வைஜந்தி மாலை | Vaijanti Mala
வைஜந்தி (வைஜெயந்தி அல்ல) என்ற செடி வகையில் இருந்து கிடைக்கும் வெள்ளை நிற விதைகளை கோர்த்து ஜெப மாலை உருவாக்கப்படுகிறது. கிருஷ்ணருடன் தொடர்புள்ள இடங்களான மதுரா, பிருந்தாவனம், கோகுலம் மற்றும் ஆக்ரா போன்ற இடங்களிலிருந்து கிடைக்கப்பெறும் வைஜந்தி மலர்களின் விதைகள் விசேஷமாக பயன்படுத்தப்படுகின்றன.

வசீகர சக்தி மற்றும் இஷ்ட தேவதைகளின் தரிசனம் ஆகிய ஆன்மிக காரணங்களுக்காக இந்த மாலையை பயன்படுத்தி பலரும் நம்பிக்கையுடன் ஜெபம் செய்து வருகிறார்கள். குறிப்பாக, கிருஷ்ணரால் ராதைக்கும், ராமரால் சீதைக்கும் தரப்பட்டதால், பெயருக்கு ஏற்றாற்போல வெற்றிகளை தரும் மாலையாக வைஜந்தி மாலை சொல்லப்படுகிறது. மகாவிஷ்ணு இம்மாலையை அணிந்திருப்பதாக பல இடங்களில் குறிப்புகள் இருக்கின்றன.

இயற்கையாகவே மத்தியில் துளைகள் கொண்டவை இந்தச் செடியின் விதைகள். கருப்பு நிறமுள்ள வைஜந்தி விதை மாலைகள் சனிக் கிரக பாதிப்புகளை தடுக்க உதவுவதாக சொல்லப்படுகிறது. எளிதாக உடையக்கூடிய தன்மை கொண்டவையாக இவை இருப்பதால், கவனமாக பயன்படுத்த வேண்டியது அவசியம்.