்கம், வாழ்வின் அளவு, தேக பலம், , ஞாபக சக்தி எல்லாமே கலியுகத்தில் குறைந்து போகும். அது கலி புருஷனின் சக்தி.
वित्तमेव कलौ नृणां जन्माचारगुणोदय: ।धर्मन्यायव्यवस्थायां कारणं बलमेव हि ॥ २ ॥ 12.2.2vittam eva kalau nṝṇāṁ janmācāra-guṇodayaḥ dharma-nyāya-vyavasthāyāṁ kāraṇaṁ balam eva hiகலியுகத்தில் எல்லோரும் பணம் ஒன்றை தான் மதிப்பார்கள். பணம் உள்ளவன் தான் சிறந்த குளத்தில் உதித்தவன், நல்லவன், அருமையான குணம் படைத்தவன் நேர்மை நீதி, நாணயம் எல்லாம் அவன் பக்கம் தான் பேசும். அதைத்தான் இப்போது கண்கூடாக காண்கிறோம்.
दाम्पत्येऽभिरुचिर्हेतुर्मायैव व्यावहारिके ।स्त्रीत्वे पुंस्त्वे च हि रतिर्विप्रत्वे सूत्रमेव हि ॥ ३ ॥12.2.3dāmpatye ’bhirucir hetur māyaiva vyāvahārike strītve puṁstve ca hi ratir vipratve sūtram eva hiதேகத்தின் மேல் உள்ள ஆசை தான் ஆண் பெண்ணை தம்பதியாக்கும். ஏமாற்றுவது தான் சிறந்த புத்திசாலித்தனம் என்று வியாபாரம் நடக்கும். ஆணும் பெண்ணும் உடல் கவர்ச்சியால் தான் மதிக்கப்படுவார்கள். வெறும் பூணல் கயிறை, நூலை மாட்டிக்கொண்டவன் பிராமணன் என்று அறியப்படுவான்.
लिङ्गमेवाश्रमख्यातावन्योन्यापत्तिकारणम् । अवृत्त्या न्यायदौर्बल्यं पाण्डित्ये चापलं वच: ॥12.2.4liṅgam evāśrama-khyātāv anyonyāpatti-kāraṇam avṛttyā nyāya-daurbalyaṁ pāṇḍitye cāpalaṁ vacaḥவெறும் வேஷத்தில் தான் ஒருவனை ஆன்மீக வாதி, என்று மதிப்பார்கள். ஒவ்வொருவனும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வேஷம் போட்டு வாழ்வான். பணத்தை வைத்து தான் ஒவ்வொருவனையும் எடை போடுவார்கள். வார்த்தை ஜாலத்தால் ஆகாசத்தில் பந்தல் போடுபவர்கள் தான் புத்திசாலிகளாக, சிறந்த அறிஞனாக கருதப்படுவார்கள். அடேயப்பா எவ்வளவு துல்லியமாக சுகப்பிரம்ம ரிஷி 5000 வருஷங்களுக்கு முன்பே இப்போதுள்ள நிலையை அற்புதமாக விவரிக்கிறார். சரியான ப்ரம்ம ஞானி!.
अनाढ्यतैवासाधुत्वे साधुत्वे दम्भ एव तु । स्वीकार एव चोद्वाहे स्नानमेव प्रसाधनम् ॥ ५ ॥12.2.5anāḍhyataivāsādhutve sādhutve dambha eva tu svīkāra eva codvāhe snānam eva prasādhanamபணமில்லாதவன் அசுத்தமானவன் என்பார்கள். ஏமாற்று வித்தை நயவஞ்சகம் போன்றவை ஒருவனின் சிறந்த குணமாக ஏற்கப்படும். கல்யாணம் என்பது பேச்சு சாமர்த்தியத்தால் நிச்சயிக்கப்படும். ஒரு பக்கெட் தண்ணியோ, ஐந்தாறு சொம்பு தண்ணீரோ மேலே ஊற்றிக்கொண்டாலே ஒருவன் சமூகத்தில் சுத்தமானவனாக அங்கீகாரம் பெறுவான்.
