Sri Mahavishnu Info: யாருக்கு கடவுள் தரிசனம் தருவார்? | Who Truly Deserves God’s Darshan? யாருக்கு கடவுள் தரிசனம் தருவார்? | Who Truly Deserves God’s Darshan?

யாருக்கு கடவுள் தரிசனம் தருவார்? | Who Truly Deserves God’s Darshan?

Sri Mahavishnu Info
கடமை உணர்வு சிறுமி
கடவுள் உங்கள் ஊருக்கு வரப்போகிறார். இந்த அசரீரி ஒலியைக்கேட்டதும், மக்கள் அனைவரும் செய்துகொண்டிருந்த வேலைகளையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு ஊர் எல்லைக்கு ஓடினார்கள். அனைவரும் வழிமேல் விழிவைத்து கடவுளுக்காகக் காத்திருந்தனர். ஒரே ஒரு வேலைக்காரச் சிறுமி மட்டும் எதைப்பற்றியும் கவலைப்படாமல், “தானுண்டு தன் வேலை உண்டு” என வீட்டு வேலையை கவனமாக பார்த்து கொண்டிருந்தாள்.

கொஞ்சநேரத்தில் காற்றைப் போல், கதிரொளியைப் போல், முதியவர் ஒருவர் உதித்தார் ஊருக்குள்! வெறிச்சோடிக் கிடந்த வீதிகளில் வலம் வந்தார். ஆளரவமற்ற வீடுகளைப் பார்த்துப் புன்னகைத்தார். மெல்ல நடந்தார். ஒரே ஒரு வீட்டுக்குள்ளிலிருந்து மட்டும் பாத்திரம் உருட்டும் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்தார் முதியவர். கடமை உணர்ச்சியுடன் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள் வேலைக்காரச் சிறுமி. சின்னப் பெண்ணை வாஞ்சையோடு அருகே அழைத்தார் முதியவர். அளவான ஆசையையும், அளவற்ற ஆசியையும் கொடுத்தார். ஊரார் வந்ததும், “நான் என் கடமையைச் செய்து கொண்டிருந்ததால், கடவுள் எனக்கு தரிசனம் தந்தார்” எனக் கூறினாள் அந்தச் சிறுமி.

யார் தங்கள் கடமையை உண்மையுடன் செய்கிறார்களோ, அவர்களுக்கு கடவுள் தரிசனம் தருவார்.
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்