கஷ்டமா... ஆண்டவனிடம் மட்டும் சொல்லுங்க!
* நாம் பலவீனர்கள் ஆவோம்.

* நம் பலவீனம் மற்றவர்களுக்குத் தெரிந்தால் நமது பலத்தை இழப்பதுடன், அவர்களது அடக்குமுறைக்கும் ஆளாவோம்.

* நமக்கு கிடைக்கும் வருமானம், புகழ் ஆகியவற்றைக் கண்டு பிறர் மகிழ்வதை விட பொறாமையே கொள்வர். அவர்களின் பார்வை நம் வாழ்வில் பின்னடைவை ஏற்படுத்தும்.

* பிறரிடம் கருத்துப் பரிமாற்றம் செய்தால், நம் பிரச்னைகளின் தீவிரம் குறையும் என்பது சரியான கருத்தாக முடியாது. கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

* திருமணத்துக்கு முன்பு தாயிடம் கருத்து பரிமாற்றம் செய்யலாம்.

* இதையெல்லாம் விட நமது சோதனைகள், வேதனைகள், இன்பங்கள், நாம் பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் ஆண்டவனிடம் மனம் திறந்து சொல்லுங்கள். உங்களுக்கு மனஅமைதி உறுதியாகக் கிடைக்கும்.

* மனஅமைதி இல்லாத போது, நல்ல நூல்களைப் படியுங்கள். நம்பிக்கை தரும் நூல்களைப் படியுங்கள். ஆன்மிக சொற்பொழிவுகளுக்குச் சென்று, நல்லுரைகளைக் கேளுங்கள். மனம் ஆனந்தமடையும்.