Sri Mahavishnu Info: ஶ்ரீ கருட தண்டகம் விளக்கத்துடன் | Sri Garuda Dandakam With Meaning in Tamil ஶ்ரீ கருட தண்டகம் விளக்கத்துடன் | Sri Garuda Dandakam With Meaning in Tamil

ஶ்ரீ கருட தண்டகம் விளக்கத்துடன் | Sri Garuda Dandakam With Meaning in Tamil

Sri Mahavishnu Info

ஶ்ரீ கருட ஶ்ரீ கருட தண்டகம் விளக்கத்துடன் | Sri Garuda Dandakam With Meaning in Tamilதண்டகம் - Garuda Dandakam

ஶ்ரீ கருட தண்டகம் விளக்கத்துடன்


ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:


ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ  |

வேதாந்தார்சார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி  ||


முதல் ஸ்லோகம் 32 எழுத்துக்களைக் கொண்ட  அநுஷ்டுப் சந்தஸ்ஸில் அமைந்துள்ளது. இறுதி ஸ்லோகமும் இதே சந்தஸ்ஸில் அமைந்துள்ளது


முதல் ஸ்லோகம்:

நம: பந்நக நத்தாய வைகுண்ட வஶ வர்த்திநே |

ஶ்ருதி ஸிந்து ஸுதோத்பாத மந்த்ராய கருத்மதே ||


அழகிய சிறகுகளை கொண்ட கருடபகவானுக்கு நமஸ்காரம். தங்களுடையத் திருமேனியை தாங்கள் வென்ற நாகங்கள் அழகு செய்கின்றன, அவை தேவரீருக்கு ஆபரணமாக விளங்குகின்றன. தாங்கள் ஸ்ரீவைகுந்தத்தில்  பெருமாளுக்கு அந்தரங்க தாசனாக இருந்து அவருக்கு கைங்கர்யம் செய்கின்றீர்கள். வேதங்களாகிய பாற்கடலை கடைந்து பிரம்ம வித்யா என்னும் அமிர்தத்தை அடைவது போல தங்களை வணங்கி இந்தப் பிரம்ம வித்யையை அடையலாம். கருத்மானாகிய தங்களுக்கு நமஸ்காரம். 


பாதம் 1

கருடமகில வேத நீடாதிரூடம் த்விஷத் பீடநோத் கண்டிதாகுண்ட

வைகுண்ட பீடிக்ருதஸ்கந்தமீடே ஸ்வநீடாகதி ப்ரீத ருத்ரா ஸுகீர்த்தி

ஸ்தநாபோக காடோப கூட ஸ்புரத்கண்டகவ்ராத வேத வ்யதா வேபமாந

த்விஜிஹ்வாதி பாகல்ப விஷ்பார்யமாண ஸ்படாவாடிகா ரத்ந ரோசிஶ் சடா நீராஜிதம் காந்தி கல்லோலி நீராஜிதம். 1.


கருட பகவானே  தாங்களே வேத ஸ்வரூபி, வேதங்கள் தங்களின் புகழைப் பாடுகின்றன. ஸ்ரீமந் நாராயணன் அசுரர்களை அழிக்க செல்லும் போது தங்களின் தோளில் அமர்ந்து செல்கின்றார். அவ்வாறு தாங்கள் சேவைச் செய்ய செல்லும்  போது தங்களது இரு மனைவியரான ருத்ரையும், ஸுகீர்த்தியும் தங்களை பிரிந்திருக்கின்றனர். பெருமாள் அசுரர்களை வென்று வந்த பின்தங்களை அவர்கள் ஆரத்தழுவிக் கொள்கின்றனர். அந்த புளகாங்கிதத்தில் தங்கள் திருமேனியில் உள்ள சிறகுகள் சிலிர்த்தெழுகின்றன. அவை தமது திருமேனியில் அணிந்துள்ள நாகங்களை கூர்பார்க்கின்றன. ஆகவே அவை பயந்து தங்களின் படங்களை விரிக்கின்றன. அப்போது அவற்றின் மாணிக்க கற்கள் மிளிர்கின்றன. அவ்வொளி தேவரீருக்கு கற்பூர ஆரத்தி போல உள்ளது.


