Sri Mahavishnu Info: ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 19 ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 19
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 19

Sri Mahavishnu Info
ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 19
ராமரைப் பற்றிய தகவலை விபீஷணனின் மனைவியான சரமை சீதைக்கு எடுத்துச் சொன்னாள். ராமர் இலங்கைக்கு பெரும் வானர படையுடன் வந்திருக்கிறார். அவருடன் எனது கணவர் விபீஷணனும் சென்று சேர்ந்து விட்டார். வந்திருப்பவர்கள் யாராலும் எதிர்த்து வெற்றி பெற முடியாத வலிமையுள்ளவர்கள் என்று ராவணனுக்கு அவனது ஒற்றர்கள் தகவல் கொடுத்திருக்கிறார்கள். ஆகையால் நீ ராவணனால் விரைவில் ராமரிடம் ஒப்படைக்கப்படுவாய் இல்லையென்றால் ராவணனை ராமர் யுத்தத்தில் வெற்றி பெற்று உன்னை அழைத்துச் செல்வார் என்று சீதைக்கு தோழி போல் இருந்து அவளுக்கு ஆறுதல் கூறினாள் சரமை. இதை கேட்ட சீதை ராமரை விரைவில் பார்க்க போகிறோம் என்று பேரானந்தம் அடைந்தாள்.
ராமரை பற்றி தனக்கு தெரிந்ததை வைத்து அவரது குணத்தை அளந்தான் ராவணன். சீதை எப்படியாவது தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு விட்டால் ராமர் அவமானமடைந்து நம்மை எதிர்க்காமல் இங்கிருந்து சென்று விடுவார் யுத்தம் நடக்காது. நம்மை எதிர்த்து சென்ற விபீஷணனும் திரும்பி வந்து விடுவான். ராமர் ராவணனை எதிர்க்க தைரியம் இல்லாமல் திரும்பி சென்று விட்டார் என்று உலகம் முழுவதும் நம்முடைய புகழ் மேலும் பெருகும் என்று ஒரு திட்டம் திட்டினான் ராவணன். மாயக்கார ராட்சசனான வித்யுபுஜ்ஜிவனை வரவழைத்த ராவணன் அவனிடம் உனக்கு அனைத்து மாய வித்தைகளும் தெரியுமல்லவா நான் சொல்வது போல் நீ நடந்துகொள் என்றான். நான் சீதையிடம் சென்று ராமர் ராட்சசர்களால் கொல்லப்பட்டு விட்டார் என்று சொல்லுவேன் அந்த நேரம் நீ ராமரின் தலையைப் போலவே ஒரு உருவத்தை உனது மாயத்தால் செய்து அங்கு கொண்டு வந்து சீதையின் முன்பு வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டான். மாயக்கார ராட்சசனும் அதற்கு சம்மதம் தெரிவித்து அங்கிருந்து சென்றான். ராவணன் சீதையின் இருக்கும் அசோக வனத்திற்குள் நுழைந்தான். ராமர் வந்து விடுவார் என்ற மகிழ்ச்சியுடன் இருந்த சீதையிடம் தனது வஞ்சகமான ஏமாற்றும் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தான் ராவணன். இலங்கையின் கடலுக்கு எதிர்புறம் இருக்கும் கடற்கரையில் ராமரும் அவரது வானர படைகளும் களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது எனது ராட்சச படை வீரர்கள் கடல் தாண்டி சென்று ராமர் உட்பட பலரைக் கொன்று விட்டார்கள். தலைமை இல்லாத வானர படைகள் சிதறி ஓடி விட்டார்கள். இனி மேலும் ராமர் வந்து உன்னை அழைத்துச் செல்வார் என்று கற்பனையில் இருக்காதே. எனது சொல்லுக்கு கட்டுப்பட்டு இந்த இலங்கையின் தலைவியாகி சுகமாக மகிழ்ச்சியுடன் இரு என்று சொல்லி ஒர் ராட்சசசியை அழைத்தான் ராவணன். வெளியில் காத்திருக்கும் வித்யுபுஜ்ஜிவனை இங்கே அழைத்து வா என்று கட்டளையிட்டான்.

ராமர் இலங்கைக்குள் வந்து விட்டார் என்று நமக்கு தோழியான சரமை சொல்லி விட்டாள். ஆனால் ராமர் இலங்கைக்கு உள்ளே நுழைவதற்கு முன்பே கடற்கரையில் வைத்தே கொன்று விட்டோம் என்று ராவணன் சொல்லுகிறான். இதில் ஏதோ ஏமாற்றுத் தனம் இருக்கிறது என்பதை சீதை உணர்ந்தாள். ஆனாலும் ராமர் இறந்து விட்டார் என்ற செய்தி அவளின் உள்ளத்தை நிலை குழைய வைத்தது. ராமரை நினைத்து சீதை அழுது புலம்பினாள். அப்போது உள்ளே நுழைந்த மாயக்கார ராட்சசன் ராமரின் தலையைப் போலவே தனது மாயத்தினால் செய்த ராமரின் தலையை கொண்டு வந்து சீதையின் முன்பாக வைத்தான். அதனைப் பார்த்த சீதை மூர்ச்சை அடைந்து மயக்கமடைந்து விழுந்தாள். அதே நேரம் ராமர் கோட்டையை நெருங்கி விட்டார்கள் என்றும் உடனே அரசவைக்கு வந்து ஆலோசனை சொல்ல வேண்டும் என்று ராவணனுக்கு தகவல் வந்தது. உடனடியாக அங்கிருந்து கிளம்பி அரண்மணைக்கு சென்றுவிட்டான் ராவணன். சீதை மயக்கமடைந்து விட்டாள் என்ற செய்தியை கேட்ட விபீஷணனின் மனைவி சரமை உடனே அங்கு வந்து சீதைக்கு மயக்கத்தை தெளிய வைத்து ராவணனின் ஏமாற்றுத் தனத்தை விளக்கமாக எடுத்துச் சொல்லி ஆறுதல் கூறினாள். இந்த ராமரின் தலை மாயத்தால் செய்யப்பட்டது அருகே சென்று பார் என்றாள். சீதை ராமரின் தலைக்கு அருகே சென்றதும் அந்த தலை தானாகவே புகை போல் காற்றில் கரைந்து விட்டது.
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்