Sri Mahavishnu Info: கருடனை கருடாழ்வார் என்று போற்ற காரணம் கருடனை கருடாழ்வார் என்று போற்ற காரணம்

கருடனை கருடாழ்வார் என்று போற்ற காரணம்

Sri Mahavishnu Info
கருடாழ்வார்

இறைவன் மீது மாறாத பக்தி கொண்டு, இறைவனின் சேவையே பெரிது என்று முழுமையாகச் சரணடைந்ததால், கருடனை ‘கருடாழ்வார்’ என்று போற்றுகிறார்கள்.

கருடனுக்குக் ‘கருடாழ்வார்’ என்ற பெயரும் உண்டு. கிருதயுகத்தில் அகோபிலத்தைக் கொடுங்கோலனாக ஆட்சி செய்து கொண்டிருந்தான், இரண்யகசிபு. அவனை அழித்துத் தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்ற விஷ்ணு எடுத்த மனிதன் மற்றும் சிங்க உருவிலான அவதாரமே நரசிம்மர் தோற்றமாகும்.

பிரகலாதனைக் காக்க இறைவன் நரசிம்ம மூர்த்தியாக, இரண்யகசிபுவின் அரண்மணைத் தூணில் இருந்து வெளிவந்தார். அதனால் நரசிம்மர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்துத் தனியாக வரவேண்டியதாயிற்று.

இது பற்றி அறிந்த கருடன் மிகவும் துயரமடைந்து, இறைவனிடம் தனக்கு நரசிம்மத் தோற்றக் காட்சியைக் காட்டி அருளும்படி வேண்டினார்.

இறைவன் கருடனை அகோபிலம் சென்று தவமியற்றும்படி கூறினார். அதன்படி கருடனும் அகோபிலம் சென்று தவமியற்ற, இறைவன் அங்கிருந்த மலைக்குகையில், உக்ர நரசிம்மராய் அவருக்குக் காட்சியளித்தார்.

இறைவன் மீது மாறாத பக்தி கொண்டு, இறைவனின் சேவையே பெரிது என்று அவரிடம் முழுமையாகச் சரணடைந்ததால், கருடனை ‘கருடாழ்வார்’ என்று போற்றுகிறார்கள்.

🌿 பக்தி வழியில் பயணிக்க தொடர்ந்து வாசியுங்கள் – Sri Mahavishnu Info
Shanku Chakra Namah Sticker

Shanku Chakra Namah Mirror Sticker

For Wall Decor – Hall, Bedroom, Kitchen
Golden Finish | Acrylic | Pack of 1

⭐⭐⭐⭐☆ (4.4/5 based on 51 ratings)
🛒 Order on Amazon
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்