கருடன் வேதஸ்வரூபனாக விளங்குவதையும், அவரை வேதங்கள் போற்றுவதையும் அவர் பெருமாளுக்கு வாகனமாகவும், கொடியாகவும் திகழ்வதையும், அவருக்கு ருத்ரை, ஸுகீர்த்தி இன்று இரு மனைவியர், மஹா நாகங்கள் அவரின் ஆபரணமாக விளங்குகின்றன என்பதை இந்த ஸ்லோகத்தில் நிகமாந்த மஹா தேசிகர் அற்புதமாக கூறியுள்ளார்.


பாதம் : 2

ஜய கருட ஸுபர்ண தார்வீகராஹார தேவாதிபாஹார ஹாரிந் திவௌ கஸ்பதி க்ஷிப்த தம்போளி தாரா கிணாகல்ப கல்பாந்த வாதூல கல்போ தயாநல்ப வீராயிதோத்யச்சமத்கார தைத்யாரி ஜைத்ர த்வஜாரோஹ நிர்த்தாரிதோத்கர்ஷ சங்கர்ஷணாத்மந் கருத்மந் மருத்பஞ்சகாதீஶ்

சத்யாதி மூர்த்தே ந க்ஶ்சித் ஸமஸ்தே நமஸ்தே புநஸ்தே நம: ||  2.


கருடாழ்வாரே! அழகிய சிறகுகளை உடைய சுபர்ணரே! மஹா நாகங்கள் தங்களுடைய உணவாகின்றன. தாயை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க தேவலோகம் சென்று தேவர்களை வென்று அமிர்தம் கொணர்ந்தீர்! அப்போது இந்திரன் கோபம் கொண்டு வஜ்ராயுதத்தை தங்கள் மேல் ஏவினான். அதன் கூரிய முனை தங்கள் சிறகுகளிலும் திருமேனியிலும் ஏற்படுத்திய  வீரத்தழும்புகள் தற்போது தங்களுக்கு ஆபரணமாகி தாங்கள் இந்திரனை வென்றதை அறிவிக்கின்றன. தங்களது வீரச்செயல்கள்  பிரளய காலத்தின் மஹா வாயுவைப்போல உள்ளன. தாங்கள் பெருமாளின் கொடியில் அமர்ந்து அவரது வெற்றிக்கு அறிகுறியாக விளங்குகின்றீர்கள். அதுவே தங்களது பெருமையும் பறை சாற்றுகின்றது. தாங்களே பெருமாளின் வியூக மூர்த்தமான சங்கர்ஷணரின் அம்சமாக அவதாரம் செய்தீர்கள். தாங்களே சத்யர், சுபர்ணர், கருடர், தார்க்ஷ்யர், விஹாஹேஸ்வரர் என்ற ஐந்து வடிவாகி ப்ராணன், அபாநன், சமாநன், உதாநன், வ்யாநன் என்ற ஐந்து வாயுவாகி தேவனாக ஒளிர்கின்றீர். அழகிய பொன்னிற சிறகுகளை உடையவரே! தங்களுக்கு நமஸ்காரம் மீண்டும் ஒரு  முறை நமஸ்காரம். 


தேவர்களை வென்று அமிர்தம் கொணர்ந்து தாயின் அடிமைத் தளையை நீக்கிய வீரச்செயலையும், போர்க்களத்தில் பெருமாளுக்கு முன்னரே சென்று காய்சினப் பறவையாகி அசுரர்களை அழிக்கும் வீரத்தையும், பாற்கடலில் பரவாஸுதேவரின் வியூக மூர்த்திகளில் ஒருவரான சங்கர்ஷணரின் அம்சமாக திகழ்வதையும், ஐந்து வாயுக்களின் வடிவமாக திகழ்வதையும் இந்த ஸ்லோகத்தில் தூப்புல் வேதாந்த தேசிகர் பாடியுள்ளார்.   