दूरे वार्ययनं तीर्थं लावण्यं केशधारणम् । उदरंभरता स्वार्थ: सत्यत्वे धार्ष्ट्यमेव हि । दाक्ष्यं कुटुम्बभरणं यशोऽर्थे धर्मसेवनम् ॥ ६ ॥ 12.2.6dūre vāry-ayanaṁ tīrthaṁ lāvaṇyaṁ keśa-dhāraṇam udaraṁ-bharatā svārthaḥ satyatve dhārṣṭyam eva hi dākṣyaṁ kuṭumba-bharaṇaṁyaśo ’rthe dharma-sevanamஎங்கேயாவது ஒரு குட்டையில் தண்ணீர் தேங்கி நின்றாலே போதும். அது ஒரு புண்ய க்ஷேத்ரம் என்பார்கள். தலையை கன்னா பின்னா என்று மனம் போனபடி சிரைத்துக் கொள்வது தான் அழகு, நாகரீகம் என்று கருதப்படும். வயிற்றை நிரப்புவது ஒன்று தான் வாழ்வின் லக்ஷ்யமாகும். அடாவடித்தனம் தான் தலைவனாவதற்கு தகுதி. அதை யே அவசியம் நியாயம் என நம்புவார்கள். குடும்பம் நடத்துவதே ரொம்ப கெட்டிக்காரத்தனம் ஆகிவிடும். ஊருக்காகவும் பேருக்காகவும் தான் ஆன்மிகம், தெய்வீகம் என்று ஆகிவிடும்.. இது தான் கலிகால பண்பு, என்று இன்று நடப்பதை, அன்றே, சுகர் சொல்லியிருக்கிறார்.
एवं प्रजाभिर्दुष्टाभिराकीर्णे क्षितिमण्डले । ब्रह्मविट्क्षत्रशूद्राणां यो बली भविता नृप: ॥ ७ ॥12. 2.7evaṁ prajābhir duṣṭābhir ākīrṇe kṣiti-maṇḍale brahma-viṭ-kṣatra-śūdrāṇāṁ yo balī bhavitā nṛpaḥலஞ்சம், ஊழல், கொள்ளை, களவு, இதெல்லாம் மலிந்த சமூகம் ஜனங்கள் தான் எங்கும் இருப்பார்கள். இதில் அதிக திறமை படைத்தவன் தான் மற்றவர்களை அரசியலில் வெற்றிபெற்றவனாக மற்றவர்களை ஆள்வான். அடக்கடவுளே, சுகர் நிச்சயம் இப்போது எங்கோ மறைந்து வாழ்கிறார். இல்லாவிட்டால் இப்போதைய நிலைமை எப்படி 5000 வருஷங்களுக்கு முன்பே தெரியும்?
प्रजा हि लुब्धै राजन्यैर्निर्घृणैर्दस्युधर्मभि: । आच्छिन्नदारद्रविणा यास्यन्ति गिरिकाननम् ॥ ८ ॥12.2.8prajā hi lubdhai rājanyair nirghṛṇair dasyu-dharmabhiḥ ācchinna-dāra-draviṇā yāsyanti giri-kānanamநல்லவர்கள் இந்த மாதிரி ராஜ்யத்தில் வாழமாட்டார்கள். மனைவி மக்களை சொத்தை எல்லாம் இழக்க நேரிடும். கொடுமையான பேராசை பிடித்த, மனசாட்சியற்ற கொடியவர்களிடமிருந்து தப்பி வேறெங்கோ ஓடிவிடுவார்கள். அடேயப்பா அமெரிக்கா ஐரோப்பா என்று நம்மவர்கள் ஓடுவது பற்றி சுகர் தெரிந்து வைத்திருக்கிறாரே .
शाकमूलामिषक्षौद्रफलपुष्पाष्टिभोजना: । अनावृष्टया विनङ्क्ष्यन्ति दुर्भिक्षकरपीडिता: ॥ 12.2.9śāka-mūlāmiṣa-kṣaudra- phala-puṣpāṣṭi-bhojanāḥ anāvṛṣṭyā vinaṅkṣyanti durbhikṣa-kara-pīḍitāḥமக்கள் பஞ்சத்தாலும், அதிக வரி சுமையாலும் துடிப்பார்கள். கிழங்கு, இலை காய் பூ, பட்டை, விதை என்று எதையாவது சாப்பிட்டு உயிர்வாழ்வார்கள்.
