Sri Mahavishnu Info: மகாபாரதம் | 7 துரோண பருவம் | பகுதி - 10 மகாபாரதம் | 7 துரோண பருவம் | பகுதி - 10
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

மகாபாரதம் | 7 துரோண பருவம் | பகுதி - 10

Sri Mahavishnu Info

மகாபாரதம் | 7 துரோண பருவம் | பகுதி - 10
அர்ஜுனனை பார்த்து சத்யாகி சிறிது நேரத்திற்கு முன்பு இவன் தன் பாதத்தை என் நெஞ்சின் மீது வைத்து என்னை அவமானப்படுத்தினார் நான் உயிர் பிழைத்தால் இவனை கொல்ல தீர்மானித்தேன். அத்தீர்மானத்தை இப்பொழுது நிறைவேற்றினேன் நான் செய்த செயல் சரி என்று எண்ணுகிறேன். உலகத்தவர் என் செயலை எப்படி வேண்டுமானாலும் கருதிக் கொள்ளட்டும் என்று கூறினான். இச்செயலில் அதிக நேரம் விவாதிக்க அர்ஜுனனுக்கு அவகாசம் இல்லை. சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு ஜயத்ரதன் கொல்லப்படவேண்டும் அச்செயலை முன்னிட்டு தீவிரமாக முன்னேறினான்.

மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பலரையும் வென்றவாறு அர்ஜூனன் போர்க்களம் எங்கும் ஜயத்ரதனை தேடினான். ஜயத்ரதனை கிடைக்கவில்லை. எவரும் அறியாத மலைக்குகை ஒன்றில் ஜயத்ரதனைத் தகுந்த பாதுகாப்போடு மறைத்து வைத்துவிட்டான் துரியோதனன். அர்ஜுனன் ஜயத்ரதனைத் தேடிக் காணாமல் நம்பிக்கையிழந்தான். துரியோதனன் தன் திட்டம் வென்றதாக கூறி ஆனந்தம் அடைந்தான். சூரியன் மேற்கு திசையில் தன் பயணத்தை முடித்துக்கொள்ள ஆயத்தமாய் இருந்தான். கௌரவ படைகள் வெற்றி அடைந்து விட்டதாக ஆர்பரித்தனர். திரும்பிய திசை எங்கும் கௌரவ படையின் வெற்றி முழக்கம். பாண்டவர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். கிருஷ்ணர் தன்னுடைய யோக சக்தியின் மூலம் சுதர்சன சக்கரத்தை கொண்டு சூரியனை மறைத்தார்

சூரியன் மறைந்து விட்டான். அர்ஜுனன் முயற்சி தோற்றது. பாண்டவர்கள் பதறினர். கிருஷ்ணரின் பாதங்களில் விழுந்து கதறினர். மனம் உடைந்தான் அர்ஜுனன். அபிமன்யுவை நினைத்து கண்ணீர் சிந்தினான். கண்ணன் மேல் தான் செய்த சபதத்தை நிறைவேற்ற ஆயத்தமானான். மௌனம் சாதித்தார் கிருஷ்ணர். அக்னி வளர்க்கப்பட்டது. எடுத்த சபதத்தின்படி அர்ஜுனன் அக்னிப் பிரவேசம் செய்யத் தயாரானான். அவன் அக்னியில் இறங்கி அழியப்போவதைக் காண ஜயத்ரதனும் ஆவலோடு மலை முகட்டின் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தாது கௌரவர்களின் கூட்டத்தில் ஒருவனாக நின்று கொண்டான் ஜயத்ரதன். பாண்டவர்கள் தன்னை அவமானப்படுத்தியதற்காக பழி தீர்த்து விட்டதாக எண்ணி பூரிப்படைந்தான். பாண்டவர்கள் வேதனையுடன் காணப்பட்டனர். ஆனால் எல்லாம் அறிந்த கிருஷ்ணரோ தன் லீலையை நிகழ்த்த காத்துகொண்டிருந்தார். அர்ஜுனன் அக்னியை வலம் வந்தான். கிருஷ்ணரின் பாதங்களை வணங்கினான். அப்போது கிருஷ்ணர் அர்ஜுனா காண்டீபத்தை உன் கையில் ஏந்தி தலைகளைக் கொய்து நினைத்த இடத்துக்கு கொண்டு போகும் வல்லமை வாய்ந்த அஸ்திரம் ஒன்றை நாணேற்றிய வண்ணம் அக்னியை வலம் வா என்றார்.

அர்ஜுனனும் கிருஷ்ணனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவ்வாறே செய்தான். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கிருஷ்ணர் தன் லீலையை ஆரம்பித்தார். சுதர்சனச் சக்கரம் சூரியனை விட்டு நகர்ந்தது இருளெனும் மாயை மறைந்து மேற்கு திசையில் வானம் சிவப்பொளியை வீசியது. கண்ணன் தன் சுதர்சனச் சக்கரத்தால் சூரியனை மறைத்து வைத்திருந்தான் என்பதை அனைவரும் புரிந்துகொண்டனர்.

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