  

பாதம் : 3

நம: இத மஜஹத் ஸபர்யாய பர்யாய நிர்யாத பக்ஷாநிலாஸ் பாலநோத் வேல பாதோதி வீசீ சபேடாஹதாகாத பாதாள பாங்கார ஸங்க்ருத்த நாகேந்த்ரபீடாஸ்ருணீ பாவ பாஸ்வந்நக ஶ்ரேணயே சண்டதுண்டாய ந்ருத்யத் புஜங்கப்ருவே வஜ்ரிணே தம்ஷ்ட்ரயா துப்யம் அத்யாத்மவித்யா விதேயா விதேயா பவத்தாஸ்யமாபாதயேதா தயேதாஶ்ச மே ||


கருட பகவானே! ஞானிகள் இடைவிடாமல் தங்களை தியானிக்கின்றனர், தாங்கள் பறக்கும் போது தங்களின் இறகுகள் உண்டாக்கும் காற்று பெரிய கடல் அலைகளை உண்டாக்குகின்றன. அதன் சப்தம் பாதாள உலகத்தையும் எட்டுகின்றது. அந்த ஓசை அங்குள்ளவர்களை அறைவது போல அவர்களுக்கு தோன்றுகின்றதுபயங்கரமானபாம்என்ற சப்தம் அப்போது உருவாகின்றது. அஷ்ட திக் கஜங்களும் அந்த சப்தத்தைக் கேட்டு அதிர்ந்து தங்களை தாக்க வருகின்றன. தங்களது கூரிய நகங்கள் அந்த யானைகளை அடக்கும் அங்குசமாகின்றன. தங்களது கூரிய அலகு தங்களது எதிரிகளின் மனதில் பய பீதியை உண்டாக்குகின்றது. தாங்கள் புருவத்தை நெரிக்கும் போது அது நாகம் படமெடுப்பது போல உள்ளது. தங்களது கோரைப்பற்கள் இந்திரனின் வஜ்ராயுதம் போல தங்கள் எதிரிகளின் மனதில் அச்சத்தை உண்டாக்குகின்றன. தங்களுக்கு அந்த அளவில்லா புகழுக்கு  நமஸ்காரம், தாங்கள் அடியேனுக்கு பிரம்ம வித்யையை அருள்வீர்களாக. கருணை கூர்ந்து தங்களுக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியத்தையும் அருள்வீர்களாக.


ஆச்சார்யனாக இருந்து பிரம்ம வித்தையை வழங்கும் பான்மையையும், ஞானிகள் சதா சர்வ காலம் கருடபகவானை துதிப்பதையும் இந்த ஸ்லோகத்தில் ஆச்சார்யர் தேசிகர் கூறியுள்ளார்.


பாதம் : 4

மநுரநுகத பக்ஷி வக்த்ர ஸ்புரத்தாரகஸ்தா வகஸ்சித்ரபாநுப்ரியாஸேகர ஸ்த்ராயதாம் நஸ்த்ரி வர்க்காபவர்க்க ப்ரஸூதி: பரவ்யோம தாமந்

வலத்வேஷி தர்ப்பஜ்வலத் வாலகில்ய ப்ரதிக்ஞா வதீர்ண ஸ்திராம்தத்த்வ

புத்திம் பராம் பக்திதேநும் ஜகந்மூல கந்தே முகுந்தே மஹாநந்ததோ க்த்த்ரீம் ததீதா முதாகாமஹீநாம் அஹீநாமஹீநாந்தக


கருடாழ்வாரே! வைகுந்தத்தில் உறைபவரே! தங்களுடைய மந்திரம் அதை உபாசிப்பவர்களுக்கு நான்கு பேறுகளையும் (அறம், பொருள், இன்பம், வீடு) வழங்குகின்றது. அந்த மந்திரம் ஐந்து எழுத்துக்களைக் கொண்டது. ஓம் என்னும் பிரணவம் அதன் முதல் எழுத்து. அதன் நிறை எழுத்து அக்னியின் மனைவியைக் குறிக்கின்றது. அந்த மந்திரம் எங்களைக் காக்கட்டும்.