शीतवातातपप्रावृड्हिमैरन्योन्यत: प्रजा: ।क्षुत्तृड्भ्यां व्याधिभिश्चैव सन्तप्स्यन्ते च चिन्तया ॥ १० ॥ 12.2.10śīta-vātātapa-prāvṛḍ- himair anyonyataḥ prajāḥ kṣut-tṛḍbhyāṁ vyādhibhiś caiva santapsyante ca cintayāஎங்கும் வியாதி பரவி அவதிப்படுவார்கள், அநேகமாக எல்லோருமே குளிர், பனி, வாயு, உஷ்ணம், மழை, ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள். சண்டைகள், பசி, தாகம், வியாதி, மனதில் சங்கடம், பயம் என்று பலவித துன்பங்களில் தவிப்பார்கள்.
त्रिंशद्विंशतिवर्षाणि परमायु: कलौ नृणाम् ॥ ११ ॥ 12.2.11triṁśad viṁśati varṣāṇi paramāyuḥ kalau nṛṇāmரொம்ப போனால் ஐம்பது வயது வாழ்வதையே அதிசயம் எனும் நிலை வந்துவிடும்.
क्षीयमाणेषु देहेषु देहिनां कलिदोषत: । वर्णाश्रमवतां धर्मे नष्टे वेदपथे नृणाम् ॥ १२ ॥पाषण्डप्रचुरे धर्मे दस्युप्रायेषु राजसु । चौर्यानृतवृथाहिंसानानावृत्तिषु वै नृषु ॥ १३ ॥शूद्रप्रायेषु वर्णेषुच्छागप्रायासु धेनुषु । गृहप्रायेष्वाश्रमेषु यौनप्रायेषु बन्धुषु ॥ १४ ॥अणुप्रायास्वोषधीषु शमीप्रायेषु स्थास्नुषु । विद्युत्प्रायेषु मेघेषु शून्यप्रायेषु सद्मसु ॥ १५ ॥इत्थं कलौ गतप्राये जनेषु खरधर्मिषु । धर्मत्राणाय सत्त्वेन भगवानवतरिष्यति ॥ १६ ॥ 12.2.12-2.16.चराचरगुरोर्विष्णोरीश्वरस्याखिलात्मन: । धर्मत्राणाय साधूनां जन्म कर्मापनुत्तये ॥ 12.2.17 ॥kṣīyamāṇeṣu deheṣu dehināṁ kali-doṣataḥ varṇāśramavatāṁ dharme naṣṭe veda-pathe nṛṇām pāṣaṇḍa-pracure dharme dasyu-prāyeṣu rājasucauryānṛta-vṛthā-hiṁsā-nānā-vṛttiṣu vai nṛṣu śūdra-prāyeṣu varṇeṣu cchāga-prāyāsu dhenuṣu gṛha-prāyeṣv āśrameṣu yauna-prāyeṣu bandhuṣu aṇu-prāyāsv oṣadhīṣu śamī-prāyeṣu sthāsnuṣu vidyut-prāyeṣu megheṣu śūnya-prāyeṣu sadmasu itthaṁ kalau gata-prāyejaneṣu khara-dharmiṣu dharma-trāṇāya sattvena avatariṣyaticarācara-guror viṣṇor īśvarasyākhilātmanaḥ dharma-trāṇāya sādhūnāṁ janma karmāpanuttayeகலியுகம் முடியும் சமயம், எல்லா ஜீவராசிகளின் உடம்பும் ரொம்பவே குறுகி, சிறுத்து காணப்படும். பாரம்பரிய தெய்வ, மதநம்பிக்கை, கோட்பாடுகள், எல்லாம் சிதறிவிடும். வேதங்கள் புறக்கணிக்கப்படும். வேதம் காட்டும் வழி காற்றில் பறக்கும். நாஸ்திகம் தலை தூக்கி எங்கும் நாஸ்திகர்கள் தான் காணப்படுவார்கள். ராஜாக்கள், அரசாங்க தலைவர்கள் எல்லாம் திருடர்களாக மாறலாம். எங்கும் அராஜகம் தலை தூக்கும். பணமில்லாதவன் தான் தாழ் குலத்தான். பசுக்கள் ஆடு அளவுக்கு சுருங்கிவிடும். வேத ஆசிரமங்கள் வெறும் வீடுகளாகும். குடும்பம் சுருங்கி ரெண்டு பேர் தான் அதிகம் என்று ஆகிவிடும். தாவரங்களும் அளவில் சிறிதாகிவிடும். மேகங்கள் வெறுமே பளிச்பளிச் எனும் மின்னலாக மாறும். பக்தி காணாமல் போகும். மக்கள் கழுதைகளாவார்கள் என்று சொல்கிறார் சுக ப்ரம்ம ரிஷி. இப்படி நிலை ரொம்ப மோசமாக புகும் சமயம் தான் மீண்டும் விஷ்ணு அவதரிப்பார்.
