Sri Mahavishnu Info: மார்கழி மாதத்தில் செய்யவே கூடாத 4 தவறுகள் என்னென்ன? மார்கழி மாதத்தில் செய்யவே கூடாத 4 தவறுகள் என்னென்ன?
```
📿 வைணவ அடிப்படைகள் • 🛕 108 திவ்யதேசங்கள் • 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் • 🎧 தினசரி ஸ்லோகங்கள் • 📅 இன்றைய வைபவம் • 🙏 தினசரி பக்தி வழிகாட்டி • ❓ பக்தி கேள்வி & பதில்கள் • 📖 ஆன்மீக நூல்கள் • 🧒 குழந்தைகள் பக்தி பகுதி • 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை • 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் • 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் • 🌺 திருப்பாவை • 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் • 🛕 திருத்தல தரிசனம் • 🔔 கோவில் விழாக்கள் • 📜 பக்தர் அனுபவங்கள் • ✨ அற்புத நிகழ்வுகள் • 🕉️ நாமஸ்மரணையின் மகிமை • 📚 பக்தி குறிப்புகள் • 🌸 ஆழ்வார்கள் வரலாறு • 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் • 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ • 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி • 🌟 புதிய பக்தி பதிவுகள்

மார்கழி மாதத்தில் செய்யவே கூடாத 4 தவறுகள் என்னென்ன?

Sri Mahavishnu Info
மார்கழி மாதத்தில் செய்யவே கூடாத 4 தவறுகள் என்னென்ன?

இறை வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாக சொல்லப்படும் மார்கழி மாதம் முழுவதிலும் நாம் எந்தெந்த தவறுகளை செய்யக் கூடாது என்பதை பற்றியும், மார்கழி மாதம் முழுவதும் என்னென்ன விஷயங்களை நாம் கடைப்பிடித்து வந்தால் நம் வாழ்வில் வளம்பெற நல்ல பலன்களை பெற முடியும் என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே சாதாரண நாட்களில் நாம் இறை வழிபாடு செய்வதன் மூலம் கிடைக்கக் கூடிய பலனை விட, இந்த மார்கழி மாதத்தில் இறை வழிபாடு செய்தால் அதிக பலனை பெற முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அதாவது சாதாரண நாட்களில் ஒருநாள் இறைவனை வழிபடும் போது அந்த நாள் வழிபட்ட பலனை மட்டும் தான் நம்மால் பெறமுடியும். அதுவே மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஒருநாள் இறைவனை வழிபாடு செய்தால், ஒரு வருடம் இறைவழிபாடு செய்த பலனை நமக்கு கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆக வரக்கூடிய மார்கழி மாதத்தில் யாரும் இறை வழிபாடு செய்வதை கூடுமானவரை ஒரு நாள் கூட தவற விடாதீங்க, 

மார்கழி மாதம் என்று சொன்னதுமே நம் நினைவிற்கு வருவது கோலம் தான். எக்காரணத்தைக் கொண்டும் மார்கழி மாதத்தில் இரவு நேரத்தில் கோலம் போடக்கூடாது. அதிகாலை எழுந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாசல் கூட்டி தண்ணீர் தெளித்து கோலம் போடுவது வீட்டுக்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. மார்கழி மாதம் என்றதுமே வாசலில் பெரிய கோலம் தான் போட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. உங்களுக்கு நேரம் இல்லை என்றால், சிறிய கோலம் போட்டாலும் அது நன்மை தரும். அந்த கோலத்தை, கோல மாவில் போடாமல் அரிசி மாவில் போட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

அடுத்தபடியாக மார்கழி மாதம் யாருமே விதை விதைக்க கூடாது. புதியதாக செடி நட கூடாது. ஏனென்றால் இந்த குளிர்காலத்தில் நாம் விதைத்த விதையோ செடியோ துளிர்த்து வளராது. அந்த செடி பட்டு போனால் அதுவும் ஒரு பாவம் தானே. இந்த மார்கழி மாதத்தில் யாரும் இந்த தவறையும் செய்யாதீர்கள்.

மார்கழி மாதத்தில் யாரும் சூரிய உதயத்திற்கு பிறகு கட்டாயமாக தூங்கக்கூடாது. அதாவது 6:00 மணிக்கு முன்பே எழுந்து குளித்துவிட்டு வீட்டிலிருந்தபடியோ அல்லது கோவிலுக்கு சென்றோ இறைவழிபாடு செய்ய வேண்டும். சரியாகச் சொன்னால் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து குளித்து வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகாலையில் கண் விழிக்க முடியாது என்று சொல்லுபவர்கள், 6 மணிக்கு முன் வீட்டில் தீபம் ஏற்றி பூஜை செய்திருக்க வேண்டும்.

முடிந்தால் வீட்டு அருகில் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் பஜனையில் கலந்து கொள்வது மிகவும் நல்லது. முடிந்தவரை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு சிறிய கோவிலுக்கு இந்த மார்கழி மாதத்தில் ஒரு நாள் அபிஷேகம் செய்து வைக்கலாம்.

மார்கழி மாதம் முழுவதும் நிலை வாசலில் கோலம் போட்ட பின்பு நிலை வாசல் படியில் தீபம் ஏற்றி வைப்பது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. நிலை வாசலில் தீபம் ஏற்றி விட்டு, அதன் பின்பு பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வீட்டிற்கு மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும். 

மேல் சொன்ன விஷயங்களை மார்கழி மாதத்தில் நம்பிக்கையோடு கடைப்பிடித்து வருபவர்களுக்கு நிச்சயமாக வளமான வாழ்வும், எதிர்காலமும் உண்டு.

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

❝ இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

❝ இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

❝ இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

❝ என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

❝ நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

❝ இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

❝ இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

❝ தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

❝ ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

❝ மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

❝ கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

❝ ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏
Donate Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