Sri Mahavishnu Info: நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம்
```
📿 வைணவ அடிப்படைகள் • 🛕 108 திவ்யதேசங்கள் • 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் • 🎧 தினசரி ஸ்லோகங்கள் • 📅 இன்றைய வைபவம் • 🙏 தினசரி பக்தி வழிகாட்டி • ❓ பக்தி கேள்வி & பதில்கள் • 📖 ஆன்மீக நூல்கள் • 🧒 குழந்தைகள் பக்தி பகுதி • 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை • 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் • 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் • 🌺 திருப்பாவை • 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் • 🛕 திருத்தல தரிசனம் • 🔔 கோவில் விழாக்கள் • 📜 பக்தர் அனுபவங்கள் • ✨ அற்புத நிகழ்வுகள் • 🕉️ நாமஸ்மரணையின் மகிமை • 📚 பக்தி குறிப்புகள் • 🌸 ஆழ்வார்கள் வரலாறு • 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் • 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ • 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி • 🌟 புதிய பக்தி பதிவுகள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம்

Sri Mahavishnu Info
நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பது வைணவ சமயக் கடவுளான திருமாலினை துதித்துப் போற்றிய பாடல்களைக் கொண்ட நூல் ஆகும்.

இந்நூலில் சுமார் நான்காயிரம் பாடல்கள் உள்ளன. திருமாலின் அடியவர்களாகிய பன்னிரு ஆழ்வார்களால் இந்நூலில் உள்ள பாடல்கள் பாடப்பட்டுள்ளன.

நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பதில் திவ்யம் என்ற சொல்லானது இனிமை மற்றும் மேலான என்பதைக் குறிக்கும். பிரபந்தம் என்பது பாடல்களின் தொகுப்பாகும்.

மேலான கருத்துகள் மற்றும் இனிமையான சொற்களால் திருமாலினைப் பற்றி பாடப்பட்ட நான்காயிரம் பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்ய பிரபந்தம் என்றழைக்கப்படுகிறது.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பாடல்கள் திருமாலின் சிறப்புகள் மற்றும் அவருடைய அவதாரங்களின் பெருமைகளையும் எடுத்து இயம்புகின்றன. இப்பாடல்கள் பெரும்பாலும் 108 திவ்ய தேசங்களில் பாடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் வரலாறு

கிபி 6 முதல் கிபி 9-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைப் போற்றி பாடல்கள் பலவற்றைப் பாடி வழிபட்டனர். அப்பாடல்களை 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமால் அடியவரான நாதமுனிகள் ‘ஆழ்வார்கள் அருளிய செயல்கள்’ என்ற பெயரில் தொகுத்தார். ஆழ்வார்கள் அருளிய செயல்கள் நூலில் உள்ள பாசுரங்களின் எண்ணிக்கை 3892 ஆகும்.

நாதமுனிகள் ஆழ்வார்கள் அருளிய செயல்களை முதலாயிரம், திருமொழி, திருவாய்மொழி, இயற்பா என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தினார். பின்னர் வந்த மணவாளமுனிகள் என்னும் திருமால் அடியார் திருவரங்கத்து அமுதனார் பாடிய இராமானுசர் நூற்று அந்தாதியை, ஆழ்வார்கள் அருளிய செயல்கள் நூலுடன் சேர்த்து நாலாயிர திவ்ய பிரபந்தத்தை உருவாக்கினார்.

இராமானுசர் நூற்று அந்தாதி மொத்தம் 108 பாசுரங்களை உடையது. ஆழ்வார் அருளிய செயல்கள் நூலில் உள்ள பாசுரங்களும், இராமானுசர் நூற்று அந்தாதி நூலில் உள்ள பாசுரங்களும் சேர்த்து மொத்தம் 4000 பாசுரங்களை நாலாயிர திவ்ய பிரபந்தம் கொண்டுள்ளது.