शम्भलग्राममुख्यस्य ब्राह्मणस्य महात्मन: । भवने विष्णुयशस: कल्कि: प्रादुर्भविष्यति ॥ १८ ॥ 12.2.18śambhala-grāma-mukhyasya brāhmaṇasya mahātmanaḥ bhavane viṣṇuyaśasaḥ kalkiḥ prādurbhaviṣyatiஎதிர்பார்க்கும் மஹா விஷ்ணு இதோ வருகிறார் கலியுகத்தில் கல்கி பகவானாக. இது தசாவதாரத்தில் 10வது அவதாரம். லோக சம்ரக்ஷணத்துக்காக மஹா விஷ்ணுவின் இந்த அவதாரம் விநோதமானானது. அவர் பிறக்கப்போவது எங்கே என்று கூட ஏற்கனவே ஸ்ரீமத் பாகவத்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே. ஒரு பிராமணர் . அவர் பெயர் விஷ்ணுயாஸர் , அவர் வசிக்குமிடம் சம்பாலா கிராமம். அது எங்கே என்று என்னை கேட்காதீர்கள். தெரிந்தால் சொல்லி இருப்பேனே.
अश्वमाशुगमारुह्य देवदत्तं जगत्पति: । असिनासाधुदमनमष्टैश्वर्यगुणान्वित: ॥ १९ ॥ विचरन्नाशुना क्षौण्यां हयेनाप्रतिमद्युति: ।नृपलिङ्गच्छदो दस्यून्कोटिशो निहनिष्यति ॥ २० ॥ SB 12.2.19-20asvam asu-gam aruhya devadattam jagat-patih asinasadhu-damanam astaisvarya-gunanvitah. vicarann āśunā kṣauṇyāṁhayenāpratima-dyutiḥ nṛpa-liṅga-cchado dasyūn koṭiśo nihaniṣyatiகல்கி பகவான் தேவதத்தம் எனும் வேகமாக ஓடும் குதிரை மேல் ஏறிக்கொண்டு வருவார். கையி கூரிய வாள் . ராஜாவென்று வேஷத்தை போட்டுக்கொண்டு மக்களை கொள்ளையடிப்பவர்கள் அத்தனைபேரையும் காலி பண்ணி விடுவார்.ராஜா தான் இல்லையே என்று கவலைப்படவேண்டாம். அதிகாரத்தில் இருப்பவர்கள் என்று எடுத்துகொள்வோம். கலியுகத்தின் முடிவில் தான் வருவாரோ?
अथ तेषां भविष्यन्ति मनांसि विशदानि वै । वासुदेवाङ्गरागातिपुण्यगन्धानिलस्पृशाम् । पौरजानपदानां वै हतेष्वखिलदस्युषु ॥ २१ ॥ SB 12.2.21atha tesam bhavisyanti manamsi visadani vai vasudevanga-ragati- punya-gandhanila-sprsam paura-janapadanam vai hatesv akhila-dasyusuஎல்லா ராஜ்யங்களிலும் மோசமான நிர்வாகிகள், அதிகாரிகள், உயர் பதவியில் இருக்கும் தீயவர்களை கொன்றபின் அந்த ராஜ்ஜியங்கள் ஊழல் பேர்வழிகள் இல்லாமல் கமகமவென மணக்கும். ஜனங்கள் சந்தோஷம் அடைவார்கள். எங்கும் இனிய தென்றல் வீசும்.
तेषां प्रजाविसर्गश्च स्थविष्ठ: सम्भविष्यति । वासुदेवे भगवति सत्त्वमूर्तौ हृदि स्थिते ॥ २२ ॥ SB 12.2.22tesam praja-visargas casthavisthah sambhavisyati vasudeve bhagavati sattva-murtau hrdi sthiteமக்கள் சுபிக்ஷத்தோடு வாழ்வார்கள். எல்லாம் அந்த வாசுதேவன் கருணை.यदावतीर्णो भगवान् कल्किर्धर्मपतिर्हरि: ।कृतं भविष्यति तदा प्रजासूतिश्च सात्त्विकी ॥ २३ ॥ SB 12.2.23yadavatirno bhagavan kalkir dharma-patir harih krtam bhavisyati tada praja-sutis ca sattvikiகலியுகம் முடிவுற்ற பின் மீண்டும் சத்ய யுகம் உதயமாகும். நல்ல ஜீவர்கள் அநேகர் தோன்றுவார்கள். நிச்சயம் இப்போதைக்கு அல்ல, பல லக்ஷ வருஷம் ஆகலாம்.
