Sri Mahavishnu Info: நஞ்சீயர் பெயர் வரக் காரணம் நஞ்சீயர் பெயர் வரக் காரணம்

நஞ்சீயர் பெயர் வரக் காரணம்

Sri Mahavishnu Info
நஞ்சீயர் பெயர் வரக் காரணம்

உத்ரம் - நஞ்சீயர்


நஞ்சீயர் என்கிற மஹான் பராசர பட்டரை ஆஸ்ரயித்தவர்!


இவர் பரம வேதாந்தி. அத்வைத சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்ட இவரை திருத்தி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு கொண்டு வர  நம்பெருமாள், பராசர பட்டரை திருநாராயணபுரத்திற்கு (நஞ்சீயரின் அவதார ஸ்தலம்) அனுப்பி வைத்தார்! 

பட்டர் திருநெடுந்தாண்டகத்தில் இருந்து பிரமாணங்களை எடுத்துச்  சொல்லி,  இவரை வைஷ்ணவத்திற்கு திருத்திப்பணி கொண்டார்!


பிறகு இவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் குடும்பத்தாருக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு மீதமுள்ள பொற்காசுகள், தங்க நகைகளுடன், சந்யாசம் வாங்கிக் கொண்டு  அரங்கனிடம் வந்து சேர்ந்தார்!


ஆனால் ஆசார்ய ஸ்தானத்தில் இருந்த பராசர  பட்டர் கிரஹஸ்தர். சந்யாச கோலத்தில் இருந்த நஞ்சீயர் இந்த தங்க காசுகள் அனைத்தையும் பட்டர் முன் சமர்ப்பித்தார்.


அவரது கோலத்தையும், அவர் கொண்டு வந்த பொருட்களையும் பார்த்து பட்டருக்கு நஞ்சீயர் மேல் கோபங்கொண்டு, இதை அனைத்தையும் கொண்டு போய் கொட்டு என்றார். உடனே அனைத்தையும் அம்மா மண்டபத் துறையில் வேலிக்கால் ஓரமாக கொட்டிவிட்டு வந்தார்.


சிறிது நாள் கழித்து அந்த வழியாக சிஷ்யர்களுடன் பட்டர் வந்து கொண்டிருந்தார். பளபளவென்று ஏதோ தெரியவே, சிஷ்யர்களிடம் விசாரித்தார். கூடவே வருகிற நஞ்சீயர் (அப்போது அவருக்கு வேதாந்தி என்று பெயர்), அடியேன் கொண்டு வந்ததை நீர் கொட்டு என்று சொன்னவுடன் நான் இங்கு வந்து அதை கொட்டிவிட்டேன். ஒரு மாதமாக அனந்தம் கொத்து பிராமணர்கள், பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் தொடுவார் இல்லாமல் அந்த பொற்காசுகள் அங்கேயே இருந்தன!


பட்டர், "எதற்காக இவைகளை என்னிடம் கொண்டு வந்தீர்?" என,  தேவரீரது ததியாராதனை கைங்கர்யத்துக்கு உபயோகமாகட்டுமே என்று கொண்டு வந்தேன் என்றார்.


பிறகு பட்டர் இவைகளைக் கொண்டு ஸ்ரீரங்கத்தில் நாலு, எட்டு வீதிகளில் எவ்வளவு வைஷ்ணவர்கள், பாகவதர்கள், கைங்கர்யபரர்கள் இருக்கிறார்களோ (பன்னீராயிரம் பேர் இருந்தனராம்) அவர்களுக்கு ததியாராதனை நடத்தி, மீதமுள்ள பொற்காசுகளைக் கொண்டு தோட்டம் அமைத்து, பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்யும் என்றார் பட்டர்!


கொட்டு என்று சொன்னவுடன்,  அவ்வளவு பொற்காசுகளும் குப்பையே  என்று கொட்டிவிட்டு தியாகம் பண்ணினதால், பட்டர் அவரை நம்சீயரோ என்று போற்றினார்! அதிலிருந்து அவருக்கு நஞ்சீயர் என்ற திருநாமம்!

Sri Andal Book

📘 தவப்புதல்வி ஸ்ரீ ஆண்டாள் பற்றிய
அறிய தகவல்கள்

🖋️ வெளியீட்டாளர்: Vanathi Pathippagam

📅 வெளியீட்டு தேதி: 1 ஜனவரி 2022

📚 பக்கங்கள்: 584

📖 மொழி: தமிழ்

🛍️ அமேசானில் வாங்குங்கள்
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்