இந்நூலானது திராவிட வேதம், திராவிட பிரபந்தம், ஐந்தாவது வேதம், ஆன்ற தமிழ்மறை என்றெல்லாம் சிறப்பாக அழைக்கப்படுகிறது. இன்றைக்கும் வைணவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் இப்பாடல்களைப் போற்றிப் பாடி வழிபாடு செய்கின்றனர்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பாடல்களில் பெரும்பாலானவை பண்ணுடன் பாடக்கூடிய இசைப்பாடல்கள் ஆகும். நாலாயிர திவ்ய பிரபந்தங்களின் வகைகள் இந்நூலானது மொத்தம் 24 பிரபந்தங்களைக் கொண்டுள்ளது. அவை

1.திருப்பல்லாண்டு
2.பெரியாழ்வார் திருமொழி
3.திருப்பாவை
4.நாச்சியார் திருமொழி
5.பெருமாள் திருமொழி
6.திருசந்தவிருத்தம்
7.திருமாலை
8.திருப்பள்ளி எழுச்சி
9.அமலனாதிபிரான்
10.கண்ணிநுண்சிறுத்தாம்பு
11.பெரிய திருமொழி
12.திருகுறுந்தாண்டகம்
13.திருநெடுந்தாண்டகம்
14.முதல் திருவந்தாதி
15. இரண்டாம் திருவந்தாதி
16. மூன்றாம் திருவந்தாதி
17.நான்முகன் திருவந்தாதி
18.திருவிருத்தம்
19.திருவாசிரியம்
20.பெரிய திருவந்தாதி
21.திருஎழுகூற்றிருக்கை
22.சிறிய திருமடல்
23.பெரிய திருமடல்
24. இராமானுசர் நூற்றந்தாதி

முதலாயிரம் பாடல்கள்

பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு (12), திருமொழி (461)
ஆண்டாள் – திருப்பாவை (30), நாச்சியார் திருமொழி (143)
குலசேகர ஆழ்வார் – பெருமாள் திருமொழி (105)
திருமழிசை ஆழ்வார் – திருசந்தவிருத்தம் (120)
தொண்டரடிப்பொடி ஆழ்வார் – திருமாலை (45), திருப்பள்ளி எழுச்சி(10)
திருப்பாணன் ஆழ்வார் – அமலனாதிபிரான்(10)
மதுரகவி ஆழ்வார் – கண்ணிநுண்சிறுத்தாம்பு (11)

இரண்டாவது ஆயிரம் பாடல்கள்

திருமங்கை ஆழ்வார் – பெரிய திருமொழி (1084),
திருகுறுந்தாண்டகம்(20), திருநெடுந்தாண்டகம் (30)

மூன்றாவது ஆயிரம் பாடல்கள்

பொய்கை ஆழ்வார் – முதல் திருவந்தாதி (100)
பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி (100)
பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி (100)
திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி (96)
நம்மாழ்வார் – திருவிருத்தம் (100), திருவாஞ்சியம் (7), பெரிய திருவந்தாதி (87)
திருமங்கை ஆழ்வார் – திருஎழுக்கூற்றிருக்கை (1), சிறிய திருமடல் (40), பெரிய திருமடல் (78)
திருவரங்கத்தமுதனார் – இராமானுச நூற்று அந்தாதி (108)

நான்காவது ஆயிரம் பாடல்கள்

நம்மாழ்வார் – திருவாய்மொழி (1102)

ஆழ்வார்களில் அதிக பாசுரங்களைப் பாடியவர் நம்மாழ்வார் ஆவார். இவர் 1296 பாசுரங்களைப் பாடியுள்ளார். திருமங்கை ஆழ்வார் நம்மாழ்வாருக்கு அடுத்தபடியாக அதிக பாசுரங்களைப் பாடியுள்ளார். நம்மாழ்வார் இயற்றிய திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியவை ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களுக்கு இணையாகப் போற்றப்படுகின்றன. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பாடல்கள் இனிமையாகவும், எளிதில் பொருள் கொள்ளும்படியும் இக்காலத்திற்கும் பொருந்துமாறு இருப்பது ஆச்சர்யத்தக்க ஒன்றாகும்.

நாமும் ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தைப் போற்றிப் பாடி இறைவனை வழிபட்டு நல்வாழ்வு வாழ்வோம்

📚 ஆன்மிக PDF தொகுப்பு

🙏 “தெய்வத்தின் குரல்” முழு தொகுப்பு, காஞ்சி மகாபெரியவா அருள்மொழிகள், ஆன்மிக சிந்தனைகள் (14 PDF புத்தகங்கள்) மற்றும் அரிய PDF நூல்கள். (போனஸ் 10 PDF)

📥 Instant Download
♾️ Lifetime Access
🎁 Bonus PDF Included
💰 சிறப்பு சலுகை
₹199
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

❝ இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

❝ இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

❝ இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

❝ என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

❝ நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

❝ இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

❝ இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

❝ தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

❝ ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

❝ மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

❝ கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

❝ ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏
Donate Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