यदा चन्द्रश्च सूर्यश्च तथा तिष्यबृहस्पती । येऽतीता वर्तमाना ये भविष्यन्ति च पार्थिवा: ।ते त उद्देशत: प्रोक्ता वंशीया: सोमसूर्ययो: ॥ २५ ॥एकराशौ समेष्यन्ति भविष्यति तदा कृतम् ॥ २४ ॥ SB 12.2.24yada candras ca suryas ca tatha tisya-brhaspati eka-rasau samesyanti bhavisyati tada krtamகடக ராசியில் சந்திரன், சூரியன் குரு மூவரும் இணைந்து பூச நக்ஷத்திரம் கூடிய வேளையில் சத்ய யுகம் தோன்றும். அதன் இன்னொரு பெயர் க்ருத யுகம். இவ்வளவு தெளிவாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. பஞ்சாங்கத்தில் உள்ளதே நடைமுறையில் நடக்கும்போது பாகவதம் சொல்வது அப்படியே நிறைவேறாதா? மஹான்கள் ரிஷிகளின் தீர்க்க தரிசனத்தால் உண்டானவை இந்த கிரந்தங்கள்.
येऽतीता वर्तमाना ये भविष्यन्ति च पार्थिवा: । ते त उद्देशत: प्रोक्ता वंशीया: सोमसूर्ययो: ॥ २५ ॥SB 12.2.25ye ’tita vartamana ye bhavisyanti ca parthivah te ta uddesatah prokta vamsiyah soma-suryayohசூர்ய சந்திர வம்ச ராஜாக்கள் தோன்றுவார்கள்.आरभ्य भवतो जन्म यावन्नन्दाभिषेचनम् । एतद् वर्षसहस्रं तु शतं पञ्चदशोत्तरम् ॥ २६ ॥ SB 12.2.26arabhya bhavato janma yavan nandabhisecanam etad varsa-sahasram tu satam pancadasottaramசுகப்பிரம்ம ரிஷி ஆயிரத்து நூற்றைம்பது வருஷங்கள் ஆளும் ராஜ பரம்பரை லிஸ்ட் சொல்கிறார். அவர் சொன்ன வரிசையில் சில ராஜாக்கள் பெயர் முன்னுக்கும் பின்னுக்குமாக இருக்கலாம்.
सप्तर्षीणां तु यौ पूर्वौ दृश्येते उदितौ दिवि । तयोस्तु मध्ये नक्षत्रं दृश्यते यत् समं निशि ॥ २७ ॥ तेनैव ऋषयो युक्तास्तिष्ठन्त्यब्दशतं नृणाम् ।ते त्वदीये द्विजा: काल अधुना चाश्रिता मघा: ॥ २८ ॥ SB 12.2.27-28saptarsinam tu yau purvau drsyete uditau divi tayos tu madhye naksatram drsyate yat samam nisitenaiva rsayo yuktas tisthanty abda-satam nrnam te tvadiye dvijah kala adhuna casrita maghahஏழு ரிஷிகள் சப்த ரிஷி மண்டலமாக விண்ணிலே ஒளிபடைத்தார்கள். அவர்களில் முதல் ரெண்டு ரிஷிகள் புலஹர் க்ரது முதலில் இருட்டில் ஒளி வீசுபவர்கள். வடக்கு தெற்காக ஒரு கோடு போட்டு இணைத்தால் எந்த மண்டலத்தில் நடு மத்தியில் இணைக்கிறதோ அங்கே ரிஷிகள் கூடி இருப்பார்கள். அவர்கள் இருக்கும் காலம் அங்கே நூறு வருஷம். மக நக்ஷத்திரத்தில் அவர்கள் கூடி இருப்பது விசேஷம்.
