உணவில் விஷம் வைப்பவர், மிருகங்களைக் கொன்று உண்பவர்களுக்கு `கும்பிபாகம்.’ இங்கு எண்ணெய்க் கொப்பரையில் ஆன்மாக்கள் வாட்டி எடுக்கப்படும்.
குடும்பத்தைக் கெடுப்பவர், உறவுகளைப் பிரிப்பவர் செல்லும் இடம் `மகா ரௌரவம்.’ இங்கு கண்ணுக்குத் தெரியாத மாய வடிவங்கள் இம்சிக்கும். குழந்தைகளை, முதியவர்களை, நோயுற்றவர்களை, அபலைகளை இம்சிக்கும் எல்லோரும் செல்லுமிடம் `ரௌரவம்.’ இங்கு கிங்கரர்கள் சூலத்தால் குத்தி இம்சிப்பார்கள்.
தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஏமாற்றி வாழ்வது, கொலை செய்வது எல்லாம் கொடிய செயல். இவர்களுக்கு உருவானதே `அநித்தாமிஸ்ரம்.’ இங்கு கொடிய இருளில் சிக்கி பயந்தே கிடப்பார்கள்.
நம்பியவர்களை ஏமாற்றுபவர்கள், செய்நன்றி மறப்பவர்கள், பிறர் மனைவியைக் கவர்பவர்கள் எல்லோருக்கும் `தாமிஸிரம்’ என்ற நரகம் கிட்டும். இங்கு கிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளால் அடித்துத் தண்டிப்பார்கள் என்கிறது கருட புராணம்.
இப்படிப் பாவங்களுக்கேற்றவாறு அமையும் நரகத்தில் வீழாமல் இருக்க, பெரியோர்கள் வகுத்த பாதையின்படி, தர்ம வாழ்க்கையை வாழ்ந்து இறைவனுக்குப் பிரியமானவராக இருப்போம். நலமே பெறுவோம்!