.jpg)
திருமழிசை அண்ணாவப்பங்கார் வைபவம்
திருநக்ஷத்ரம் : ஆனி அவிட்டம்
அவதார ஸ்தலம் : திருமழிசை
ஆசார்யன் : திருதகப்பனார் நரஸிம்ஹாசார்யர்
மஹீஸார க்ஷேத்ரம் என ப்ரசித்தி பெற்ற திருமழிசையில் பிறந்த இவர்க்குத் திருத் தகப்பனார் வீர ராகவன் எனப் பெயரிட்டார். முதலியாண்டானின் வாதூல குலத்தில் திருவவதரித்தார்...
இளமையிலேயே மிக்க அறிவாளியாய் திகழ்ந்த இவர், 15 ப்ராயத்துக்குள் தம் யஜுஸ் சாகை முழுதும் கற்றார்... ஸம்ப்ரதாய ஸ்ரீகோசங்கள் எழுதலானார்.
51 ஆண்டுகளே எழுந்தருளியிருந்த இந்த ஸ்வாமி அச்சிறிய வயதுக்குள் பலரை வாதங்களில் வென்றார்... பரமபதித்தார்.
📚 முக்கிய க்ரந்தங்கள்:
- ஸ்ரீ பக்தி ஸாரோதயம்
- வேதவல்லி சதகம்
- ஹேமலதாஷ்டகம்
- அபீஷ்ட தண்டகம்
- ...மற்றும் பல.
🔖 இவரது தனியன்:
ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம் |
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம் ||
இவ்வாறு தமது அளப்பரிய ஞான வைபவத்தால் ஸம்ப்ரதாயப் பெரும்பணியாற்றிய அண்ணாவப்பங்கார் ஸ்வாமியின் வைபவம் சிறிதே அனுபவித்தோம். நாமும் இவரின் திருவடிகளில் பணிந்து, பகவத் விஷயத்தில் சிறிது ஞானத்தைப் ப்ரார்த்திப்போம்.