विष्णोर्भगवतो भानु: कृष्णाख्योऽसौ दिवं गत: । तदाविशत् कलिर्लोकं पापे यद् रमते जन: ॥ २९ ॥ SB 12.2.29visnor bhagavato bhanuh krsnakhyo ’sau divam gatah tadavisat kalir lokam pape yad ramate janahஎல்லோருக்கும் தெரிந்தது விஷ்ணு தான் கிருஷ்ணன் என்பது. துவாபர யுகம் முடிந்து கிருஷ்ணன் பூலோகத்திலிருந்து வைகுண்டம் ஏகியபோது கலி புருஷன் பூலோகத்தை ஆக்கிரமித்தான். கலியுகம் தொடங்கியது.
यावत् स पादपद्माभ्यां स्पृशनास्ते रमापति: ।तावत् कलिर्वै पृथिवीं पराक्रन्तुं न चाशकत् ॥ ३० ॥SB 12.2.30yavat sa pada-padmabhyam sprsan aste rama-patih tavat kalir vai prthivim parakrantum na casakatமஹா லட்சுமி பாதி, ஸ்ரீயப்பதி மஹா விஷ்ணு பூலோகத்தில் கிருஷ்ணனாக காலடி பதித்தலிருந்து அவர் வைகுண்டம் திரும்பும் வரை கலீயின் சக்தி எடுபடவில்லை.यदा देवर्षय: सप्त मघासु विचरन्ति हि ।तदा प्रवृत्तस्तु कलिर्द्वादशाब्दशतात्मक: ॥ ३१ ॥ SB 12.2.31yada devarsayah sapta maghasu vicaranti hi tada pravrttas tu kalir dvadasabda-satatmakah
ஸயன்ஸ் காரர்கள் போடும் கணக்குப்படி பார்த்தால் கிருஷ்ணன் என்று மறைந்தாரோ அன்று தான் பூமியில் கலியின் முழு சக்தியும் வெளிப்பட ஆரம்பித்தது.
दिव्याब्दानां सहस्रान्ते चतुर्थे तु पुन: कृतम् ।भविष्यति तदा नृणां मन आत्मप्रकाशकम् ॥ ३४ ॥SB 12.2.34divyabdanam sahasrante caturthe tu punah krtam bhavisyati tada nrnam mana atma-prakasakamஇப்போது நாம் கலியின் ஆளுமையில் இருப்பதால் தான் சகிக்க முடியாத சம்பவங்களை, நிகழ்ச்சிகளை, நடைமுறைகளை சகித்துக் கொண்டு அனுபவிக்கிறோம். சத்ய யுகம் வரும்வரை நாம் இருக்கப்போவதில்லை. அது எத்தனையோ ஆயிரம் லக்ஷம் வருஷங்களுக்கு அப்புறம் நிகழப்போவது. சத்ய யுகத்தில் மக்கள் மனம் தெளிவாக இருக்கும், ஆத்ம ஒளி எல்லா முகங்களிலும் வீசும்.
देवापि: शान्तनोर्भ्राता मरुश्चेक्ष्वाकुवंशज: ।कलापग्राम आसाते महायोगबलान्वितौ ॥ ३७ ॥SB 12.2.37devapih santanor bhrata marus ceksvaku-vamsa-jah kalapa-grama asate maha-yoga-balanvitauஸ்ரீமத் பாகவதம் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது. மஹாராஜா சந்தனுவின் சகோதரன் தேவாபி யும் , மாரு எனும் , இக்ஷ்வாகு வம்சத்தை சேர்ந்தவனும் மஹா பலசாலிகள். கலபா என்கிற ஊரில் வசிக்கிறார்களாம் .
ताविहैत्य कलेरन्ते वासुदेवानुशिक्षितौ । वर्णाश्रमयुतं धर्मं पूर्ववत् प्रथयिष्यत: ॥ ३८ ॥ SB 12.2.38tav ihaitya kaler ante vasudevanusiksitau varnasrama-yutam dharmam purva-vat prathayisyatahகிருஷ்ணன் கட்டளைப்படி, மேலே சொன்ன தேவாபி, மாரு எனும் ரெண்டு ராஜாக்களும் பூமிக்கு மனிதர்களாக வந்து சமூகத்தை சீர்திருத்துவார்களாம். கலியுகம் முடியும் நேரத்தில் அவர்கள் வெளிப்படுவார்கள். அதுவரை மஹா விஷ்ணுவை தியானித்துக்கொண்டு காத்திருக்கிறார்களாம்.
