
பக்தி செய்யாததற்கு காரணம் சொல்லாதே!
காரணம் சொல்லாதே, பக்தி செய்! பக்தி செய்யாமலிருக்க காரணம் சொல்லாதே!
உலகில் காரணம் சொன்னவர்கள் ஜெயித்ததில்லை!
நீ சொல்கின்ற காரணங்கள் பல பக்தர்களின் வாழ்விலும் இருந்தது. ஆனால் அவர்கள் அதையும் தாண்டி பக்தி செய்தார்கள். நீயும் அவர்களைப் போல முயற்சி செய்!
- தகப்பன் கொடுமைக்காரனா? ப்ரஹ்லாதன் போல் பக்தி செய்!
- தாயால் கெட்ட பெயரா? பரதன் போல் பக்தி செய்!
- அண்ணன் அவமதிக்கிறானா? தியாகராஜர் போல் பக்தி செய்!
- குடும்பத்தில் தரித்திரமா? குசேலர் போல் பக்தி செய்!
- மனைவி அடங்காதவளா? சந்த் துகாராம் போல் பக்தி செய்!
- கணவன் நாஸ்திகனா? மண்டோதரி போல் பக்தி செய்!
- உலகிற்கு நல்லது செய்தும் அவமரியாதையா ? பத்ராசல ராமதாசரைப் போல் பக்தி செய்!
- உடல் ஊனமுற்றவரா? கூர்மதாஸ் போல் பக்தி செய்!
- பிறவிக் குருடனா? சூர்தாஸ் போல் பக்தி செய்!
இன்னும் பல பக்தர்களின் வாழ்க்கை உனக்குச் சொல்வதுண்டு:
பக்தி செய்! அதுவே சமாதானம் தரும் ஒரே வழி!
இதுவரை காரணம் சொல்லி நீ தொலைத்த ஆனந்தம் போதாதா? இனிமேல் காரணம் சொல்லாதே!