ஒரு சமயம் இந்திரன் ஆணவம் கொண்டு  வாலகில்ய முனிவர்களை அவமதித்தான். அதனால் அவர்கள் எதிர்காலத்தில் சங்கர்ஷணரின் அம்சமாக பிறப்பவன் உன்னுடைய ஆணவத்தை அழிப்பான் என்று சாபமளித்தனர். தாங்கள் வாலகில்ய முனிவர்களின் வாக்கை காப்பாற்றி இந்திரனின் ஆணவத்தை அழித்தீர்கள். தங்களை பகைத்த நாகங்களுக்கு தாங்கள் யமனாக விளங்குகின்றீர்கள். உண்மையான ஞானத்தை அடியேனுக்கு வழங்குவீர்களாக. தங்களின் தலைவன் முகுந்தன் ஜகத்காரணர். அவருக்கு உண்மையான அன்பு பூண்டு, நிலையற்ற இவ்வுலக மாயையில் அழுந்தாமல், திட மனதுடன்   அவருக்கு பக்தி செய்யும் உண்மையான ஞானத்தை அடியேனுக்கு வழங்குவீராக.


கருடாழ்வார் மந்திர மூர்த்தியாக விளங்குவதையும், நான்கு புருஷார்த்தங்களையும் வழங்குவதையும், வாலகில்ய முனிவர்களின் தவத்தின் பயனால் கருடன் அவதாரம் நிகழ்ந்ததையும், பிரம்ம வித்தையை அளிக்கும் ஆச்சார்யனாக கருடபகவான் விளங்குவதையும் நிகமாந்த தேசிகர் இந்த  ஸ்லோகத்தில் கூறியுள்ளார்.  


ஷட்த்ரிம் ஶத்கண சரணோ நர பரிபாடீ நவீந கும்பகண: |

விஷ்ணுரத தண்டகோயம் விகடயது விபக்ஷ வாஹிநீ வ்யூஹம் || 6


இந்த கருட தண்டகமானது ஒரே ஸ்லோகம். இதில் நான்கு பாதங்கள் உள்ளன. ஒவ்வொரு பாதத்திலும் 36 கணங்கள், ஒரு கணத்தில் மூன்று எழுத்துக்கள் (மொத்தம் 108 எழுத்துக்கள்) . இந்த கருட தண்டகம் தண்டக யாப்பில் சரியாக இயற்றப்பட்டுள்ளதுநாகணங்களும், ராகணங்களும் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. இந்த கருட தண்டகத்தை ஜபிப்பவர்களின் எதிரிகளின் வியூகம்  காற்றில் அழிந்து போகும்.


இந்த ஸ்லோகம் தண்டகத்தின் யாப்பை விளக்குகின்றது. இது ஆர்யா ஸந்தஸ்ஸில் அமைந்துள்ளது.


விசித்ர ஸித்தித: ஸோயம் வேங்கடேஶ விபஶ்சிதா

கருடத்வஜ தோஷாய கீதோ கருட தண்டக:  ||  7


கருடக்கொடியையுடைய எம்பெருமானை  மகிழ்விக்க   அடியேன் வேங்கடேசன், இயற்றிய இந்த கருட தண்டகத்தை ஜபிப்பவர்கள் அவர் அருளால்  சகல மனோபீஷ்டங்களையும்  அடைவர்.


கருட தண்டகம் பலன்கள்:


உடல் காயங்களைக் குணப்படுத்துவது மற்றும் பாதிக்கப்பட்டவர்களை இது பகுத்தறிவுடன் சிந்திக்கும் திறனையும், உயிர்வாழ்வதற்கான அறிவையும், வாழ்க்கையில் அனைத்து சவால்களையும் சமாளிக்கும் திறனையும் வழங்குகிறது.


மேலும் உங்கள் எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது; இதனால் அவர்கள் உங்களை இனி கொடுமைப்படுத்த முடியாது.


புகழ், செல்வம் எல்லாம் பெறலாம். இது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும். கருட தண்டகம் ஒருவரின் வாழ்க்கை முழுவதும் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அதிகரிக்க உதவுகிறது.

Two Moustaches Brass Diya

🪔 Two Moustaches – சங்கு சக்ர நாமம்: வடிவம் கொண்ட பிரத்யேக பித்தளைக் கம்பத் தீபம்

✨ சங்கம், சக்கரம், பத்மம், கதாயுடன் வடிவமைக்கப்பட்ட பரந்த கால் அடிப்படையுடன் அழகிய தீபம்

🎉 இப்போது 40% தள்ளுபடி!

⭐ மதிப்பீடு: 4.3 / 5 (703 பேர்)

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்