कृतं त्रेता द्वापरं च कलिश्चेति चतुर्युगम् ।अनेन क्रमयोगेन भुवि प्राणिषु वर्तते ॥ ३९ ॥ SB 12.2.39krtam treta dvaparam ca kalis ceti catur-yugam anena krama-yogena bhuvi pranisu vartateஇந்த சதுர் யுகங்கள், சத்ய யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் இந்த நான்குமே அந்தந்த கால கட்டத்தில் அப்போதைய மனிதர்களின் குணாதிசயங்களோடு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.
राजन्नेते मया प्रोक्ता नरदेवास्तथापरे । भूमौ ममत्वं कृत्वान्ते हित्वेमां निधनं गता: ॥ ४० ॥SB 12.2.40rajann ete maya prokta nara-devas tathapare bhumau mamatvam krtvante hitvemam nidhanam gatahசுகப்பிரம்ம ரிஷி, பரீக்ஷித் மஹாராஜாவுக்கு கிருஷ்ணன் பெருமைகளை மஹிமைகளை சொல்லிக்கொண்டு வரும்போது இதெல்லாம் சொல்கிறார். ''பரீக்ஷித், நான் சொன்ன ராஜாக்கள் உரிய காலத்தில் வந்து ஆண்டு, முடிந்து போவார்கள்'' என்கிறார்.
कृमिविड्भस्मसंज्ञान्ते राजनाम्नोऽपि यस्य च । भूतध्रुक् तत्कृते स्वार्थं किं वेद निरयो यत: ॥ ४१ ॥SB 12.2.41krmi-vid-bhasma-samjnante raja-namno ’pi yasya ca bhuta-dhruk tat-krte svartham kim veda nirayo yatahபரீக்ஷித், நான் சொல்வதை புரிந்துகொள். என்னதான் ராஜா என்று நான் அடைமொழி கொடுத்த்து உனக்கு அறிமுகப்படுத்தினாலும் , ராஜா என்ற பட்டம் பதவி பெயர் கொண்டவன் கடைசியில் ஒரு புழு, சாம்பல். அவன் பெயர் நிலைக்க அவன் செயல் ஒன்று தான் மிச்சம். தந்து உடலை பாதுக்காக்க மற்ற உடல்களைக் கொள்பவனை என்ன வென்று சொல்வது? நரகத்துக்கு போவதற்கு பெயர் எதற்கு? உடல் இருக்கும்போது பொறாமை, ஹிம்சை, சுயநல செயகைகளை தவிர்க்க வேண்டும். பகவானை மற்ற உயிரினங்களிலும் காண வேண்டும்.
तेजोऽबन्नमयं कायं गृहीत्वात्मतयाबुधा: । महीं ममतया चोभौ हित्वान्तेऽदर्शनं गता: ॥ ४३ ॥ SB 12.2.43tejo-’b-anna-mayam kayam grhitvatmatayabudhah mahim mamataya cobhau hitvante ’darsanam gatahபரீக்ஷித், இந்த பஞ்ச பூதங்களால் ஆன தேகத்தை நிஜம் சாஸ்வதம் என நம்பி, அது தான் ''நான்'' என கனவு காண்பது தவறு. எல்லாம் மறைந்து போகும். ஒவ்வொரு ஜீவனிலும் ஆத்மா இருக்கிறான். இருந்தாலும் அந்த ஜீவனின் உலக வாழ்க்கை பெயர் காற்றோடு கலந்து மறைந்து போகிறது.எண்ணற்றவர்கள் நமக்கு முன் வாழ்ந்தவர்களை யார் அறிவார்கள்?
ये ये भूपतयो राजन् भुञ्जते भुवमोजसा ।कालेन ते कृता: सर्वे कथामात्रा: कथासु च ॥ ४४ ॥ SB 12.2.44ye ye bhu-patayo rajan bhunjate bhuvam ojasa kalena te krtah sarve katha-matrah kathasu caபரீக்ஷித், இதுவரை உலகத்தில் அதிக சக்தி, பலம் அதிகாரம் கொண்டு வாழ்ந்த ராஜாக்கள் எங்கே? சரித்திரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு எழுத்தில் பெயர்களோடு சரி. அது கூட ஒரு சில காரியங்களால் தம்மை பிரபலப் படுத்திக்கொண்டவர்கள் பேர்கள் தான்.